திண்ணை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
00:00

'சாமி நாயக்கர் வரலாறு' எனும் நுாலிலிருந்து: இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம், சென்னையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்தவர் - ராபர்ட் கிளைவ்.
சென்னையில், 1723ல், முதல், மாநகர தலைமை நீதிமன்றம் - 'மேயர் கோர்ட்' என்ற பெயரில் இருந்ததை தான், செப்., 4, 1801ல், ஒரு தலைமை நீதிபதி மற்றும் இரண்டு துணை நீதிபதிகளுடன், உச்சநீதிமன்றமாக ஆக்கினார், கிளைவ்.
'மேயர் கோர்ட்'டில், மாநகர தலைமை - மேயர் மற்றும் 10 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள், சிவப்பு அங்கியை அணிந்து, குற்றவியல் வழக்குகளை விசாரித்தனர்.
இதுவே பின்னாளில், உச்சநீதிமன்றமாக வளர்ச்சி அடைந்து, பின், சென்னை உயர்நீதிமன்றமானது. இப்போது உள்ள, சென்னை உயர்நீதிமன்றம், 1892ல், இந்திய - இஸ்லாமிய கட்டட கலையை பின்பற்றி கட்டப்பட்டது!

'படிக்காத மேதை காமராஜர்' எனும் நுாலிலிருந்து
:முதல்வர் ஆன பிறகும் கூட, தாயார் சிவகாமியம்மாளை, விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார், காமராஜர்.
ஒருமுறை அவரை பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், விருதுநகருக்கு சென்றிருந்தார். அவரிடம், சிவகாமியம்மாள் மிகவும் வருத்தப்பட்டு, 'என்னை எதுக்காக இங்கேயே விட்டு வைச்சிருக்கான்னே தெரியலே... என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுகிட்டா, நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்...' என்று சொன்னார்.
இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பின், காமராஜரிடம் கூறினார், அந்த பிரமுகர். அதற்கு, காமராஜர் சொன்ன பதில்:
அம்மாவை, நான் இங்கே கூட்டிட்டு வராததற்கு காரணம் இருக்கு... அப்படியே அவங்க இங்கே வந்தாலும், அவங்க மட்டும் தனியாவா வருவாங்க... அவங்க கூட, நாலு பேரு வருவான்... அப்புறம் அம்மாவை பார்க்க, ஆத்தாவை பார்க்கணும்ன்னு, 10 பேர் வருவான், இங்கேயே, 'டேரா' போடுவான்...
இங்கே இருக்கிற தொலைபேசியை உபயோகப்படுத்துவான்... 'முதல்வர் வீட்டிலேர்ந்து பேசறேன்'ன்னு சொல்லி, அதிகாரிகளை மிரட்டுவான்... எதுக்கு வம்புன்னு தான், அவங்களை, விருதுநகரிலேயே விட்டு வைச்சிருக்கேன், என்றார்.

ப.சிவனடி எழுதிய, 'இந்திய சரித்திர களஞ்சியம்' எனும் நுாலிலிருந்து: ராமேஸ்வரத்தில் உள்ள ராமலிங்க சுவாமியை வழிபடுவதற்கு, பாரத தேசமெங்கிலும் இருந்து வருகிற பக்தர்களை பாதுகாக்கும் பொறுப்பை, சேதுபதி மன்னர்கள் ஏற்றனர்.
பயணியரை, திருடர்கள் துன்புறுத்தாமல் காத்து நின்றதுடன், அவர்களின் யாத்திரை எளிதாக நிறைவேறவும், துணை நின்றனர், சேதுபதிகள். அக்காலத்தில், சேது சீமையை ஆண்டு வந்த, திருவுடையார் தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதிக்கு, இரண்டு பெண்கள் இருந்தனர்.
அவர்கள் இருவரையும் மணந்த மருமகனை, பாம்பனில் ஆளுனராக நியமித்தார், சேதுபதி. மருமகனோ, ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரிகர்களிடம், வரி என்ற பெயரில் பணம் பிடுங்கினார். விஷயம், சேதுபதிக்கு எட்டியது. மருமகன் என்றும் பாராமல், அவருக்கு, மரண தண்டனை விதித்தார். அவருடைய மனைவியரான, சேதுபதியின் புதல்விகளான இருவரும், கணவருடன் உடன்கட்டை ஏறினர்.
இப்பெண்களின் நினைவாக, இரண்டு சத்திரங்களை கட்டினார், சேதுபதி. அதையொட்டி இரண்டு ஊர்கள் உருவாயின. அவையே, அக்கா மடம், தங்கச்சி மடம் என்று, இன்றும் அழைக்கப்படுகிறது.

நடுத்தெரு நாராயணன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201916:09:00 IST Report Abuse
pattikkaattaan சென்ற வருடம் விடுமுறைக்கு தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது நீலகிரி மலைப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகள் மட்டும் மின் உற்பத்தி நிலையங்கள் சிலவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது .. மிக அற்புதம் .. பிரமாதம் .. அத்தனையும் கட்டப்பட்டது காமராசர் முதலமைச்சர் மற்றும் நேரு பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் .. இன்னும் சிறிய விரிசலோ ,தண்ணீர் கசிவோ இன்றி முழு கொள்ளளவு நீரை கடல்போல் தேக்கி வைத்திருக்கின்றன .. நீர் மின் நிலையங்கள் முழு வீச்சில் இயங்கி 24 மணி நேரமும் மின் உற்பத்தி செய்கின்றன .. எப்படி அந்த மலைகளில் அவற்றை நிர்மாணம் செய்தார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது .. குந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டால் அறிய புகைப்படங்கள் வழியாக எவ்வாறு வேலை நடைபெற்றது என்றும் , நேரு மற்றும் காமராஜர் அந்த பகுதிகளுக்கு நேரடியாக வந்து பார்வையிட்டதையும் தெரிந்துகொள்ளலாம் .. நாடு முன்னேற காங்கிரஸ் என்ன செய்தது என்பதற்கு அது ஒரு சிறிய உதாரணம் .. இப்போது உள்ள அரசியல்வாதிகள் யாரும் அவ்வாறு இல்லை (காங்கிரஸ் உட்பட).. இப்போது கட்டப்படும் பாலங்கள் ஒரு மழைக்குக்கூட தாங்குவதில்லை...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-பிப்-201917:44:21 IST Report Abuse
Natarajan Ramanathan we are a developing nation. Now our PM cannot wear loin clothe while visiting foreign countries and receiving dignitaries. Observe how KALAMJI DRESSED in OFFICE. an employee in Kuwait..... can wear dhoti are any other dress there?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-பிப்-201912:51:14 IST Report Abuse
Natarajan Ramanathan Take some time to read the unbelievable👇😱😱😱: Given below are some names today and I will also enter their status in front of those names. Take a look at this list first: 1) Sombhai (75 years) Retired Health Officer, Lives in an Ashram 2) Amritbhai (72 years) Worker in the Private Factory, Retired 3) Prahalad (64 years) ration shop owner 4) Pankaj (58 years) working in the Information Department 5) Bhogilal (67 years) small grocery store owner 6) Arvind (64 years): The working of the junk/scrap market 7) Bharat (55 years) Attant on petrol pump 8) Ashok (51 years) owns Kite and grocery shop 9) Chandrakant (48 years) servant in a Gaushala 10) Ramesh (64 years) No information 11) Bhargava (44 years) No information 12) Bipin(42 years) No information Four of the above are own brother's of Prime Minister Modi. From No. 5 to 9, sons of Modi's uncle Narasimhadas Modi. So they are the Prime Minister's immediate cousins. Ramesh, son of Jagjivandas Modi ( Uncle of PM Modi) at number 10. And at number 11. Bhargava, son of Kantilal.(uncle of PM) and the last one is Bipin, the youngest son of Lal Modi. ( Last uncle of PM) My request to the great investigative revolutionary journalists of print/electronic media. who once used to pray for the purification of politics by showing a blue wagon 'R' car day by day. I request them to take a camera to the people listed in the above mentioned list. Just go to Gujarat, show us the story of Ashok, who has been selling the Kabaadi (scrap dealer) and the Ashok who sells Kite. Brothers of Prime Minister's Narra Modi selling a junk and another brother kite and manza, going to Lalwada Petrol Pump at Vadnagar, you will definitely take a byte with your attant atting a taxi, oiling Ashok Bhai. Everyone will see how Modi's brother is filling the oil in your car. If you get an opportunity, then buy another old canister of Tin from another brother of Modi, Arvind ji. And yes, Modi's sister-in-law will meet you at a food stall in the Ganga Kanta market in Wadenagar. After buying from Sister-in-law, nothing will be taken for us. In a time when a small time politicians enmass wealth that will be more than for 4-5 generations using their political clout. But this PM Modi inspite of being CM of a richest state for >13 yrs and PM for 4 yrs thriving hard selflessly for the betterment of the country. Still being blamed like anything and everything by vested interests. If this PM can't take our country forward than who can??? You decide if this should be shared by all. Also on all social media. Rebut me if I am wrong with the facts. Best wishes my country men. 🙏🙏🙏🙏
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X