அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
தென் மாவட்டத்தை சேர்ந்தவள். வயது, 29, படிப்பு, எம்.காம்., சென்னையில் வேலை கிடைக்கவே, மகளிர் விடுதியில் தங்கியுள்ளேன். பெற்றோர், சொந்த ஊரில் உள்ளனர். நான் ஒரே பெண். பார்க்க சுமாராக தான் இருப்பேன்; நிறமும் குறைவு. எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர், என் பெற்றோர்.
வரும் வரன்கள் அனைத்துமே, என்னை விட குறைவாக படித்தவர், கறுப்பானவர், பெட்டிக் கடை வைத்திருப்பவர், 'கூரியர்' அலுவலகத்தில் பணிபுரிபவர், பல்பொருள் அங்காடியில், 'சூப்பரவைசராக' இருப்பவராகவே வந்தன. இதில், யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லி வற்புறுத்தினர்.
'எம்.காம்., படித்து, நல்ல வேலையில் இருக்கும் எனக்கு, இப்படிப்பட்டோரை திருமணம் பண்ணிக்க சொல்றீங்களே...' என்று சண்டை போட்டேன்.
'உன் மொகரைக்கு இவன்கள் கிடைக்கிறதே பெரிய விஷயம்; ஏழு கழுதை வயசாச்சு...' என்று பெற்றோரே சொல்ல, நொந்து போனேன்.
மேற்கூறிய வரன்களை இளக்காரமாகவோ, தாழ்வானவராகவோ நினைக்கவில்லை. அதற்காக, சற்றும் பொருந்தாத, என் மனதுக்கு ஒத்து வராத வரனை, எப்படி ஏற்க முடியும்.
மனக்கசப்போடு ஒருவனை கைப்பிடிப்பதை விட, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
என் முடிவு சரிதானா... தகுந்த ஆலோசனை தாருங்கள் அம்மா.
இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு —
முதுகலை பட்ட படிப்போ, இளங்கலை பட்டப் படிப்போ முடித்து, அரசு வேலை கிடைக்காமல், பெட்டிக்கடை வைத்து, தினம், 2,000 ரூபாய் லாபம் சம்பாதிக்கும் இளைஞர்களை சந்தித்திருக்கிறேன்.
நன்கு பரிச்சயமான பெண்ணின் மகன், பெட்டிக்கடை வைத்திருக்கிறார். நல்ல வருமானம், சொந்தமாக கார் வைத்துள்ளார். தரைதளம், 1,200 சதுரடி, முதல்தளம், 1,200 சதுரடியுடன் கூடிய சொந்த வீடு கட்டியுள்ளார். தாய்க்கு, கழுத்திலும், கையிலும் நகை வாங்கி போட்டு, அழகு பார்க்கிறார்.
'கூரியர்' அலுவலகத்தில் பணிபுரிவோரும், பல்பொருள் அங்காடியில், 'சூப்பரவைசராக' பணிபுரிவோரும், இழிவான வரன்கள் அல்ல. முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் கூடிய தொடர் உழைப்பு இருந்தால், யாரும் வெற்றிக்கொடி நாட்டலாம்.
திருமண வயதை தாண்டி சென்று கொண்டிருக்கிறாய். வயது, 29 ஆகிறது. 'முதுகலை வணிகவியல் படித்த உனக்கு, வேறு முதுகலை பட்டம் பெற்ற மாப்பிள்ளை தான் பொருத்தமாய் இருப்பார்...' என்ற வாதம் சரியானதல்ல.
புற அழகை, படிப்பை, வருமானத்தை வைத்து, வரனை முடிவு பண்ணாதே. திருமண வாழ்க்கை என்பது, இரட்டை மாட்டு வண்டி போன்றது.
தகுந்த வயதில் திருமணம் செய்து கொள்ளாமல், 40 வயதை நெருங்கி விட்டால், தனிமையில் வாடுவாய்; ரயிலை தவற விட்ட பயணி போல் பரிதவிப்பாய். 'கூட்டம் இல்லாத டவுன் பஸ்சில் ஏறுவோம்...' என, டவுன் பஸ்களை தவற விட்டால், கடைசி பஸ்சும் போய், பேருந்து நிறுத்தத்தில் தனி மரமாய் நிற்பாய்.
'எனக்கு தகுந்த வரன் பார்க்க பெற்றோருக்கு தெரியவில்லை...' என, நீ தொடர்ந்து கூறினால், கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
பணிபுரியும் அலுவலகத்தில், உனக்கு பொருத்தமான வரன் இருந்தால், 'மீடியேட்டர்' மூலம் பேசு. மற்ற கிளை அலுவலகங்களில் தகுதியான வரன் இருக்கிறதா என, விசாரி.
தமிழகத்தில், நுாற்றுக்கணக்கான, 'மேட்ரிமோனியல்' அலுவலகங்கள் உள்ளன. அவைகளில் சிறப்பான ஒன்றை தேர்ந்தெடுத்து, உன், 'பயோடேட்டா' மற்றும் குடும்ப பின்னணி, என்னவிதமான மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறாய் என்ற விபரங்களை பட்டியலிடு.
மூன்று மாதத்தில், 50 - 60 வரன்களை காட்டுவர். உனக்கு பிடித்த வரனை தேர்ந்தெடு. அதை உன் பெற்றோரிடம் தெரிவி, மேற்கொண்டு பேச சொல்.
உன் சொந்த பந்தங்களில், அத்தை மகன், மாமன் மகன் யாராவது இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று, நல்ல வேலையில் இருந்தால், அவர்களை பரிசீலி.
'மேட்ரிமோனியல்' இல்லாது, சிறப்பான வரன்களை பார்த்துக் கொடுக்கும் மரபு சார்ந்த திருமண தரகர்கள் உள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு, நீயோ, பெற்றோரோ, தகுந்த வரன்களை கொண்டு வர செல்லலாம்.
திருமணம் என்றவுடன், யதார்த்தத்தை மீறிய கற்பனையில் மிதக்காதே; நிறைய எதிர்பார்க்காதே.
சினிமா படம் எடுப்பதற்கு தான் ஹீரோவை தேட வேண்டும். திருமணத்திற்கு, 'ஈகோ' இல்லாத சராசரி ஆண் போதும். சகிப்புத்தன்மையையும், வளைந்து கொடுக்கும் குணத்தையும், சுயநலமின்மையையும், ஆணுக்கும் - பெண்ணுக்கும் பரிசளிக்கும் ஏற்பாடே, திருமணம்.
சம்சார சாகரத்தில் அனைவரும் மூழ்கி களிப்போமாக!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.Balakrishnan - Chennai,இந்தியா
14-பிப்-201901:29:31 IST Report Abuse
M.Balakrishnan பெற்றோர் எண்ணங்களுக்கு மதிப்பளித்து நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள். எண்ணெய் சட்டியில் தப்பித்து அடுப்பில் விழுந்த கதையாகிவிடும் மீடியேட்டர் உதவி எல்லாம்.
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
12-பிப்-201915:47:18 IST Report Abuse
V.B.RAM பணிபுரியும் அலுவலகத்தில், உனக்கு பொருத்தமான வரன் இருந்தால், 'மீடியேட்டர்' மூலம் பேசு??? வேண்டாம் இந்த விபரீத சோதனை. மீடியேட்டருடன் சேர்த்து நாசம் பண்ணிவிடுவார்கள்.அப்பா அம்மா சொல்வது கசப்பாக இருந்தாலும் கேள்
Rate this:
Share this comment
Cancel
Prof. A.Venkateswaran. - Thanjavur,இந்தியா
12-பிப்-201908:34:42 IST Report Abuse
Prof. A.Venkateswaran. சகுந்தலா அம்மா கூறுவது ஒரு வழி. முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள். வேறொரு கோணத்தில் ஒரு கருத்து. "திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்." கண்டிப்பாக இது தவறான முடிவு அல்ல. ஆனால் நன்கு சிந்தித்து முடிவெடுக்கவும். திருமணமே வாழ்க்கையில்லை. திருமணம் செய்துகொள்ளாமல் சிறப்பாக வாழலாம். தற்போது இருக்கும் துறையில் உச்சபட்ச நிலையை அடையுங்கள் . நன்கு சேமியுங்கள் . பங்குச்சந்தையில் SIP முறையில் முதலீடு செய்யுங்கள் . இப்போதே துவங்கினால் ஒய்வு பெறும்போது கணிசமான தொகை கையில் இருக்கும் . M.Com., படித்திருக்கிறீர்கள் .உங்களால் முடியும் . முதுமையில், சேமிப்பைக் கொண்டு முதியோர் இல்லத்தில் காலத்தைக் கழிக்கலாம் . சமூக சேவை செய்யலாம் . பெற்றோருக்கு உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லி புரிய வையுங்கள் . அவர்களுடன் இனிமையாகப் பேசுங்கள் . கடிந்துகொள்ள வேண்டாம் . அவர்கள் இருக்கும் வரை அவர்களை பேணிப் பாதுகாக்கவும் . பின்னர் தனி வாழ்க்கை வாழுங்கள் ."நொந்து போனேன் " என்று எழுதியிருக்கிறீர்கள் . இந்த மன நிலையைக் கடந்து வாருங்கள் . உங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டுங்கள் . பெரு வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X