ஆரோக்கியமாக வாழ...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2019
00:00

ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை...

* காலையிலும், இரவு உணவுக்கு முன், கட்டாயம் மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது, மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்
* காலை, மாலை இருவேளை குளிக்கலாம். மழைக்காலங்களில், காலையில் குளித்தால் போதும்
* ஊற வைத்த வெந்தயத்தை, சிறுவர்கள் - ஒரு ஸ்பூன், பெரியவர்கள் - இரண்டு ஸ்பூன், வெறும் வயிற்றில் மென்று விழுங்க, சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் வராமல் கட்டுக்குள் இருக்கும்
* காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன், தோல் நீக்கிய இஞ்சித் துண்டை சாப்பிடலாம். இது, கொழுப்பை குறைக்கும், தொப்பையைக் கரைக்கும்
* உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ண வேண்டும்
* மைதா மாவில் செய்யப்பட்ட பரோட்டா, வாழ்நாளைக் குறைக்கும். குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்
* 'பிராய்லர்' கோழிக்கறி வேண்டாம். மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடலாம். மது, புகை கூடாது
* மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன், சுக்கு காபி சாப்பிடுவது நல்லது
* உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன், அடுத்த திட உணவு கூடாது
* பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லேட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் மற்றும் சோற்றுக்கற்றாழையை சுத்தம் செய்து, தேன் கலந்து தினமும் சாப்பிடலாம்
* 'பயோட்டின் - எச்' வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகம் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான் மற்றும் மோர் தினமும் எடுத்துக் கொள்வது நல்லது
* காலை அல்லது மாலை, ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
* இரவு, 11:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை, கட்டாயம் உறங்க வேண்டும்
* குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப் பிரியமா... வேர்க்கடலை, பேரீச்சம்பழத்தை தினமும், தின்பண்டங்களாக கொடுக்கலாம். கீரையை, வாரம் மூன்று முறை பருப்புக் கூட்டாகவும்; கேழ்வரகை, சேமியா, கொழுக்கட்டை மற்றும் ரொட்டியாக, வாரம் இருமுறை கொடுக்கலாம். ஆப்பிள், ஆரஞ்சை விட, பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம். தினமும் சாப்பிடக் கொடுக்கலாம்
* மனைவியின் ஆரோக்கியத்தின் மீது, அதிக அக்கறை கொண்டவரா... மண் சட்டியும், இரும்பு கடாயும், மரச்செக்கு எண்ணெய்யும் வாங்கிக் கொடுக்கலாம். தினமும், பேரீச்சம்பழம் சாப்பிடக் கட்டாயப்படுத்தலாம். கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து மற்றும் மண் பானை தண்ணீர் குடிக்க வலியுறுத்தலாம்
* கணவர் மீது அதிக அக்கறையுள்ள மனைவியா... 'பிரிஜ்'ஜில் வைத்த குழம்பு மற்றும் மாவு வகைகளை சாப்பிட கொடுக்க வேண்டாம். சோம்பு, சீரகத் தண்ணீர் குடிக்கக் கொடுக்கலாம்.
முன்னோர் பயன்படுத்திய உணவுப் பழக்கங்களை முடிந்த அளவிற்கு பயன்படுத்துவோம். இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும், 50 சதவீத ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நம் முன்னோர் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும்.
தொகுப்பு: ஜோ.ஜெயக்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
12-பிப்-201900:13:50 IST Report Abuse
Manian சில மாற்றங்கள்- காலையில் ஒரு பத்து நாள் தொடர்ந்து சிறிது தண்ணிர் குடித்து பின் மலம் கழிக்க சென்றால், அது பழக்கமாகிவிடும். வெளியில் மலம் கழிக்க வேண்டிய /செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. - தண்ணிர் பஞ்சம் இருக்கும் நேரம் காலையில் குளித்தால் போதும் - எவ்வளவு நேரம் உடல் பயிற்சி செய்கிறோம் என்பது முக்கியமில்லை- விடாமல் வாரத்திற்கு நான்கு நாளாவது உடல் பயிற்சி செய்வதே மேல் என்று கண்டுள்ளார்கள் - அது சுமார் பத்து -பதினைந்து நிமிஷமாகவும் இருக்கலாம். முடிந்தால், வழுக்காத தரை இருக்கும் குளியல் அறையில் சில பயிற்சிகளை குளியலோடு இணைந்து செய்யலாம். ஆனால் சுவர்களில் பிடிகள் இருந்தால் மட்டுமே செய்ய வேண்டும். இல்லாவிடடால் வழுக்கி விழுந்து, அடி படும். - கைக்குத்தல் அரிசி, பிரவுண் பாஸ்துமதி அரிசி சோற்றை உண்டால் அதில் வைட்டமின் ஈ, புரதம் அதிகம்.- உப்பு, இனிப்பை குறைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
11-பிப்-201917:07:20 IST Report Abuse
pattikkaattaan " இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்" குறள் விளக்கம் " குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பதுபோல , மிகப்பெரிதும் உண்பனிடத்தில் நோய் நிற்கும் "
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
10-பிப்-201911:51:16 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கூடியவரை வெளியே சாப்பிடாதீங்களேன் பீஸ்ச்சியர்ஸ்க்கு இயலாது உண்மை அதுலேயும் அவாளும் நல்ல மெஸ் காலிலே சுத்தமா சாப்பிடலாமே , 98% பீட்ஸா பர்கர் போன்ற மைதா உணவுகளை துன்னவேண்டாம் என்றைக்காவது விருந்து ஓகே திருமணவீடுகளிலே போடும் உணவுகள் கன்றாவியாக இருக்கே பெரியமனுஷாவீட்டு திருமணங்கள்லே ஐயோ ராமா என்று ஓடணும் அவ்ளோ ஐட்டம்ஸ் வந்துண்ண்டே இருக்குங்க வயறு டோட்டலா ரிப்பர் ஆயிட்டு படும் அவதி இருக்கே சொல்லமுடியாது . வீட்டுலே எப்போதும் நாம் எளிமையாகவே தான் துன்கிறோம் நாங்கள் பிராமின்ஸ் க்கு ஒரு சாம்பார் காய் வதக்கிப்போம் அல்லது கூட்டு ரசம் போதும் மேக்சிமம் பஜ்ஜிபோன்டா வடைகள் ஈவெண் பூரி என்றுபொறிச்சஉணவுக்கு பைபை சாம்பார் வச்சால் அதையேதான் இட்லி தோசைக்கும் தொட்டுப்போம் கெஸ்ட் வந்தால்தான் சட்னி அரைப்போம் காலைலே டிபன் கிடையாது காலை 11மணிக்கு நேராக லஞ்ச் முடிப்போம் மதியம் மூன்றுமணிக்கு காபி ஆர் தேநீர் மாலை 7மணிக்குள்ள இரவுக்கு எளிமையான உணவு வித் ரொட்டி ஓர் தோசை ஓர் உப்மா அவ்ளோதான் சுத்த சைவ உணவேதான் கூடியவரை வெங்காயம் பூண்டு கிடையாது எங்கள் பாணி உணவுதான் பெஸ்ட் , தினம் கீரை மசியல் உண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X