ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பதிப்பகப் பிரிவான ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டி பிரஸ், இந்திய மாணவர்களுக்காக ஆக்ஸ்ஃபோர்டு பிக் ரீட் (Oxford Big Read - OBR) எனும் வாசிப்பு போட்டியை நடத்த உள்ளது. ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டி, குழந்தைகளின் ஆங்கில வாசிப்புத் திறன், படைப்பூக்கம் போன்றவற்றை ஊக்குவிப்பதாக உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் அவர்களது வகுப்பாசிரியர் மற்றும் பள்ளியின் மூலமாகவே இப்போட்டிக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஒவ்வொரு வகுப்பு மாணவரும் அவரவர் படிக்கும் வகுப்புகளுக்கு உரிய பிரிவில் போட்டியிட வேண்டும்.
https://india.oup.com/bigread-register வலைத்தளத்தில் விண்ணப்பப் படிவம் உள்ளது.
போட்டிக்காக வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் ஆக்ஸ்ஃபோர்டு இணையதளத்தில் உள்ளது.
இப்போட்டி மாணவர்கள் படிக்கும் வகுப்பிற்கேற்ப பல்வேறு பிரிவுகளில் நடைபெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப போட்டியின் விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முக்கிய தேதிகள்
2018 நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய போட்டியில் பங்குபெற, விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 20, 2019. இந்திய அளவிலான முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: மார்ச் 30, 2019. ஆசிய அளவிலான முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: ஜூலை 31, 2019.
மேலும் விவரங்களுக்கு https://india.oup.com/oxfordbigread வலைத்தளத்தை பார்வையிடலாம்.