ரிசாகா ரசியா ஃபாத்திமா ரம்லி (Rizka Raisa Fatimah Ramli) எனும் இந்தோனேஷியச் சிறுமி, 'தேசங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் யுனிசெஃப் நடத்திய காமிக்ஸ் போட்டியில் வென்றுள்ளார். குழந்தைகள் மற்றும் இளைஞர்களை வன்முறையில் இருந்து காக்கும் ஓர் அதிநாயகன் கதாபாத்திரத்தை(சிப்டா) உருவாக்கியதற்காக ரம்லிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
சிப்டா எனும் இந்த அதிநாயகன், குழந்தைகளுக்கு ஒரு வரைபட நோட்டு வழங்குவார். அதில் வரையப்படும் படங்கள் உயிர்பெற்று, அக்குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகும்போது உதவிக்கு வரும். “இந்தோனேஷியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் குழந்தைகள் எதிர்கொள்ளும் வன்முறையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சிப்டா பாத்திரத்தை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் ரம்லி.