மூன்று அரசர்களின் அவைக்களப் புலவர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
00:00

ஒட்டக்கூத்தர், சோழர்களின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற புலவர். இவருக்குத் தனிச்சிறப்பு ஒன்று உண்டு. விக்ரம சிங்கன் காலத்தில் அவருடைய அவைக்களப் புலவராக இருந்தார். அவரின் புதல்வர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு ராஜகுருவாகப் பணியாற்றினார். குலோத்துங்கனின் மகன் இரண்டாம் இராசராசனுக்கு அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர்தான். இப்படி மூன்று சோழ அரசர்களின் அவையை அலங்கரித்த பெருமை இவருக்கு உண்டு.

அரசர்களின் சிறப்பு
ஒட்டக்கூத்தர் எழுதிய நூல்களில் ஒன்று 'மூவருலா'. மேற்சொன்ன மூன்று அரசர்களைப் பற்றித்தான் இந்த நூல் பேசுகிறது. அரசர்களின் கொடை, சிறப்பு, வீரம், பள்ளி எழுதல், நீராடல், பட்டத்து யானை மீது பவனி வருதல், உடன் வருவோர், பெண்களின் விளையாட்டு போன்றவை பற்றி மூவருலாவில் விவரிக்கப்பட்டுள்ளது. பாடலில் மகிழ்ந்த விக்ரம சிங்கன் ஒட்டக்கூத்தருக்கு யானைகளைப் பரிசாக வழங்கினார். ஆனால் யானைகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்? என்று கூறி மறுத்து விட்டார் ஒட்டக்கூத்தர்.
ஒட்டக்கூத்தர் இராசராசன் காலத்தில் முதுமை அடைந்திருந்தார். இராசராச சோழன் உலா எழுதி அரங்கேற்றியபோது, அவ்வரசன் ஒவ்வொரு கண்ணிக்கும் (செய்யுள் வகை) ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்கினார். விக்ரம சிங்கன் மீது 342 கண்ணிகளும், இரண்டாம் குலோத்துங்கன் மீது 387 கண்ணிகளும், இரண்டாம் இராசராசன் மீது 391 கண்ணிகளும் மூவருலாவில் பாடப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பெட்டகம்
விக்ரம சிங்கனின் பட்டத்துப் பெயர்களில் ஒன்று தியாகச்சமுத்திரம் என்பதும், அவரின் மனைவியர் முக்கோக்கிழான், தியாகப் பதாகை என்பதும் பாடல்கள் வழியே தெரிகிறது. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில், நாட்டில் போர்கள் ஓய்ந்து அமைதி நிலவியது. இவரின் தலைநகரம், கங்கைகொண்ட சோழபுரம். இரண்டாம் குலோத்துங்கனின் மனைவியர் புவனமுழுதடையாள் என்னும் தியாகவல்லி, முக்கோக்கிழான். விக்ரம சிங்கனின் மீது 'பிள்ளைத் தமிழ்' என்னும் மற்றொரு பிரபந்தத்தையும் ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார்.
இரண்டாம் இராசராசன், தில்லை நடராசர் கோயிலுக்கு பொன்வேய்ந்து திருப்பணி செய்துள்ளார். இருவருக்கு சோழேந்திர சிம்மன், வரோதயன், இராஜகம்பீரன் போன்ற பட்டப் பெயர்கள் இருந்தன.
இவருக்கு புவனமுழுதுடையாள், தரணி முழுதுடையாள் என ஐந்து மனைவியர் இருந்ததும், மூவருலாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிப்பூம்பட்டினம் இரண்டாம் இராசராசனின் தலைநகர். இவர், தமிழ் மீது பெரும் பற்றுக் கொண்டவர் என்கிறது ஒட்டக்கூத்தரின் மூவருலா.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X