புதியதைக் கற்கவே சுற்றுலா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2019
00:00

நவீன காலத்தை 'செல்ஃபி' காலம் என்று சொல்லும்படி, கைபேசியில் படம் எடுப்பவர்களே எங்கும் நிறைந்துள்ளனர். சில இடங்களில் செல்ஃபி எடுக்கக்கூடாது என்று எச்சரிக்கைப் பலகை வைக்கும் அளவிற்கு நிலைமை சென்றிருக்கிறது. செல்ஃபி மோகத்தால் பல மரணங்களும் நிகழ்கின்றன. இதனாலேயே, சுற்றுலாவில் சுற்றி பார்ப்பீர்களா?
செல்ஃபி எடுப்பீர்களா? என மாணவர்களிடம் கேட்டிருந்தோம். சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் பதிலறிய நேரில் சந்தித்தோம். அவர்களின் கருத்துகள் இதோ:

என்.அருண்மதி (9ஆம் வகுப்பு)
சுற்றுலா சென்ற இடங்களை செல்ஃபி எடுத்து நண்பர்களிடம் காட்டும்போது, அவர்களும் அந்த இடங்களுக்குச் செல்ல ஆசைப்படுவார்கள். நமது மகிழ்ச்சியான தருணத்தைச் செல்ஃபி மூலம்தான் மற்றவர்களுக்குக் காட்ட முடியும்.

பி.தாரணி (8ஆம் வகுப்பு)
குற்றாலத்திற்கே போறேன்னு வச்சுக்கோங்க, அருவியில் குளித்து, அதை ரசித்து அனுபவிக்கணும். அப்படி இல்லாமல் படம் பிடிச்சுக்கிட்டே இருந்தால், சுற்றுலாவே வீணாகிவிடும். அருவியை ரசிக்காமல் அருவியின் படத்தை மட்டும் எடுத்து என்ன பயன்?

டி.நந்தினி (9ஆம் வகுப்பு)
சுற்றுலாவில் சில நேரங்களில் அரிய விலங்குகள், பூக்களை எல்லாம் பார்ப்போம். அவற்றைத் திரும்பப் பார்க்க முடியாது. செல்ஃபி எடுக்கும்போது, அவை நம்மை விட்டு மறையாது. அடிக்கடி வந்து செல்லமுடியாத மிகவும் பிடித்த இடத்தில் செல்ஃபி எடுப்பதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

ஆர்.சுவாதி (9ஆம் வகுப்பு)
கோயில், கோட்டை, வரலாற்று நினைவிடம் போன்ற இடங்களுக்குச் செல்கிறோம். செல்ஃபி எடுத்து நேரத்தை வீணாக்காமல் அவ்விடங்கள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால், நமது படிப்புக்கு அது, உறுதுணையாக இருக்கும். இங்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரே ரசித்து சுற்றிப் பார்க்கும்போது, நாம் இப்படி செல்ஃபி மோகத்தில் இருப்பது சரியா?

ஏ.ஆப்ரின் மெகானஸ் (9ஆம் வகுப்பு)
சுற்றுலாவோடு, செல்ஃபி ஒன்றிவிட்டது. நாம் எங்கெல்லாம் சென்றோம் என்பதை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர செல்ஃபிதான் ஒரே ஆதாரம். சில ஆண்டுகளுக்குப் பின் நாம் மீண்டும் அதே இடத்திற்குச் செல்லும்போது, அங்கே ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை ஒப்பீடு செய்ய செல்ஃபி உதவும்.

எம்.சகாதேவி (9ஆம் வகுப்பு)
இயற்கையை ரசிக்கப் படம் பிடித்தே ஆகவேண்டுமென்றால், சுற்றுலா செல்லத் தேவையில்லை. இன்னொருவரின் படத்தைப் பார்த்தே மகிழ்ந்து கொள்ளலாமே? புதிய இடத்தைச் சுற்றிப் பார்க்காமல் செல்ஃபி எடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினால் ஒரு பயனும் இருக்காது.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anu - Chennai ,இந்தியா
15-பிப்-201919:26:06 IST Report Abuse
Anu அனுப்புநர்: சென்னை ஸ்மிருதி. சி லாலாஜி ஒமேகா சர்வதேசப் பள்ளி 79, ஒமேகா பள்ளிச் சாலை கொளப்பாக்கம் சென்னை-128. பெறுநர்: தினமலர் மாணவர் பதிப்பு - பட்டம் தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை-14. பொருள்: ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டி ஐயா, வணக்கம். என் பெயர் ஸ்மிருதி. நான் எட்டாம் வகுப்பில் படிக்கிறேன். என் தமிழ் ஆசிரியை நாள்தோறும் 'பட்டம்' இதழை வகுப்பில் படிக்கச் சொல்லுவார். 11-2-2019 அன்று வெளியான 'பட்டம்' இதழில், 'கலெக்க்ஷன்ஸ் சந்தேகம்' என்ற கதையில் நிறைய ஆங்கிலச் சொற்கள் கலந்துள்ளன. ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாமல், தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் எங்களின் படித்தல் திறன் மேம்படும். அதனால் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, இப்படிக்கு, ஸ்மிருதி. சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X