இட்லி இனியவன்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
00:00

இன்றைய காலகட்டத்தில், வேலை இல்லா பிரச்னை, தலை தூக்கியுள்ளது. ஒரு காலத்தில், பி.இ., படிப்புக்காக, சொத்துக்களை விற்று, பிள்ளைகளை படிக்க வைத்தனர் பெற்றோர்.
இன்று, இன்ஜினியரிங் கல்லுாரிகள் எல்லாம், 'ஈ' ஓட்டுகின்றன; ஐ.டி., கம்பெனிகளில் வேலை இல்லாமையே காரணம்!
திடீரென்று, ஆள் குறைப்பு சம்பவங்கள் முக்கால்வாசி கம்பெனிகளில் நடக்கின்றன. இதனால், பலர், வேலை வாய்ப்புகளை இழந்து, படித்த படிப்புக்கும், செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாத வேலையில் உள்ளனர்; பலர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.
வெறும், 8வது படித்து, இன்று கோடீஸ்வரராக உள்ளார் இனியவன். 'தன்னம்பிக்கை இருந்தால் போதும், படிப்பு தேவையில்லை; எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைக்க முடியும்...' என்கிறார்.
கோவையைச் சேர்ந்த இனியவன், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
பெற்றோருக்கு, 10 பிள்ளைகள்; குடும்பத்தில், மிகுந்த வறுமை; எனவே, பள்ளிக்கூடம் சென்றாலாவது, மதிய உணவு கிடைக்கும் என்று நினைத்து, பள்ளிக்கூடம் செல்வார். 8ம் வகுப்புக்கு மேல், அதுவும் போக முடியவில்லை; அவ்வளவு வறுமை!
வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறியே ஆக வேண்டும் என்ற வெறி! எனவே, 1997ல், சென்னையிலுள்ள, ஆர்.கே. நகர் பகுதியில், ஒரு குடிசையில், இட்லி கடை தயாராகி விட்டது. மறுநாள், வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற, பல விதமான கனவுகளுடன் படுத்திருந்தார் இனியவன்; ஆனால், நடந்ததோ வேறு!
இரவில், அடை மழை பெய்ய, இட்லி பானை, தள்ளு வண்டி எல்லாமே, தண்ணீரில் மூழ்கியது; கதறி துடித்தார் இனியவன்.
'என்ன இது, சகுனம் சரியில்லையே' என நினைத்தாலும், மறு நிமிடம், தன் மனதை தேற்றி, உற்சாகத்துடன் இட்லிகளை தயாரித்து, விற்றார். அவருக்கு மிகவும் பிடித்தமான இட்லியில், ஒரு புதுமையை புகுத்தினார். வழக்கமாக செய்யும் இட்லியின் வடிவத்தை மாற்றினார்.
வித விதமான பூ வடிவங்கள், முக்கோண, நாற்கோண, இதய வடிவங்களில், இட்லியின் வடிவத்தை மாற்றினார். அதற்கே, நல்ல வரவேற்பு கிடைத்தது; அத்துடன், அதன் சுவையையும் மாற்றினார்.
கேரட் இட்லி, பைனாப்பிள் இட்லி, ராகி இட்லி, கம்பு இட்லி, சோளம், சிறுதானிய இட்லி, என தயாரித்தார்; அவ்ளோதான், வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
'இட்லி இனியவன்' என்ற பெயருடன், உலகப் புகழ் அடைந்து விட்டார்.
முதன் முதலில், 30 வகை இட்லிகளை வைத்து, ஒரு கண்காட்சி நடத்தினார். அதற்கே, மக்கள் பெருத்த ஆதரவு தந்தனர். அதன்பின், 200 வகை இட்லி கண்காட்சி, அப்புறம், 1,000 வகை இட்லி கண்காட்சி நடத்தி, 'ஓஹோ...' என, உலக புகழ் பெற்றார்.
அத்துடன் விட்டு விடாமல், 124.800 கிலோ கிராமில், இட்லி சுட்டு அசத்தி, உலக சாதனை படைத்தார். இட்லி சேவையை பாராட்டி, இவர் பிறந்த நாளான, மார்ச், 30 ஐ இட்லி தினமாக அறிவித்து கவுரவித்துள்ளனர். இதை, தமக்கு கிடைத்த மிகப் பெறும் கவுரவமாக கருதுகிறார்.
இன்று, கோடீஸ்வரராக இருக்கும் இவரைப் பார்த்து, புதுமையாக யோசிக்க கற்றுக் கொள்ளுங்கள் குட்டீஸ்.
இளைஞர்களே... வேலை போய் விட்டதா... கவலை வேண்டாம்; இனியவனை போல, வித்தியாசமா யோசிங்க; வெற்றி நிச்சயம்!

- விமலன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X