அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2019
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!

மரம் வளர்ப்போம்!
கஜா புயலால், இழந்த மரங்களை, புதிய மரங்கள் நடுவதன் மூலம், ஈடு செய்யலாம். பச்சைப்பசேல் என்று, மனதை மயக்கும், மரம், செடி, கொடிகளால் தான், நாம் வாழ்கிறோம். மூச்சு விடுவதன் மூலம், கார்பன்டை ஆக்சைடை நாம் வெளியிடுகிறேம்; மரமோ, மனிதனுக்கு தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ஆரோக்கிய வாழ்வு வாழ, மனிதனைச் சுற்றி, நலம் பயக்கும் மரங்கள் அவசியம். வீட்டிற்கு, குளிர்ச்சியையும், அழகையும் தரவல்ல மரங்கள், நிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள், பணம் தரும் மரங்கள் என, பிரிக்கலாம்.

நிழல் தரும் மரங்கள்!
வேப்ப மரம், புங்க மரம், சரக்கொன்றை, பூவரசு, செர்க்கோலியா, மந்தாரை, மரமல்லி, நாகலிங்கம் மற்றும் வில்வம்.

பயன் தரும் மரங்கள்!
மா, பலா, வாழை, தென்னை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, சாத்துக்குடி, சீத்தாப்பழம், அரை நெல்லி, முழு நெல்லி மற்றும் பப்பாளி.

பணம் தரும் மரங்கள்!
தேக்கு, சந்தனம், சிவப்பு சந்தனம், இறக்குமதி சவுக்கு, பில்லா ஓக்...

இவை, அரசு தோட்டக்கலை பண்ணைகளிலும் கிடைக்கும்.
மரக்கன்றுகளை வாங்கும் போது, குறைந்தபட்சம், 4 அடி உயரமாவது இருக்க வேண்டும். இத்தகைய மரக்கன்றுகள் தான் பக்குவப்பட்டவை.
இவற்றை, காலை அல்லது மாலை வேளை யில் தான் நட வேண்டும். நிழல் தரும் மரங்களுக்கு, பராமரிப்பு செலவு கிடையாது; பழ மரங்களுக்கு, பராமரிப்பு கூடும். இரண்டு, மூன்று ஆண்டுகளில் பயனளிக்க துவங்கி விடும்.
பணம் தரும் மரங்கள் பலன் அளிக்க, குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் தேவை. இந்த மரங்கள், எவ்வளவு உயரமாக வளருகிறதோ, அவ்வளவு பயனை, பணமாக தரும்.
இம்மரங்களின் கிளைகளை வெட்டி, நேர்குத்தாக வளருமாறு செய்தால், தண்டு தடித்து, தரம் உயர்ந்ததாக அமையும்.
எனவே, கஜா புயலில், பாதிக்கப்பட்ட இடங்களில், தகுந்த மரக்கன்றுகளை, வீட்டுக்கு வீடு நடவு செய்து வளர்ப்பதன் மூலம், இழந்த மரங்களுக்கு, ஈடு செய்ய முடியும்.

- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X