அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2019
00:00

பா
அரசு அலுவலகம் ஒன்றுக்கு, சமீபத்தில், நண்பருடன் சென்றிருந்தேன். நானும், நண்பரும், அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, அறைக்குள் இருந்த சீனியர் அதிகாரி ஒருவரின் கோபக் குரல், வெளி வராண்டா வரை கேட்டது. யாரையோ, எதற்காகவோ, கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தபடி இருந்தார்.
செல்வாக்குள்ள அந்த அரசு அதிகாரியிடம் தான், நண்பருக்கு, வேலை ஆக வேண்டியிருந்தது. இப்போது, உள்ளே போனால், முடியும் வேலை கூட முடியாமல் போய் விடுமே என்று நினைத்து, சற்று பொறுத்து போகலாம் என்று, வெளியிலேயே காத்திருந்தோம்.
அந்த அதிகாரி பற்றி, ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜகஜ்ஜால கில்லாடி.
தனக்கு நிர்வாக திறமை நிரம்பி வழிவது போல காட்டிக் கொள்வதற்காக, தன் கட்டுப்பாட்டில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, 'சார்ஜ் மெமோ' மற்றும் 'டிரான்ஸ்பர்' என்று கொடுத்து, உருட்டி, மிரட்டி பயமுறுத்தி வைப்பது அவரது, 'ஸ்டைல்!'
இப்படி பயத்தில் வைத்திருந்தால், தான் ஏதேனும் தவறு செய்தாலும், தன்னை எவரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்பது, அவரது எண்ணம்.
இவரால் நெடுந்தொலைவுக்கு, 'துாக்கி' அடிக்கப்பட்ட பெண் அலுவலர் ஒருவர், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து, புது இடத்தில், மகளிர் விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டியிருந்தது.
விடுதி சாப்பாடு ஒத்துக்கொள்ளாமலும், அலைச்சல் தாங்க முடியாமலும், உடல் நலம் பாதிக்கப்பட்டார், பெண் அலுவலர். அவர், மேற்படி அதிகாரியை சந்தித்து, தன் பிரச்னைகளை சொல்லி, சொந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு அலுவலகத்திற்கு, 'டிரான்ஸ்பர்' தருமாறு கேட்டார்.
'ஈகோ' மிகுந்த அந்த அதிகாரியோ, 'நான் போட்டால் போட்டது தான்... மரியாதையாக போய் வேலையை பார் அல்லது எந்த இடமும் கொடுக்காமல் தொங்கலில் வைத்து, சம்பளம் இல்லாமல் பண்ணி விடுவேன்...' என்று கடுப்படித்து, திருப்பி அனுப்பி விட்டார்.
இதனால், நொந்து போன அந்த பெண் அலுவலர், தன் துாரத்து சொந்தமான, அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியை நாடினார். அதிகாரியிடம் நேரடியாக பேசி, காரியத்தை முடித்துவிடும் அளவுக்கு, 'வாய்ஸ்' உள்ள அந்த அரசியல் பிரமுகர், இவரது பெயரைக் கேட்டதும், யோசனையில் ஆழ்ந்தார்.
'இந்த ஆள் என்றால், கொஞ்சம் பார்த்து தான் காய் நகர்த்த வேண்டும்...' என்று சொன்னவர், தன் உதவியாளரை அந்த அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.
'நீங்க ஒரு போன் அடித்தால், உடனே வேலை முடிஞ்சிடுமே...' என்று கேட்ட பெண் அலுவலரை, கொஞ்சம் பொறுமையாக இருக்க சொன்னார், அரசியல் பிரமுகர்.
அதிகாரியை, அவரது அலுவலகத்தில் சந்தித்தார், அரசியல் பிரமுகரின் உதவியாளர். அங்கிருந்தபடியே, தன் மொபைல் போனில், அரசியல் பிரமுகரை தொடர்பு கொண்டார்.
'அவர்கிட்ட போனை கொடுப்பா...' என்று, உதவியாளரின் போனை, அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னார். 'இந்த பெண் அலுவலர் எனக்கு சொந்தம்; அவர் கேட்கும் இடத்திற்கு, 'டிரான்ஸ்பர்' கொடுக்க வேண்டும்...' என்று பரிந்துரைத்தார், அரசியல் பிரமுகர்.
பேசுபவர், செல்வாக்கான பிரமுகர் என்பதால், தட்ட முடியாமல், செய்து முடிப்பதாக வாக்கு கொடுத்தார், அந்த அதிகாரி.
காரியம் ஜெயமாக முடிந்ததா, இல்லையா என்பது பற்றி தகவல் இல்லை. இந்த சிபாரிசு பற்றி, அரசியலில் கொடி கட்டி பறக்கும் அந்த பிரமுகர், ஒருமுறை என்னிடம் சொன்ன விஷயம் தான், சுவாரஸ்யம்...
'அந்தாளு, ஒரு வில்லங்கம் பிடிச்சவன்... நான் அவன்கிட்ட நேரடியா போன் போட்டு பேசியிருந்தால், வேலை முடிஞ்சிருக்கும் தான்...
'ஆனா, அவன் இந்த போன் உரையாடலை பதிவு பண்ணி, வேண்டாத இடத்துல போட்டுக் கொடுத்து, நமக்கு வேட்டு வச்சு, அவன் நல்ல பேர் வாங்கிட்டு போனாலும் போயிடுவான்... அது தான், நான் என்னோட, பி.ஏ.,வை அனுப்பி, அவர் போன் மூலமா பேசினேன்...' என்றார்.
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பிரமுகர்கள், எவ்வளவு முன்ஜாக்கிரதையாக இருக்கின்றனர் என்று நினைத்து, வியந்து போனேன்.
இந்த நிகழ்ச்சியை நண்பரிடம் சொல்லி முடிக்கவும், அதிகாரியிடமிருந்து அழைப்பு வரவும் சரியாக இருந்தது. நண்பரை, அதிகாரியின் அறைக்குள் அனுப்பி விட்டு, நான், அலுவலகத்துக்கு வெளியே வந்து, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
அரை மணி நேர சந்திப்புக்கு பின், வெளியே வந்த நண்பரின் முகத்தை பார்த்தேன். போன காரியம் வெற்றியா, தோல்வியா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, கலங்கி போயிருந்தார்.
நான் எதுவும் கேட்கவில்லை. தன் காரில் அழைத்து வந்து, என்னை அலுவலகத்தில் விட்டுச் சென்றார், நண்பர்.

கே
அன்று, பீச் மீட்டிங்கின் போது, நண்பர் குழுவினருடன் நடந்த உரையாடல் இது:
தமிழகத்தில் பிறந்து, தமிழை சரியாக உச்சரிக்கவே தெரியாதவர்கள், நிறைய பேர் உண்டு. இது, மனதை ஒரு பக்கம் வாட்டினாலும், தவறான உச்சரிப்பைக் கேட்டு, வயிறு குலுங்க சிரித்து மகிழவும், பழகிக் கொள்ள வேண்டியது தான் என்றே தோன்றுகிறது. தமிழையே சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள், ஆங்கிலம் பேசினால், இன்னும், 'குபீர்' தான்!
ஒரு நண்பர், 'அந்து... மலைல தண்ணி தேங்கிடிச்சு பா...' என்றார். 'மலைல எப்படிபா தண்ணி தேங்கும்... வடிஞ்சிடுமே...' என, அப்பாவியாய் கேட்டேன். அவர் மீண்டும், 'மலையா... நான் அதைச் சொல்லலே... மளை...' என்றார்.
மறுபடியும் சில நொடிகள் அவதானித்த பிறகு தான், அவர், மழையை, 'மலை' என்றும், 'மளை' என்றும் சொன்னார் என்பது புரிந்தது.
நான் விடவில்லை... 'உங்கூர் மலைல தண்ணிரெல்லாம் தேங்குதா... அதிசயமா இருக்கே...' என்றேன். 'அய்யோ... அதில்லை பா... மளை... மளை...' என்றார்.
'மழைன்னு சொல்லுங்கண்ணே...' என, அவரை பிழை திருத்திப் பேச வைக்க, ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆனால், பிறந்தது முதல் இப்படி பேசிப் பழகி இருக்கிறார் என்று தெரிந்ததால், அத்துடன் திருத்தல் படலத்தை கைவிட்டேன்.
இதை, என் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நண்பர், ஆங்கிலம் பேசுவதில், புலி. 'சரி அந்து... 'பேசை வாஸ்' பண்ணிட்டு வந்துர்றேன்... 'வெயிட்' பண்ணு...' என்றார்.
'குபீர்' என எழுந்த சிரிப்பை அடக்கி, அவரை முறைத்தேன்.
அவர், 'பேஸ்' என்று சொன்னதற்கு பயன்படுத்தியது, ஆங்கிலத்தில், 'ஏ'க்கு அடுத்து வரும், 'பி' எழுத்து. 'வாஸ்' என்று சொன்னது, 'வாஷ்' என்ற பொருளைக் குறிக்கும். இப்போது, நீங்களே அவர் பேசியது போல் பேசிப் பார்த்துக் கொள்ளுங்கள்!
இவர்கள் ஏன் இவ்வளவு மோசமான உச்சரிப்பை பழக்கி இருக்கின்றனர் என, ஆராய்ந்தேன். இவர்கள் படித்த பள்ளியில், ஆசிரியர்களுக்கே, தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு சரியாக இருந்திருக்காது என்று தோன்றியது; பெற்றோரும் அதே போல் இருந்திருக்கலாம்.
ஆனால், அப்துல்கலாம் போன்ற பலர், கிராமத்து பள்ளியில் படித்து, சர்வதேச அளவில் கொடி கட்டியது, கட்டுவது எப்படி? மொழி மீதும், பாடங்களின் மீதும், 100 சதவீதம் கவனம் செலுத்தினால், முன்னேற்றம் சாத்தியம் என்ற முடிவுக்கு வர வேண்டியதாகிறது.
அவர்கள் போல் முன்னேற முடியவில்லை என்றாலும், அபத்த உச்சரிப்பிலிருந்தாவது தப்பிக்கலாம் இல்லையா!


அந்த பெரிய நகரத்தின் முக்கியமான சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல். எல்லா திசையிலும், கார்களும், ஸ்கூட்டர்களும், பஸ்களும், மினி லாரிகளும் தேங்கி நின்றன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய, ஒரு கார் காரர், வெளியே எட்டிப் பார்த்தார். அட்டை பெட்டியை குலுக்கியபடி, ஒரு சிறுவன், ஒவ்வொரு வண்டி அருகே நின்று, ஏதோ கேட்டபடி வருவதை கண்டார். அவனை கூப்பிட்டு, 'என்ன தம்பி... ஏன் இவ்வளவு போக்குவரத்து நெரிசல்...' என்று கேட்டார்.
'ஒரு கட்சித் தொண்டர், தன் மேல் பெட்ரோல் ஊற்றி, நடு ரோட்டில் கிடக்கிறார் சார்... அவர் சார்ந்த கட்சிக்கு, 5,000 ரூபாய் நிதி வேண்டுமாம். அந்த தொகை கிடைக்காவிட்டால், கொளுத்தி சாவேன் என்கிறார். அவருக்காக தான், நான் கலெக் ஷன் பண்ணுகிறேன்...' என்றான், சிறுவன்.
'இதுவரை என்ன கிடைத்தது?' என்று கேட்டார், கார் காரர்.
'ஏழு தீப்பெட்டி, இரண்டு 'சிகரெட் லைட்டர்' சார்...' என்று பதில் வந்தது.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Raman - Neyveli ,இந்தியா
21-பிப்-201916:50:53 IST Report Abuse
Saravanan Raman 17.02.2019 வாரமலர் இதழில் வெளியான, அந்துமணி அவர்களின் பாகேப-வில், 'கேட்டது' பகுதியில்… 'தமிழை சரியாக உச்சரிக்க தெரியாத தமிழர்கள்' பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. “தமிழே எங்கள் உயிர் மூச்சுஇரத்தம் இதயம்”என்று மூச்சுக்கு முன்னூறு தடவை பேசுகின்றவர்கள் நடத்துகின்ற, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் “ழ” எழுத்தை கொஞ்சமும் உச்சரிக்க தெரியாத, பல மேதாவிகள், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களாகவும், செய்தி வாசிப்பவர்களாகவும், இருக்கின்ற அக்கிரம் நிகழும் வரை, முழுமையான தமிழ் உச்சரிப்பை தமிழர்களிடம் ஏற்படுத்தவே முடியாது. வெகுஜன தொடர்பு சாதனங்களின் மூலமாக, 24 மணி நேரமும், தவறாக உச்சரிக்கப்படும் தமிழையே கேட்டுக்கொண்டிருக்கும், இன்றைய மாணவமணிகள் சரியான தமிழ் உச்சரிப்பது குதிரைகொம்புதான் இடையூறுகளை களைந்தால், தகுதியானவர்களை தகுதியான இடத்தில் நியமித்தால், மொத்தத்தில் அந்துமணி சொல்வது போல, 100% கவனம் செலுத்தினால், இது வெகுவிரைவில் சாத்தியமே அந்நாள் விரைந்து வரட்டும்
Rate this:
Cancel
20-பிப்-201922:32:22 IST Report Abuse
 Shan, Ngl தமிழில் ஸ கிடையாது.‌ ஆனால் தமிழ்நாட்டில் 90 மக்கள் ச வை ஸ என்றல்லவா உச்சரிக்கிறார்கள்? சரி (Chari) என்னும் உச்சரிப்பை ஸரி, செருப்பு என்பதை ஸெருப்பு இவ்வாறே இருக்கின்றது. எங்கள் குமரி மாவட்டத்தில் ச, ழ, ள அனைத்தும் மிகச் சரியாகவே உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் வெளியூர்களில் எங்கள் ச உச்சரிப்பை கேலி செய்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-பிப்-201912:21:16 IST Report Abuse
Natarajan Ramanathan எந்த குக்கிராமத்தில் எந்தப் பள்ளியில் படித்தாலும் பிராமணர்கள் மட்டும் எப்போதும் தமிழை பிழை இல்லாமல் பேசுவது எப்படி??
Rate this:
Manian - Chennai,இந்தியா
18-பிப்-201901:03:10 IST Report Abuse
Manianபொதுவாக படித்த பெற்றோர்கள் இருந்தாலும், நல்ல தமிழ் ஆசிரியர்கள் இருந்தாலும், இரெண்டு அல்லது அதற்கு மேல் மொழிகள் கற்றாலும் இந்த திறமையை வரும் என்று மேல் நாடு ஆராச்சிகள் சொல்லுகின்றன. அதை எல்லாம் இங்கே யார் படிக்கிறார்கள்?...
Rate this:
Manian - Chennai,இந்தியா
18-பிப்-201901:07:05 IST Report Abuse
Manianமேல் நாடு ஆராச்சிகளில் கண்ட உண்மை - நொதித்த உணவு- தயிர் உண்பவர்கள் பொதுவாகா சிறந்த குடல் நுண் அணுக்கல் இருப்பதால் அவர்கள் மூளை இளமையானதாகவும், சிறப்பாக செயல் படுவதாகவும் கண்டுள்ளார்கள். இங்கே "அவாள், தயிர் சாதம் என்று" கேலி செய்யும் நபர்களுக்கு அந்த அறிவு , பேச்சும் திறமை, உச்சரிப்பு இல்லை என்று தெரிகிறது....
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-பிப்-201905:51:32 IST Report Abuse
கதிரழகன், SSLCஎன் அக்கவுண்டன்டு சொன்னது: சின்ன புள்ளை க்கெல்லாமே சுலோகம் சொல்லி கொடுப்பாக. சாமி பேரு தப்பா சொன்னா தெய்வ குத்தமினிட்டு சரியா சொல்ல கொடுப்பாக. அதுவும் வடமொழி சுலோகம் சரியா சொல்லி பளகிட்டா சுத்தமா பேச வரும்....
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
18-பிப்-201905:52:42 IST Report Abuse
கதிரழகன், SSLCManian - chennai,இந்தியா: இது கட்டுக்கதை. இலக்கண சுத்தமா பேசற அசைவ ஆளுக நெறைய பேரு இருக்காக,...
Rate this:
Manian - Chennai,இந்தியா
20-பிப்-201905:05:27 IST Report Abuse
Manianஐயா கதிரேசன். நீங்கள் சொன்னது உண்மைதான். ஆனால் 2 தவறான புரிதல்கள் (1)அசைவர்கள் நல்ல தமிழில் பேசவில்லை என்று சொல்லவில்லை. பொதுவான கேள்விக்கு பதில் தரும்போது படித்த பல ஆராயச்சி கட்டுரைகளை சுருக்கமாக பதிவிடும்போது, 100 % என்று புள்ளிவிவரம் கொடுக்கவில்லை. உதாரணமாக, முஸ்லிம்கள் வியாபாரிகளாக இருக்கிறார்கள் என்றால் அது பொது எண்ணம். திரு அப்துல்கலாம் போன்ற தலை சிறந்த விஞ்ஞானிகள் இருக்கிறார்களே என்று கேட்கமுடியுமா? புளித்த, நாருள்ள மாங்காயை ஊறுகாய் போடுவார்கள் என்றால், எத்தனையோ அதில் பழுத்த பழங்கள் இனிப்பாக இருக்கிறதே என்று வாதம் செய்ய முடியுமா? (2) நீங்களே நான் சொன்ன கருத்தை அமோதித்திருக்கிறீர்கள். "என் அக்கவுண்டன்டு சொன்னது: சின்ன புள்ளை க்கெல்லாமே சுலோகம் சொல்லி கொடுப்பாக. சாமி பேரு தப்பா சொன்னா தெய்வ குத்தமினிட்டு சரியா சொல்ல கொடுப்பாக. அதுவும் வடமொழி சுலோகம் சரியா சொல்லி பளகிட்டா சுத்தமா பேச வரும்....". அப்படியானால் அது குறைந்த அளவில் இண்டாவது (ஹிந்தி போல) மொழி ஆகாதா.? பள்ளியில் 3வது மொழியாக ஆங்கிலம் வேறு கற்பார்களே. ஆகவே அவர்கள் பல மொழிகள் கற்று புரிதல், சிந்தனை செய்வதில் முன்னேறுகிறார்கள் மறைமுகமாக என்று நீங்களே உணர்த்தவில்லையா? அசைவர்களும் பலரும் இதில் இருப்பதை "இல்லை" என்று சொன்னதாகுமா? இதையே மேல் நாடுகளில் ஆராய்ச்சி மூலம் கண்டு, இப்படி பட்ட இந்தியர்களை வேலைக்கு விரும்பவதாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை சொ்கிறது. அதே சமயம் ஆங்கிலம் மட்டுமே படித்தவர்களுக்கு எத்தனையோ பேருக்கு வேலை கிடைக்கவில்லையா என்று கேட்கமுடியமா? ஏன் இந்தியர்கள், ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மனியர்களை வரவேற்கிறார்கள் என்றால் அவர்கள் பன் மொழி அறிவு, சிந்தனை திறன், ரஷ்ஷியர்கள், அரேபியர்கள் போன்ற ஒரே மொழி கற்ற சிந்தனையாளர்களை விட பன்மடங்கு சிந்தனை திறன் அதிகம் என்கிறார்கள். ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் எழுத படிக்க தெரியம், பேச கடினம், ஆக அவர்களும் 2 மொழிகள் கற்றவர்கள்.(3) குடலில் உள்ள நுண் உயிர்கள் மூளை,ஆரோக்கியம்,நீரிழிவு தடுத்தல்,இதய கோளாறை தடுத்தல் செய்ய அவசியம். சுத்தமான கையால் சாப்பிடுபவர்கள் கையில் இருந்து உணவுடன் வரும் பாக்டீரியாக்களை குடல் நுண்ணுயிர்கள் சொந்தங்கள் என்று வரவேற்பதாகவும் சொல்கிறார்கள். அத்தோடு தற்போது நமது மண் சட்டியில் பிறை குத்திய தயிரை "க்ரீக் யோகர்ட்" (Greek Yogurt) என்று சொல்லி உண்கிறார்கள். அதுவும் குடல் நுண்ணுயிர்களுக்கு கிரியா ஊக்கியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்று கண்டுள்ளார்கள். பொதுவாக பிராமணர்கள் குடும்பங்களில் இதை அதிமாக காணலாம். அங்கேயும் சிலருக்கு குறைகள் உண்டு. இதை எல்லாம் விரிவாக சொன்னால் கட்டுறை போல் வளரும் என்று, சுருக்கமாக சொன்னேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X