கோடை வருது! தென்னை மரங்கள் உஷார்!!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
00:00

ரோட்டவேட்டர் கருவியை பயன்படுத்தி, புல், பூண்டுகளை உழுதுவிடவும், ஆழமாக உழக்கூடாது. தென்னையின் வேர்கள் அறுபடக்கூடாது. தென்னை மர வேர்கள் தண்ணீர், உரம் தேடி 300 அடி நீளம் வரை செல்வதாக தமிழக வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதனால் ஒரு விரல் அளவுள்ள வேர்கள் அறுபடாமல் மேலாக கீறி விடவும். ஆழம் உழக்கூடிய சட்டிகலப்பை, கல்டிவேட்டர்களை தென்னந்தோப்புகளில் பயன்படுத்தினால் வேர் அடுக்கு குலைந்துவிடும்.
தென்னை மரங்களிலிருந்து 5 அடி தள்ளி உழவும். தென்னை மர பக்கத்தில் உள்ள புற்களைக் கையால் எடுத்துவிடவும். மரத்தில் காயம் ஏற்படக்கூடாது. மரத்தில் காயம் ஏற்பட்டால் அந்த காயம் வழியாக சிவப்புக் கூன்வண்டு புகுந்து அதன் இனத்தைப் பெருக்கி மரத்தைத் தின்று கொன்றுவிடும். வரப்புகள் அமைத்து நீர்பாய்ச்சியும், சொட்டு நீர் குழாய்களை சரிசெய்து அடைப்பு நீக்கியும் பாதுகாக்கவும். மூன்று நான்கு வயதுடைய தென்னை மரங்கள் வளரும் தோப்புகளில் மட்டைகள் சாய்வாக தொங்கி நிற்கும். உழவு ஓட்டும்போது அதை வெட்டக்கூடாது.
தென்னை மரங்களிலிருந்து மூன்றடி தள்ளி வேர்கள் அறுபடாமல் அரைவட்டம் எடுத்து தென்னைக்கு என்று தயாரிக்கப்படும் "கல்ப விருட்சா' மிக்சரை ஒரு கிலோ அளவில் கொடுக்கவும். மஞ்சள் கலர் இருந்தால் ஒரு கிலோ யூரியாவும் கொடுக்கவும். அதன்மேல் 30 கிலோ அளவு தொழு உரம் போட்டு தண்ணீர் கட்டவும். கழிவு மட்டைகளையும் பரப்பிவிடவும். ஈரம் அதிக நாட்கள் இருக்கும். தென்னை மரங்களில் பூக்கள் கருகி பிஞ்சுகள் உதிர்வது சத்துகள் பற்றாக்குறையினால் ஒரு புறம் இருந்தாலும் பூஞ்சாண எதிர்ப்புசக்தி குறைபாடும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
உதிர்ந்து கிடக்கும் பிஞ்சுகளின் நெட்டிப்பகுதிகளை எடுத்துப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் படர்ந்து பூஞ்சாணம் வளர்ந்திருப்பது தெரியும். அது "கொச்சலியோ போல்லியோ' வகை பூஞ்சாணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதை தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க "கோகோஸ்' உரமருந்தை மட்டை இடுக்குகளில் பயன்படுத்தவும். "கோகோஸ்' தாவர வகை பவுடர். அதில் உள்ள மருத்துவ குணத்தால் பூஞ்சாண வியாதி எதிர்ப்பு சக்தி உண்டா கிறது. அதில் உள்ள இயற்கையான சத்துக்கள் இலைவழி உணவாகி பாளைகள் 5 பங்கு பெரிதாகவும் மூன்று பங்கு அதிக நீளமாகவும் வருகிறது. மகசூல் 80% பெருகி குலை தேங்காய் கயிற்றால் தாங்கி கட்ட வேண்டும். திருவையாறில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி மையம் செய்த பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. கடும் கோடை வரும் முன் பயிர் பாதுகாப்பு முறைகளை முறைப்படுத்தி செய்தால் தென்னை மகசூல் பெருகும்.
டாக்டர் வா.செ.செல்வம்,
தென்னை ஆராய்ச்சியாளர்,
திருவையாறு-613 204.
போன்: 04362-260 363, 260 003.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X