உத்தமர்கள் வாழும் பூமி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2019
00:00

இதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை.
நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது. நடைமுறை நிகழ்வுகள் பல, இதிகாச புராண நிகழ்வுகளை விட, மிகவும் அற்புதமாக இருக்கும். இதிகாச புராணங்கள் உண்மையென, இன்றும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
நடந்த வரலாறு இது:
யுகங்களைத் தாண்டியும், அரிச்சந்திரன் புகழ் இன்றும் நிற்பது போல, இந்த வரலாறும் நிற்கும்; நிற்க வேண்டும்.
வங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே, ஓர் ஏழை வேதியர் வசித்து வந்தார். மிகவும் நேர்மையான அவர், ஸ்ரீராமரிடம் மிகுந்த பக்தி கொண்டவர்; தான் வைத்திருக்கும் ஸ்ரீராம விக்கிரகத்திற்கு, தினமும் வழிபாடு செய்யாமல் சாப்பிட மாட்டார். இந்த பக்தரின் மனைவியும், இவருக்கு அனுகூலமாக இருந்தார். அத்தம்பதிக்கு, ஓர் ஆண், பெண் என, இரு குழந்தைகள்.
அந்த கிராமத்து ஜமீன்தார், ஒருநாள், பக்தரை கூப்பிட்டு வரச்சொன்னார். அவர் வந்ததும், 'ஐயா... நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும்...' என்றார், ஜமீன்தார்.
பதறிய பக்தர், 'ஏழையான நான் போய், உங்களுக்கு எப்படி உதவ முடியும்...' எனக் கேட்டார்.
'நீங்கள் பொய்யே சொல்ல மாட்டீர்; சத்தியசந்தர் என்பது, அனைவருக்கும் தெரியும். நீங்கள் என்ன சொன்னாலும், இந்த ஊர் நம்பும். அதனால் தான், உங்கள் உதவியை கேட்கிறேன்...' என்றார், ஜமீன்தார்.
பக்தர் புரியாமல் திகைக்க, தொடர்ந்தார் ஜமீன்தார்...
'எனக்கெதிராக ஒரு வழக்கு நடக்கிறது. அதில், நீங்கள் என் பக்கம் சேர்ந்து,
எனக்காக ஒரு சின்ன பொய் சொல்ல வேண்டும். அவ்வளவு தான்...' என முடித்தார், ஜமீன்தார்.
அதுவரை அடக்கமாக இருந்த பக்தர், கம்பீரமாக நிமிர்ந்து, 'பொய்யில், சிறிய பொய்யாவது; பெரிய பொய்யாவது...' என்றார்.
ஜமீன்தாருக்கு, 'பக்'கென்றது. 'என்னைக் கண்டாலே பணிந்து, நடுங்கி, ஒடுங்கி இருக்க வேண்டிய ஏழை, கம்பீரமாக என் முன்னால் நின்று பேசுவதா...' என்று நினைத்தார்.
ஆனாலும், 'ஐயா... நீர் மட்டும் எனக்காகப் பொய் சாட்சி சொல்லாவிட்டால், உங்கள் வீட்டையும், கொஞ்ச நஞ்சம் இருக்கும் நிலத்தையும் பிடுங்கி, பொய் வழக்கு தொடுத்து, உண்டு, இல்லை என்று ஆக்கி விடுவேன்...' என, கடுமையாக மிரட்டினார்.
சற்றும் அசராமல், 'ஐயா... நீங்கள் என்ன செய்தாலும் சரி, உயிரே போவதாக இருந்தாலும், பொய் சொல்ல மாட்டேன்...' என்று அழுத்தமாக சொல்லி விட்டார், பக்தர்.
எனவே, பக்தரின் மீது பொய் வழக்கு தொடுத்து, அவரை குடும்பத்தோடு வீதியில் நிற்க வைத்தார், ஜமீன்தார்.
அணுவளவும் கலங்கவில்லை, பக்தர்; தாம் பூஜை செய்து வரும் ஸ்ரீராம விக்கிரகத்துடன், மனைவி மக்களையும் அழைத்து, ஊரை விட்டே வெளியேறி விட்டார்.
அரிச்சந்திரன், சத்தியசந்தர் என்பது தெரியும்; ஆனால், அது கலியுக வரலாறு அல்ல. தீமைகளே மலிந்து, நிறைந்து இருப்பதாகச் சொல்லப்படும் கலியுகத்தில் தான், மேலே கூறிய வரலாறு நடந்தது.
சத்தியசந்தரான அந்த பக்தரின் மகன் தான், உலகமே வியக்கும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். நம்மால் அப்படியெல்லாம் இருக்க முடிகிறதோ, இல்லையோ... உத்தமர்களான பரமஹம்சர்கள் வாழ்ந்த,- வாழும் பூமி இது என்பதை, தினமும் நினைத்தால் கூட போதும்; நலம் விளையும்!

பி.என்.பரசுராமன்

ஆலய அதிசயங்கள்!
கோவிலின் வடகிழக்கு பகுதியில் தான், நவக்கிரக பிரதிஷ்டை அமைய வேண்டும் என்று, சிற்ப சாஸ்திரம் கூறுகிறது

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
17-பிப்-201904:29:23 IST Report Abuse
Manian உணமையான பக்தர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் யாசிப்பதில்லை. ராம கிருஷ்ன பரம ஹம்சரைபோல தியாராஜா சுவாமிகளும் கஷடப்பவில்லையா? புலன் அடக்கம் மிகவும் கடினம். சுத்தமாக மனதை காலியாக வை, அங்கே வந்து நான் குடிருப்பேன் என்கிறான் கண்ணன். அதாவது ரிக் வேதத்தில் சொன்ன, இயற்கை என்ற மரம், அதில் இருக்கும் இரெண்டு பக்ஷிகளில் ஒன்று ஆத்மா, இன்னொன்று பரமாத்மா (மன சாடச்சி). பரமாத்மா எந்த வித சலனமும் இல்லாமல் ஆத்ம செய்வதை பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறது . அதை உணர்ந்ததால், ஜமீன்தாரால் ஏழை அந்தணரை படிய வைக்க முடியவில்லை. பிறகு அந்தணருக்கு ஏன் இந்த சோதனை என்றால், தங்கம் புடம் போட்ட பின்தான் எந்தவித அசுத்தமும் இல்லாமல் பிரகாசிக்கும், அதுபோலவே உடலுக்குத்தான் துன்பமே தவிர உள்ளே உள்ள ஆத்மா-பரமாத்மாவுக்கு இல்லையே தேங்காய் பழுத்து மரத்தில் இருந்து விழுந்து அடி பட்டாலும் , உள்ளே உள்ள பருப்பை அதை பாது காக்க கவசமாக அதன் மேல் சிறட்டை இருப்பதில்லையா? ஆனால் மன முதிர்ச்சி இல்லாத பொது, கடவுளை உணர முடியாது. இளநிலை மரத்தில் இருந்து விழுந்தால் உடைந்து விடுவது போல.? அதுபோலவே இறைவனும் நம் ஆத்மாவை காப்பான். சரி, இதன் ஏன் எல்லோரும் புரிந்து கொள்ள முடிவதில்லை? இளமையில் கறபதெல்லாமே ஒரேவித தர்க்க வாதம் மூலமே. அதாவது, கடவுள் இருக்கிறார், காப்பாறுவர் நம்பு என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். அதை ஏற்கிறோம்.இது நேர்வாதம் எனலாம். என் கணிதம், இலக்கணம் போன்றவை. ஆரம்பம் முதல் படி படியாக முடிவுக்கு வருதல். "பூ-காய்-பழம்" வாதம் எனலாம் (deductive reasoning ). ஆனால் எல்லாமே புலன்கள் மூலமே உணரமுடியாது என்பதை கற்பிப்பதில்லை. இது இலையிலிருந்து வேர் கானல் முறை எனலாம். இறந்த தர்க்கவாதம் இண்டக்டிவ் ரிஷனிங் ( Inductive reasoning) சூடு தீயோ, வேறு சக்தியோ இருந்தால் தான் வரும் . அந்த சக்தியை பார்க்க முடியாது , அதன் பலனையே உணர முடியும். பல் ரியவேண்டுமானால், அதில் மின்சார சக்தி ஒளியாக மாற்றப்பட வேண்டும் என்பது போன்றவை. ஆத்மா- பரமாத்வை உணர சிந்தை தேவை. யோஜனை வர வேனுமானால் புரிதல் வேண்டு, புரிதல் வேண்டுமானால், இண்டகடிவே ரீசனிக் வேண்டும். அதற்குத்தான் தவம் இருந்து "உள் நோக்குதல்" (Mindfulness ) வர வேண்டும். அதற்கு யோக, மூச்சு பயிற்சி செய்து மனதை ஒருமுக படுத்த வேண்டும் என்று ஞானியர்கள் சொன்னார்கள். அவர்களே தபஸ்விகள், முனிவர்கள். சம்சாரத்தில் இருந்தாலும் இதே மன ஒருமுகப்படுத்தல், ஆழ்ந்த பக்தி,பொய் சொல்லாமை, எல்லாம் அவன் சித்தம் என்பவர்களும் சம்சார ஞானிகளே. பொளதீக-ரசாயன விதிகள்-டிடெக்டிவ் லாஜிக்கால் இதை விளக்க முடியாது.பகுத்தறிவாளிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள், இண்டக்டிவ் லாஜிக் அறியாத, ஒரு பக்கமே அச்சிட்ட நாணயங்கள்.செல்லாத காசுகள். ஸ்வாமி சின்மயாவின் 40 நாள்மன ஒருங்குதல் முறை கற்று (மதலில் அதை நான் நம்பவில்லை), எனது பொளதீக அறிவை இணைத்த பிறகே நமது இந்து மதத்தின் சிறப்பை புரிந்து கொண்டேன், அதை பகிர்ந்து கொள்கிறேன். ஆக்கப் பூர்வமான, அறிவப் பூர்மான பிரச்சினை தீர்வுகள்-இண்டக்டிவ்,டிடக்டிவ் ரீசனிங்க் இரண்டும் இருந்தால் மட்டுமே வரும். அடிப்படை ஆராச்சிகள் இவை இல்லாமல் வராது. அதுவே இன்றய கல்வியின் மிகப் பெரிய குறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X