தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி., யூ.கே.ஜி. எனும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. “இவ்வகுப்புகளில் 2 லட்சம் குழந்தைகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 'பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, அரசு பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதனால், அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 759 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக' அமைச்சர் தெரிவித்தார்.