சாலையோர ஏழைகளுக்கு உணவு வழங்கும் மாணவி | பட்டம் | PATTAM | tamil weekly supplements
சாலையோர ஏழைகளுக்கு உணவு வழங்கும் மாணவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
00:00

டில்லியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தய்ரா பார்கவா. ஆதரவற்ற ஏழைகளின் பசியைப் போக்க உழைத்து வருகிறார். முதல் பணியாக, தான் வசிக்கும் பகுதிகளிலுள்ள பேக்கரிகளில் மீதமாகும் ரொட்டிகளைச் சேகரிக்கிறார். அடுத்து, தான் சேகரித்த ரொட்டிகளை, தொண்டு நிறுவனங்களுக்கும், சாலையோர ஏழைகளுக்கும் வழங்குகிறார். இந்தத் திட்டத்தின் பெயர் இரட்டை ரொட்டி (Double Roti' project).
பொதுவாக, அனாதை விடுதிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை கடைகளில் மீதமாகும் உணவை வாங்குவதில்லை. அதன் தரம் மோசமானதாக இருக்கும் என்ற பயமே இதற்கு காரணம். எனவே, தய்ரா தான் வாங்கும் உணவின் தரத்தை முடிந்த அளவு உறுதிப்படுத்திக் கொள்கிறார். இப்பொருட்களை மக்களுக்கு வழங்க, குளிரூட்டப்பட்ட வண்டியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.
”இந்த டபுள் ரொட்டி திட்டத்தின் முதுகெலும்பு என் பெற்றோரே” என்கிறார் தய்ரா. தய்ரா பார்க்கவா, டில்லியை அடுத்த குர்கானில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தனது இப்பணிக்கு பள்ளியும், நண்பர்களும் ஊக்கம் அளித்து வருவதாகவும் தகவல் தெரிவித்தார்.
”உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. அதேசமயம், நாம் வீணாக்கும் உணவின் அளவும் மிக அதிகம். பட்டினியாலும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையாலும் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கவே இப்பணியில் இறங்கினேன்” என்றார் தய்ரா.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X