வெங்கியைக் கேளுங்க...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
00:00

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

எரியும் விளக்கை அணைக்கவும், அணைந்த நெருப்பை எரிய வைக்கவும் காற்று தேவைப்படுவது ஏன்?
சுதந்திரா லோகநாதன், தேனி.

மெழுகுவத்தியை எடுத்துக்கொள்வோம். மெழுகுவத்தியின் திரியைப் பற்ற வைக்கும்போது ஏற்படும் வெப்பம், மெழுகை உருக்கி ஆவியாக்குகிறது. ஆவியான மெழுகு எரிந்து, ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. எரிதல் எனும் வேதிவினை ஓர் ஆக்சிஜனேற்றம்தான். எனவே, இந்த வினை நிகழ காற்றிலிருந்து ஆக்சிஜன் தேவை. எரியும் பொருளின் அருகே ஆக்சிஜன் செறிவுள்ள காற்று தேவை. காற்று இல்லாதபோது, மெழுகுவத்தி அணைந்துவிடும். இதற்காகவே விறகை எரிக்கும்போது ஊதுகுழல் கொண்டு ஊதி, ஆக்சிஜன் செறிவான காற்றை அடுப்பில் புகுத்துவார்கள்.
மெழுகுவத்தியின் திரியைச் சுற்றி, சிறுபந்து போல அமைந்துள்ள மெழுகு ஆவிதான் எரிகிறது. அப்போது பெருங்காற்று வீசினால் அந்த ஆவிப்பந்து சட்டெனக் கலைந்துவிடும். திரியின் அருகே ஆவி இல்லை என்றால் போதிய வெப்பம் இன்றி நெருப்பு அணைந்துவிடும். அதுபோலவே, விறகு போன்ற எல்லா எரியும் பொருட்களைச் சுற்றியும் ஆவிப்படலம் உண்டு. அந்த ஆவிப் படலம் எரிவதில்தான், நெருப்பு எரியத் தேவையான வெப்பம் உருவாகும். பெருங்காற்றில் ஆவி கலைந்து சிதைந்து விட்டால் நெருப்பு அணைந்துவிடும்.


செல்போன் கோபுரங்களால் பறவைகள் அழிவது உண்மையா?
க.சி.பிரசன்னகுமார், 8ஆம் வகுப்பு, இராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம்.

'செல்போன் கோபுரங்களால் பறவைகள் அழிகின்றன என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை' என்று மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தைச் (BNHS) சார்ந்த பறவையியல் ஆய்வாளர் ராஜத் பார்கவா உறுதியாகக் கூறியுள்ளார். செடி, கொடி, மரம் எனக் குருவிகள் கூடுகட்டி வாழ்ந்த பகுதிகளில் வீடுகள் வந்துவிட்டன. ஆகவே, நகரமயமாதலுக்கும் பறவைகள் குறைந்து போவதற்கும் தொடர்பு இருக்கிறது எனவும் சிலர் விளக்கம் தருகின்றனர்.
குருவிகள் தானியங்களை உணவாக உட்கொள்ளும். முன்பெல்லாம் தானியங்களில் கல் நீக்கம் செய்யும்போது சிதறுவதை உண்ண வீடுகளின் அருகில் குருவிகள் சுற்றும். தற்போது அரிசி ஆலைகளில், கல்நீக்கம் செய்யப்பட்டு தானியங்கள் விற்கப்படுவதால், வீடுகளுக்கு வரும் குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. மேலும் குருவிக் குஞ்சுகளுக்கு உணவாகப் புழு, பூச்சிகள் இருக்கின்றன. சிமென்ட் தரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்ட புல்வெளிகள் முதலியவற்றில் பூச்சி, புழுக்கள் இருக்காது. எனவே குருவிக் குஞ்சுகளுக்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றின் தாக்கமே குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கும் காரணம் என இயற்கையியலாளர்கள் கூறுகின்றனர். எனினும் சில தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாகக் கூடுதல் அலைவரிசை ஆற்றலில் செல்போன் கோபுரங்களை அமைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனினும் செல்போன் கோபுரங்களால் பறவைகளுக்கு என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைத் தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கவேண்டும்.


கூண்டுப் பறவைகளுக்குப் பறக்கும் திறன் மறந்துவிட வாய்ப்பு இருக்கிறதா?
எஸ்.பிரியதர்ஷிணி,12ஆம் வகுப்பு, பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மேல்நிலைப் பள்ளி, பீளமேடு, கோவை.

இன்று உள்ள உயிரினங்களில் பறவைகளுக்கு மட்டுமே பறக்கும் திறன் கொண்ட இறகுகள் உண்டு. இந்த இறகுகள் பறவைகளுக்கு வழவழப்பையும் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் ஆற்றலையும் தருகின்றன. இயற்கையிலேயே பறவைகள் பறப்பதற்கேற்ற உடல் வாகைப் பெற்றுள்ளன. காற்றறைகள் மிகுந்த எலும்புகள், உடலின் எடையை ஆகாயத்தில் தாங்கிக் கொள்ளும் இறக்கைகள், மார்பு, இடுப்பு எலும்புகளின் அமைப்பு போன்ற எல்லாமே பறப்பதற்காகத்தான். நமக்கு மூச்சு விடுவதுபோல, 'பறத்தல்' என்பதும் பறவையின் அடிப்படைத் திறன். கூண்டிலேயே வளர்ந்தாலும், ஓரளவுக்குப் பறக்கும் தன்மையுடனே இருக்கும். ஆனால், மற்ற பறவைகள் போல உயரமாகப் பறத்தல், இரையுடன் தேடுதல், பறந்தபடி சண்டை போடுதல் என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.


சிலந்தியால் மட்டும்தான் வலை பின்ன முடியுமா?
மு.இளமாறன், 5ஆம் வகுப்பு, விவேகானந்த வித்யாலயா, இராமேஸ்வரம்.

சிலந்தி மட்டுமல்ல; பட்டுப்பூச்சியும் வலை பின்னும். பொதுவாகப் பூச்சிகள் அனைத்தும், லார்வா வடிவில் உள்ளபோது தற்காப்புக்காகத் தன்னைச் சுற்றி வலை பின்னிக்கொள்ளும். மரங்களில் வாழும் தையற்கார (Weaver ant) எறும்புகள், தாங்கள் வசிக்கும் மரத்தின் இலைகளை வளைத்து அவற்றை பட்டுப் போன்ற இழை மூலம் இணைத்துக் கூட்டைக் கட்டுகின்றன.
சிலந்தி அதன் உமிழ்நீராலேயே வலை பின்னுகிறது. எந்தப் பகுதியில் அறுந்தாலும் திரும்பவும் அந்த இடத்தை அழகாகப் பின்னி விடும். வட்டமாகவும் குறுக்காகவும் பின்னப்பட்ட வலையில் வட்டமாக இருக்கும் இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்கு நெடுக்கான இழைகளில் பசை இருக்காது. இந்த வலையில் சிலந்திகள் சுலபமாக உலவ வளைந்த கால்களும் கால்களில் உள்ள ரோமங்களும் உதவுகின்றன.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X