பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு தடை விதிக்கவிருக்கிறது ஆந்திர அரசு. இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர், சந்திரசேகர் ரெட்டி.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவரான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக தன் 11 ஏக்கர் விவசாயப் பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பூச்சிக்கொல்லிகளை விலக்கி, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, அதிக மகசூலை அள்ளி வருகிறார் சந்திரசேகர் ரெட்டி.
அதிகரிக்கும் மகசூல்
"பழைய விவசாய முறையில், சாமந்தி மலர்களின் மகசூல் ஓர் ஏக்கருக்கு நான்கு முதல் நான்கரை டன் என்கிற அளவில் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது இயற்கை விவசாயத்தில் அதே சாமந்தி மலர்களின் மகசூல் ஓர் ஏக்கருக்கு 6 முதல் 7 டன் வரை கிடைக்கிறது. செயற்கைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் விவசாய முறையில், சாமந்தி மலர்கள் அதிகபட்சம் ஒரு நாள் வரை மட்டுமே தாங்கும். இயற்கை உரங்களிட்டு வளரும் சாமந்திப் பூக்கள் மூன்று நாட்கள் வரைக்கும் கூட வாடாமல் உள்ளன. இதனால்தான், சந்தையில் இதற்கான மதிப்பும் விலையும் அதிகமாக இருக்கிறது” என்றார் சந்திரசேகர் ரெட்டி.
பரவும் இயற்கை விவசாயம்
சந்திரசேகர் ரெட்டியின், இயற்கை விவசாயத்தைக் கண்டு வியந்த ஆந்திர அரசு, அதற்கு “ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் பார்மிங்” (Zero-budget natural farming, or ZBNF) என்று பெயர் சூட்டியிருக்கிறது. 2024ஆ-ம் ஆண்டுக்குள் ஆந்திரத்தில் உள்ள 80 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறவிருக்கின்றன.
இதற்கான முயற்சிகளைக் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தொடங்கிவிட்டது ஆந்திர அரசு. முன்னோட்டமாக தற்போது, 700 கிராமங்களில் இயற்கை விவசாய முறையை விளைநிலங்களில் செயற்படுத்தி வருகிறது.
- சு.கவிதா
தகவல்:scroll.in