பாதை மாறியதா சின்னத்தம்பி?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
00:00

சமீபத்தில் சின்னத்தம்பி யானையைப் பிடித்ததும் காட்டில் விட்டதும் அனைவர் கவனத்தையும் கவர்ந்தது. கோவையைப் போன்ற பெரிய நகரத்தின் புறநகர்ப் பகுதிகளை ஒட்டி நல்ல காடுகள் இருக்கின்றன. இதனால், யானைகள் போன்ற பேருயிர்கள் அவற்றின் இயல்பு மாறி, அசாதாரணமாக நடந்து கொள்வது இயற்கை.
இந்தக் காடுகள் பல ஆண்டுகளாக, யானைகளின் வலசைப் பாதைகளாக இருந்தன. சின்னத்தம்பியின் வலசைப் பாதையில் பல அமைப்புகள் தற்போது தோன்றி உள்ளன.
தனக்கு வேண்டிய உணவும் நீரும் நகர்ப்புறத்தில் எளிதில் கிடைப்பதால் சின்னத்தம்பி தங்க நினைத்திருக்கலாம். ஆனைகட்டி பகுதி மக்களுக்கு சின்னத்தம்பியால் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை.
மனிதர்களைப் போல் சின்னத்தம்பியும் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு வாழ்ந்து வந்தான். ஆனால், விவசாயிகள் மற்றும் செங்கல் சூளை முதலாளிகளுக்குப் பயம். பொருட்சேதம் முக்கியமான காரணம். யானை குறித்த அச்சம் ஏற்பட்டதால் வேறு வழிதெரியாமல், மாவட்ட ஆட்சியரிடமும், சென்னையில் முதன்மை வனப் பாதுகாவலரிடமும் முறையிட்டதோடு அரசியல் அழுத்தமும் கொடுத்ததால், சின்னத்தம்பியைப் பிடிக்க முடிவாகியது.
காட்டை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் விவசாயம் நடப்பது வனவிலங்குகளின் இயல்பு நடத்தையை மாற்றும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! சின்னத்தம்பியின் பலமும் பலவீனமும் ஒன்றே! அதாவது மனிதர்களுடன் இணக்கமாகப் போவது.
- சு.சந்திரசேகரன், யானை கணக்கெடுப்பாளர்

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X