இலக்கியக் கொடையாளி அரசஞ் சண்முகனார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2019
00:00

மதுரையில் ஒரு விழா. பல ஊர்களிலிருந்தும் தமிழ் அறிஞர்களும் புலவர்களும் அதில் பங்கேற்றனர். பலவிதமான அரிய தலைப்புகளில் உரையாடி அறிவைப் பகிர்ந்துகொண்டனர். அந்த விழாவில் பங்கேற்ற ஒரு புலவருடைய பெயர் சண்முகம். அவர் திருமயிலையைச் சேர்ந்தவர்.

அருந்தமிழ்ப் பணி
அதே விழாவில் இன்னொரு சண்முகமும் பங்கேற்றார். அவர் சோழவந்தானைச் சேர்ந்தவர். என்னதான் ஊர் மாறினாலும், பெயர் ஒன்றுதானே! இது குழப்பத்துக்கு வழிவகுக்கும் அல்லவா? சோழவந்தான் சண்முகத்தின் தந்தை பெயர், அரசப்பர். அதிலிருந்து 'அரசன்' என்ற சொல்லை எடுத்துத் தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்டார். அவருடைய பெயர் 'அரசஞ் சண்முகம்' என மாறியது.
1868ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பிறந்த அரசஞ் சண்முகனார், சிறுவயதிலேயே இலக்கிய நூல்களையும் இலக்கண நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்த தமிழாசிரியர். 'சிதம்பர விநாயகர் மாலை', 'இன்னிசை இருநூறு', 'வள்ளுவர் நேரிசை', 'மதுரை மீனாட்சியம்மன் சந்தத் திருவடிமாலை' உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர். தொல்காப்பியப் பாயிரம், திருக்குறளுக்கு விருத்தியுரைகளையும் (விரிவான உரை) எழுதியுள்ளார்.

நீண்ட விளக்கவுரை
தொல்காப்பியப் பாயிரத்தின் (அறிமுகம்) நீளம் 15 வரிகள்தாம். ஆனால், அதற்கு அரசஞ் சண்முகனார் எழுதிய விளக்க உரையோ 246 பக்கங்களுக்கு நீண்டது. அதில் 164 குறட்பாக்களைப் பயன்படுத்திப் பல நுட்பங்களை விளக்கியிருக்கிறார். தமிழுக்குப் பல அரிய கொடைகளை வழங்கியுள்ள அரசஞ் சண்முகனார், 1915இல் மறைந்தார். அவருடைய நூல்களும் ஆய்வுகளும், இன்றும் அவரின் பெயரைப் பறைசாற்றிவருகின்றன.

அகந்தை இல்லாத பதில்
ஒருமுறை, திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவரான அம்பலவாண தேசிகரும் அரசஞ் சண்முகனாரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அரசஞ் சண்முகனாருடைய பெயரைப் பற்றி வினவினார் அம்பலவாண தேசிகர். ''சண்முகம் என்பது முருகனுடைய பெயர். அரசஞ் சண்முகம் என்றால், முருகனுக்கே அரசன் என்ற பொருள் வருகிறதே. இது சரியா?'' என்றார்.
அதற்கு அரசஞ் சண்முகனார், ''ரசம் என்றால் வீரம், சுவை, ஒளி, ஞானம் என்றெல்லாம் பொருள். முருகப் பெருமானுக்கு இந்தச் சிறப்புகளெல்லாம் உண்டு, ஆகவே, அவரை ரசஞ் சண்முகன் என அழைக்கலாம். நியாயம் என்பதற்கு முன் அகரத்தைச் சேர்த்தால் அநியாயம் என்றாகும். அதாவது, நியாயமற்ற நிலை. அதேபோல் ரசஞ் சண்முகர் என்பதற்கு முன்னால் அகரத்தைச் சேர்த்து, அரசஞ் சண்முகன் ஆனேன். அதாவது, முருகப்பெருமானுடைய சிறப்புகள் எவையும் இல்லாதவன் நான்.'' அரசஞ் சண்முகனாரின் பணிவான பதிலைக் கேட்டு அம்பலவாண தேசிகர் அவரை பாராட்டி மகிழ்ந்தார்.

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X