அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2019
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு, 35 வயதாகிறது. பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 19 வயதில், திருமணம் செய்து வைத்தனர். திருமணமான இரண்டாவது ஆண்டே, மகன் பிறந்தான். என் கணவர் கட்டட வேலை பார்க்கிறார். நானும், கூலி வேலைக்கு செல்கிறேன்.
மாமியாரும், நாத்தனாரும் எங்களுடன் உள்ளனர். மாமனார் இறந்து விட்டார். கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சொந்த வீட்டிலேயே அவ்வப்போது பணத்தை திருடுவார்.
மகனை நன்றாக படிக்க வைப்பதற்காக, அவனுக்கு, 2 வயது ஆன உடனே, சிறுக சிறுக பணம் சேமிக்க ஆரம்பித்தேன். சேமிப்பு மற்றும் அப்பா கொடுத்த தொகையையும் சேர்த்து, பெட்டியில் வைத்திருந்தேன்.
ஒருநாள், வேலைக்கு சென்று திரும்பியபோது, பெட்டி திறந்திருக்க, பணம் காணவில்லை. பதறி, மாமியாரிடம் கேட்டேன். 'எனக்கு எதுவும் தெரியாது...' என்று கூறினார்.
கணவர் வந்ததும், பணம் காணாமல் போனதை கூற, மாமியாரும், நாத்தனாரும், பேய் ஆட்டம் ஆடி, என்னை தரக்குறைவாக பேசினர்; இரவு என்றும் பாராமல், வீட்டிற்கு வெளியே தள்ளி, கதவை சாத்தினர். என் கணவரும் தடுக்கவில்லை.
வீட்டு வாசலிலேயே அமர்ந்திருந்து, விடிந்ததும், மகனுடன், தாய் வீட்டிற்கு வந்து விட்டேன். என் பெற்றோர், எவ்வளவோ சமாதானம் கூறியும், புகுந்த வீடு செல்ல மறுத்து விட்டேன். என் கணவர், வேறொரு திருமணம் செய்து கொண்டார்.
ஒரு கம்பெனியில், டிரைவராக இருக்கும், தந்தையின் உதவியுடன், மகனை படிக்க வைக்கிறேன். இப்போது, அவன், 10ம் வகுப்பு படிக்கிறான்.
தற்சமயம், கட்டட கூலி வேலைக்கு செல்வதை விட்டு, மருத்துவமனை ஒன்றில் ஆயாவாக சேர்ந்துள்ளேன்.
என் வாழ்க்கை இப்படியே போய் விடுமா... என் பெற்றோருக்கு பின், எங்கள் நிலை என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது.
வாழ்க்கையில் உயர விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள், அம்மா.
இப்படிக்கு,
உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —
இன்றைய இணைய தலைமுறை பெண்கள், கல்வி சான்றிதழ் முதல், அரசு வழங்கிய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு வரை, அனைத்து, 'ரிக்கார்டு'களையும், தன் பொறுப்பில், பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
இவற்றுக்கும் மேலாக, நிலையான தொலைபேசி எண் உள்ள, சாதாரண கைபேசி கட்டாயம். எல்லா ஆவணங்களையும் ஒளிநகல் எடுத்து வைத்திருப்பது, கூடுதல் சிறப்பு.
மகளே... இனி, செய்ய வேண்டியதை பட்டியலிடுகிறேன்...
* துணை ஒப்பந்ததாரர் ஆகி, கட்டடம் கட்டும் பணிகளை, ஆட்கள் வைத்து செய்து, பணம் சம்பாதிக்கலாம்
* உனக்கு வயது, 35 ஆகிறது. மனதையும், உடலையும் கேள், மறுமணம் தேவையா என்று. தேவை என்று தோன்றினால், பெற்றோரையும், மகனையும் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வா. குடிப்பழக்கம் இல்லாத ஆண் கிடைத்தால், மறுமணம் செய்து கொள்
* மறுமணம் தேவையில்லை என, நீ முடிவெடுத்தால், மகனின் படிப்பில் முழு கவனம் செலுத்து. அடித்தட்டு மக்களில் சிலர், அபூர்வமாய் படித்து, வேலைக்கு போய் விடுகின்றனர். பெரும்பாலானோர், அறியாமையிலும், வன்முறையிலும், சமூகவிரோத செயல்களிலும் அமிழ்ந்து கிடக்கின்றனர். மகனுக்கு, கல்வியின் முக்கியவத்துவத்தை வலியுறுத்தி, அவனை உள்ளும், புறமும் மேம்படுத்து
* பள்ளி படிப்பை முடித்திருக்கும் நீ, மேற்கொண்டு தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் படிக்கலாம். உனக்கு மேலே படிக்க விருப்பம் இருந்து, மகனும் சம்மதித்து, உன் பெற்றோரும் உனக்கான கல்வி செலவை செய்ய விரும்பினால், பி.எஸ்சி., நர்சிங்கோ, டிப்ளமோ இன் நர்சிங்கோ, கல்லுாரியில் சேர்ந்து படி
* கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பிரிவில், உனக்கு எளிதாக சேர அனுமதி கிடைக்கும். நர்சிங் படித்து முடித்து விட்டால், நீ ராணி. உன் வாழ்க்கையும், மகனின் வாழ்க்கையும், உயரிய நிலைக்கு மாறி விடும். செவிலியர் நங்கை பணி, சில விஷயங்களில் மருத்துவர் பணியை விட உயர்வானது. நோயாளிகளுக்கு செய்யும் சேவை, தெய்வத்திற்கு செய்யும் சேவைக்கு சமமானது.
'வீழ்வேன் என்று நினைத்தாயோ...' என, வானம் வெடிக்க குரல் உயர்த்தி, வெற்றிக்கான போர் பிரகடனம் செய்; வெற்றி உனதே!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-மார்ச்-201915:26:17 IST Report Abuse
மலரின் மகள் உங்களிடத்தில் எந்த தவறும் இல்லை சகோதரி. அருமையான மகனிருக்க எத்ரிகாலத்தை பற்றிய கவலை எதற்கு. நிச்சயம் அவனுக்கு தாய் படும் கஷ்டம் தாத்தாவின் கடின உழைப்பினூடே கிடைக்கும் பாசம் அறிந்திருப்பான். அவன் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக சாதிப்பதற்கு அவனுக்கு காரணம் நிச்சயம் இருக்கிறது. தன தாயை அவன் ஈன்ற பெரிதினும் பெரிதுவகை கொள்ள செய்வதே அது. தாயை அவன் மிக சிறப்பாக பார்த்து கொள்வான். நீங்கள் திறமையானவர்கள் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளுங்கள். பத்தொன்பது வயதிலேயே சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்தவர்கள். சேமிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளவர்கள். மகனின் எதிர்காலத்திற்கு என்று அப்போதே திட்டமிட்டவர்கள். உங்களின் மிக பெரிய பிரச்சினை கணவர் குடும்பம். அதிலிருந்து மீண்டு வந்து விட்டீர்கள். ஆய வேலை என்பது மிகவும் சேவைக்குரிய போற்றுதலுக்குரிய வேலை. சுத்தம் செய்வோர் இறைபணியும் தேசப்பணியும் செய்வோர்களாவார்கள். ராணுவ வீரன் நாட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது போல, சுத்தம் செய்வோரும் நாட்டை நோய் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறார்கள். மோடியே சுத்தம் செய்வோரின் பாதங்களுக்கு பாத பூஜை செய்கிறார் என்றால் அதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கு கூடுதல் பணம் தேவை படும் நிச்சயமாக. குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் விசுவின் மகள் பணக்கார நோயாளி பெண்ணிற்கு சேவை செய்து கூடுதலாக சம்பாதித்தால் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக. அதுபோல நீங்கள் உங்களுக்கு கிடகிக்கும் கூடுதல் நேரங்களில் ஹோம் விசிட் செய்து சேவை செய்து பணம் ஈட்டுங்கள். கொஞ்சம் பணத்தை சேமித்து நீங்களே கூட ஒரு முதியவர்கள் னால மையம் ஆரம்பிக்கலாம். அல்லது தவழும் குழந்தைகள் சிறு குழந்தைகளுக்கு டே கேர் மையம் அமைக்கலாம். நல்ல சிந்தனையுடன் கூடிய தீவிர எண்ணம் வாழ்வில் எப்படியும் முன்னேறுவேன் என்று சிந்தித்து செயல்படுவது உங்களை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்லும். இறைவழிபாடு உங்களின் பிரச்சினைகளை தீர்க்கும். ஜெகன் மாத நிச்சயம் இறங்குவாள். ஏழைகளுக்காகத்தானே தெரிவார்கள். ''இன்னமும் திரு உள்ளமே இறங்காதா எல்லைக்கருள் செய்ய வாராய் ஜெகன் மாதா'' என்ற பாடலை பாடி தான் எங்கள் தாய் எங்களை தாலாட்டி இருக்கிறாள். ஞாபகம் இருக்கிறது. நீங்களும் நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள். பெண்களுக்காகவே வந்த படம் 36 வயதினிலே. முன்னேற்றம் என்பது தொடர் முயற்சியின் பலனாய் வருவது. உங்களின் மனா ஆறுதலுக்கு ஒன்று. உங்களின் முன்னேற்றத்திற்கு எங்களின் பிரார்த்தனைகள். உங்களுக்காக எனது மனம் பிரார்திக்கிறது ஜெகன் மாதாவை. மனதில் வைத்து வையத்துள் வாழ்வாங்கு வாழுங்கள். பராசக்தியின் அருள் நிறைந்திருக்கட்டும்.
Rate this:
Cancel
VG.Gowtham - Boon lay,சிங்கப்பூர்
12-மார்ச்-201907:36:32 IST Report Abuse
VG.Gowtham தாயே உமது கவலையை நினைத்து வருந்துவதா, அல்லது உன் கணவனாக இருந்தவன் செயலை நினைத்து கோவம் கொள்ளவதா என்று தெரியவில்லை.. இருப்பினும் உங்கள் நிழலில் இருக்கும் உங்கள் மகனுக்காக நீங்கள் இவ்வுலகில் போட்டியிடுவதே அவனுக்கு தைரியத்தையும் தன்னபிக்கையும் மலர வழிவகுக்கும்..
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
11-மார்ச்-201920:19:30 IST Report Abuse
Naduvar இந்த காலத்து பெண்கள், எல்லாவற்றையும் கணவனுக்கு தெரியாமலே செய்யவேண்டும். முடிந்தால் வேறுஒரு வீடு எடுத்து கணவனுக்கு தெரியாமல் அங்கு ஒரு குடும்பத்தை வளர்க்கவேண்டும். மாமனார் மாமியாரை முடிந்த அளவு கணவருடன் பேச அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X