வேர்ட் டிப்ஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஏப்
2011
00:00

வேர்ட் டேபிள் வரிசை நகர்த்த
வேர்டில் பலவகையான தகவல்களைக் கொண்டு டேபிள் ஒன்றை அமைக்கிறீர்கள். பின்னர், சிறிது நேரம் கழித்து, அந்த டேபிளில் டேட்டா அமைக்கப்பட்டிருக்கும் வரிசை சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறது. இரண்டாவது படுக்கை வரிசை, மூன்றுக்கும் ஐந்திற்கும் இடையே வைத்திட எண்ணுகிறீர்கள். நான்காவ தனை இறுதியாகக் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பு கிறீர்கள். அல்லது நெட்டு வரிசையிலும் இதே போல மாற்றங்களை ஏற்படுத்தத் திட்டமிடுகிறீர்கள். மாற்றங்கள் அதிகம் தேவைப்படுவதால், புதிய டேபிள் ஒன்றை உருவாக்கி, அதில் படுக்கை மற்றும் நெட்டு வரிசைகளைக் காப்பி செய்து பேஸ்ட் செய்திட எண்ணலாம். அல்லது, இருக்கின்ற டேபிளிலேயே வரிசைகளைக் காப்பி செய்து மேலும் கீழுமாக மாற்றலாம். ஆனால் இவற்றில் குழப்பம் தான் மிஞ்சும். மேலும் காப்பி அண்ட் பேஸ்ட் செய்வதில் தவறு ஏற்பட்டால், மொத்த வேலையும் வீணாகும்.
இதற்குப் பதிலாக, வேர்ட் ஓர் எளிய வழியைத் தருகிறது. நகர்த்த வேண்டிய படுக்கை அல்லது நெட்டு வரிசையினை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அதில் கர்சரை வைத்து அழுத்தியவாறு எங்கு அந்த வரிசை அமைய வேண்டுமோ, அந்த இடத்தை நோக்கி இழுக்கவும். இப்போது வரிசையோ அல்லது அதில் உள்ள டேட்டாவோ நகராது. அதற்குப் பதிலாகச் சற்றுப் பெரிய கர்சர் ஒன்று நகர்ந்து செல்வதனைப் பார்க்கலாம். மவுஸ் கர்சரை விட்டவுடன், குறிப்பிட்ட வரிசை, கர்சரை எங்கு இழுத்துச் சென்றீர்களோ, அங்கு அதன் டேட்டாவுடன் அமைக்கப் படுவதனைப் பார்க்கலாம். படுக்கை வரிசையினை நகர்த்துகையில், தேர்ந்தெடுத்த பின்னர், அதன் இடது ஓர செல்லில் கர்சரை வைத்து இழுக்கவும். வேறு செல்லில் கர்சரை வைத்து இழுக்கையில், டேட்டா மட்டும் வரிசையின் இறுதி செல்லுக்கு எடுத்துச் செல்லப்படும்.

மெனுவிலிருந்து எஸ்கேப்:
வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட் டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம்? இதற்கு மூன்று வழிகள் உள்ளன.
1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை தட்டுகையில் கர்சர் டாகுமெண்ட்டில் விட்ட இடத்தில் நிற்கும்.
2. மெனு மீது மீண்டும் ஒரு முறை கிளிக் செய்தால் மெனு மறையும்.
3. மெனுவிற்கு வெளியே டாகுமெண்ட்டில் எங்கு கிளிக் செய்தாலும் மெனு உடனே மறைந்துவிடும்.

பாரா காப்பி:
சில வேளைகளில் நாம் உருவாக்கும் வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஒரு முழு பாராவை டாகுமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு காப்பி அல்லது கட் மற்றும் பேஸ்ட் கட்டளை எல்லாம் வேண்டாம். எந்த பாராவினை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளாக கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீகளை அழுத்தியவாறு அப் ஆரோ அல்லது டவுண் ஆரோவினை அழுத்தினால் பாரா மேலே கீழே முழுதாகச் செல்லும்.

இருவகை அடிக்கோடு:
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்ட அவற்றிற்கு அடிக்கோடு இடப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகை உள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து சொற்களின் அடியிலும் முழுமையான கோடு வேண்டும் என்றால் கண்ட்ரோல் + யு (Ctrl +U) கீகளை அழுத்த வேண்டும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் கோடு வரையப்படும்.
ஆனால் சொற்களின் அடியில் மட்டும் கோடு வேண்டும் என விரும்புபவர்கள் வேறு கீகளைக் கையாள வேண்டும். அவை (Ctrl+Shft+W) கண்ட்ரோல்+ ஷிப்ட்+ டபிள்யு.

வேர்டில் டேட்டா சார்ட்டிங்: ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள் ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது.
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப் படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப் படுத்தலாம்.

தொடக்கங்களுக்குச் செல்ல:
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத்திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத்தின் தொடக்கத்திற்குச் செல்லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் வேகமாக நினைத்த இடத்திற்கு நீந்திச் செல்ல விரல் நுனியில் உள்ள சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டீர்களா!
இப்படியும் டேபிள் உருவாக்கலாம்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் -- டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும். இதற்குப் பதிலாக படுக்கை வரிசைத் தகவல்களை ஒரு கமா இட்டு அடிக்க வேண்டும். இதே போல நெட்டு வரிசைகளையும் வரிசையாக அமைக்க வேண்டும். பின் இவற்றை செலக்ட் செய்து “Table > Insert Table”. செலக்ட் செய்து கிளிக் செய்தால் டேபிள் உருவாகி நீங்கள் டைப் செய்த தகவல்கள் எல்லாம் அந்த டேபிளில் அமர்ந்திருக்கும். அகலத்தினை சுருக்கலாம்; நீட்டலாம். இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் “Table > Table Autoformat” என்ற பிரிவில் கிளிக் செய்தால் பல வகை டேபிள்கள் உங்களுக்குக் கிடைக்கும். இதில் தேவையான டேபிள் அமைப்பைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
எழுத்துக்களின் அளவு
வேர்ட் டாகுமெண்ட்டில் எழுத்து வகையின் அளவு அமைப்பதுபற்றி பார்ப்போம். [Ctrl][Shift]P அழுத்தினால் கர்சர், பாண்ட் பெயர் இருக்கும் கட்டம் அருகே உள்ள அதன் அளவு கட்டத்தில் சென்று அமர்ந்து கொள்ளும். பின் அம்புக் குறியைப் பயன்படுத்தி, அதனைக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு நீங்கள் விரும்பும் எழுத்து வகையின் சைஸ் அளவு தெரியும் என்றால், அந்த எண்ணை அப்படியே டைப் செய்திடலாம். 1 முதல் 1638 வரை இதன் அளவை அமைக்கலாம். எழுத்தின் அளவை அரை மாத்திரை கூட கூட்டலாம். எடுத்துக் காட்டாக 11.5, 12.5 என்று கூட அமைக்கலாம்.
எழுத்தின் அளவினை அமைக்க, அதன் கட்டத்தில் கர்சரை எடுத்துச் செல்லாமலும் அமைக்கலாம். இதற்கு [Ctrl][Shift]> என்ற கீகளை அழுத்தினால், எழுத்தின் அளவு கட்டத்தில் அளவு அதிகமாவதைக் காணலாம். நீங்கள் விரும்பும் அளவு வந்தவுடன் அப்படியே விட்டுவிடலாம். இதனையே குறைக்க வேண்டும் என்றால் [Ctrl][Shift] என்ற கீகளை அழுத்தலாம்.
எழுத்தின் அளவை ஒரு பாய்ண்ட் அதிகரிக்க Ctrl+] என்ற கீகளை அழுத்த வேண்டும். இதனையே குறைக்க எனில் Ctrl+[ என்ற கீகளைப் பயன்படுத்தவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
devanaathan.g - acharapakkam,இந்தியா
09-ஏப்-201111:29:37 IST Report Abuse
devanaathan.g computer malar moolam athigam vasagargal
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X