அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

பா - கே
அன்று மாலை, குப்பண்ணா வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர் வீட்டு மொட்டை மாடியில், ஓலைக் கூரை போட்டிருந்தார். 'வெயிலுக்கு கூரை போட்டிருக்கீங்களா...' என்றேன்.
'இல்லப்பா... நாலைஞ்சு வேலையில்லா பட்டதாரி பசங்க, கோடைகால வகுப்பு எடுக்க இடம் கேட்டாங்க... மொட்டை மாடி சும்மாதானே இருக்குன்னு பயன்படுத்திக்க சொன்னேன். அந்த பசங்களே... கூரை போட்டு, இரண்டு, மூணு பெஞ்ச் போட்டு, வகுப்பு எடுக்க ஆரம்பிச்சிருக்காங்கப்பா...
'ஆங்கிலத்தில் பேச கற்று தருவது; கைவினை பொருட்கள் தயாரிப்பது, ஓவியம் வரைய, கட்டுரை எழுத என, எல்லாவற்றையும் கற்றுத் தர போறாங்களாம்பா... ஒரு மாமி வந்து, பக்தி பாடல்கள் சொல்லிக் கொடுக்கிறார்...' என்றார்.
'இன்னைக்கு என்ன வகுப்பு நடக்கப் போகிறது...' என்றேன்.
'ஆளுமை திறனை வளர்த்துக் கொள்வது குறித்து, சொல்லி கொடுக்கப் போறாங்களாம்...' என்றார்.
என்ன தான் சொல்ல போகின்றனர் என்ற ஆர்வம் ஏற்பட... ஒரு ஓரமாக சென்று அமர்ந்தேன்.
ஒரு இளைஞர், அங்கிருந்த பிள்ளைகளை பார்த்து, 'முயல் - ஆமை கதை தெரியுமா?' என்றார். அனைவருமே கையை துாக்கினர்.
'இப்போ நான் சொல்லப் போற முயல் - ஆமை கதையை கவனமா கேளுங்கள்...' என்று கூற ஆரம்பித்தார்:
முயலும், ஆமையும் ஓட்டப்பந்தயம் வைத்தன. முயல் வேகமாக ஓடினாலும், வழியில் துாங்கிவிட, ஆமை மெதுவாக சென்றாலும், துாங்கும் முயலை தாண்டிச் சென்று, பந்தயத்தில் ஜெயித்து விடுகிறது.

நீதி 1: தலைக்கனம் கூடாது. வேகத்தை விட, ஜெயிக்க, நிதானம் முக்கியம்!
பொறுமை... இனி தான், கதையே ஆரம்பம்!
தோல்வியை நினைத்து, மன வேதனை அடைந்த முயல், தன் மீதான அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையால் தான் தோத்துட்டோம் என்பது புரிந்து, மீண்டும் ஆமையை பந்தயத்திற்கு அழைத்தது. ஆமையும் ஒப்புக்கொள்ள, பந்தயம் ஆரம்பிக்கிறது. இடையில் எங்கேயும் துாங்காமல் ஓடி, ஜெயிக்கிறது, முயல்.

நீதி 2: நிதானம் முக்கியம் தான்; ஆனால், வேகம் அதைவிட சிறப்பானது!
கதை முடிந்து விட்டது என்று நினைத்தால்... அது தான் இல்லை. காலங்காலமாக ஜெயித்து வந்த ஆமையால், இந்த தோல்வியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இம்முறை, அது, முயலை பந்தயத்துக்கு அழைத்தது. இங்கு தான் ஒரு, 'டுவிஸ்ட்!' பந்தயம். 'வழக்கமான பாதையில் இல்லை...' என்று ஆமை சொல்ல, முயலும் அதற்கு ஒப்புக் கொண்டது.
பந்தையம் ஆரம்பமானது.
முயல், இடையில் எங்கேயும் இளைப்பாறாமல் ஓட, ஆமை மெதுவாக சென்றது. முயல், ஓரிடத்தில், நின்றது. பார்த்தால், அங்கே, ஒரு ஆறு. அதை கடந்தால் தான் பந்தய இலக்கை அடைய முடியும். ஆற அமர வந்து சேர்ந்த ஆமை, மெதுவாக ஆற்றை நீந்தி, கோட்டை தொட்டு, பந்தயத்தில் ஜெயித்தது!

நீதி 3: நாம் போட்டியிடும் போது, எதிரியின் பலம் அறிந்து, ஆடுகளத்தை, நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இன்னும் கதை முடியவில்லை...
ஒரு வழியாக, ஆமையும், முயலும் நண்பர்களாகி, இருவரும் பேசி, பந்தயம் வைக்க முடிவு செய்தன. ஆமை, வைத்த அதே பாதையில் தான், இம்முறையும் பயணம். முயல், வேகமாக ஓட, ஆற்றின் கரை வரை, மெதுவாக நடந்தது, ஆமை.
அதற்கு பின், முயல், ஆமையின் முதுகில் ஏறி கரை சேர்ந்ததும், மீதம் உள்ள துாரத்தை, ஆமையை, தன் முதுகில் ஏறி சுமந்தவாறு ஓடிக் கடந்தது. இருவரும், ஒரே நேரத்தில், பந்தய கோட்டை அடைந்து, வென்றன.

நீதி 4: கூட்டு முயற்சி, வெற்றி தரும்.
கணிதத்தில், 1+1=2. ஆனால், வாழ்வில், 1+1=3. அதாவது, இருவரின் பலம் சேரும்போது, அது ஒரு புது பலத்தை உருவாக்கும். அதனால் தான் நிறுவனங்களில் பணியாட்களை தேர்வு செய்யும்போது, அவர்களின், 'டீம் - ஒர்க்' திறனை முக்கியமாக சோதிக்கின்றனர்.
அலுவலக வேலையாட்களுக்கு மட்டுமில்லை, வீடுகளிலும், 'டீம் - லிவிங்' இருந்தால் தான், ஒரு குடும்பம் சிறப்பாக செயல்படும். குடும்பத்தில், அனைவரின் பங்களிப்பும் தேவை. எனவே, 'டீம் - ஒர்க்' வளர்ச்சிக்கு மட்டுமில்லை, வாழ்வதற்கும் மிக முக்கியம்.
இந்த, முயல் - ஆமை கதையில் வரும் எல்லா கருத்துக்களுமே, ஜெயிக்க முக்கியமானவை. நிதானம், வேகம், புது புது வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகிறது.
இக்கதை, இறுதியாக உணர்த்தும், 'யூ வின், ஐ வின்...' அணுகுமுறை முக்கியம். மொத்தத்தில், வெற்றி பெற இதுபோல, பல திறன்கள் இருப்பது முக்கியம். அதை கற்றுக் கொடுப்பதும், 'டீம் - ஒர்க்'கே!
வாழ்க்கையில், முயலும் ஜெயிக்கும், ஆமையும் ஜெயிக்கும்; முயலாமை மட்டுமே ஜெயிக்காது.
முயன்று தோற்றால் அனுபவம்; முயலாமல் தோற்றால் அவமானம்.
வெற்றி நிலையல்ல, தோல்வி முடிவல்ல. முயற்சியை பொறுத்து தான், வெற்றி - தோல்வி!
- என்று முடித்தார், அந்த இளைஞர்.
அங்கிருந்த அனைவருமே பலமாக கைத்தட்டி ஆரவாரித்தனர்; நானும் தான்.
வெற்றி தத்துவத்தை எவ்வளவு அழகாக விளக்கி விட்டார் என்று ஆச்சரியமடைந்தேன். அவரை பாராட்டி விட்டு வந்தேன்.


ஒரு பெரிய பணக்காரர், 'பாரில்' தண்ணியடிக்க போனார். இரண்டு சுற்று அடித்து முடித்து, பணம் கொடுக்க, பர்சை திறந்தவர், மறுபடியும் இன்னொரு, பாட்டிலை வாங்கி குடித்தார்.
மறுபடி பர்சை திறந்து பார்த்துவிட்டு, அடுத்ததாக, இன்னொரு, 'லார்ஜ்' தரச் சொன்னார். திரும்பவும் பர்சை திறந்து பார்த்து, மறுபடியும், 'ஒரு லார்ஜ்' என்றார்.
கடுப்பான சப்ளையர், 'ஏன் சார்... எவ்வளவு பெரிய பணக்காரர்... நீங்க போயி இப்டி, பர்சுல எவ்வளவு இருக்குன்னு பாத்து பாத்து சரக்கடிக்கிறீங்களே...'ன்னு கிண்டலாக கேட்டான்.
'பர்சுல பணம் எவ்வளவு இருக்குன்னு பாக்கல... ஒவ்வொரு தடவையும், பணம் கொடுக்கறதுக்காக தான், பர்சை எடுக்குறேன். எடுக்கிறபோதெல்லாம் உள்ளே பார்க்கிறேன், என் மனைவி போட்டோ தெரியுது... அந்த கடுப்புலயே இன்னொரு, 'லார்ஜ்' வாங்கினேன்...' என்றார்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
15-ஏப்-201905:30:04 IST Report Abuse
Manian நீதி கதைகளை தெனாலி ராமன் கதையிலும் காணலாம். அதாவது எந்த கதையிலும் உட்பொருளை உணர்தல் அவசியும். அதை அனுபவம் மூலமே பெற முடியும். பொதுவாக, பழமொழிகள் அனுபவ சுருக்கம்(சோதிடம் தவிற).அமெரிக்காவில் பள்ளி நாட்களில் இப்படி சேவை செய்து அதை உருதிபபடுத்தின மாணவர்களுக்கே சிறந்த கல்லூரிகளில் பொருள் உதவியுடன் அட்மிஷன் கிடைக்கிறது. ஆளுமைத்திறன் வேரொடி இருப்பதால் இப்படி படட மாணவர்களுக்கு தன்னம்கை அதிகம், மன அழுத்தமும் குறைவே. அறிவாளி,இப்படி சொல்லி இருக்கலாமே- நீதி-1. வெறும் புஸ்தக அறிவு உலகை புரிந்து கொள்ளவே. இயற்கையை புரிந்து கொண்டு, அதன் விதிகளுக்கு உட்பட்டு எப்படி வாழ வேண்டும் என்பதை பௌதிக்தில் கற்கிறோம். உதாரனமாக, உராய்வு என்ற (Friction) தடுப்பு சக்தி இல்லை என்றால் வழுக்கி விழுவோம். ஆகவே, ஈரக்காலோடு வழவழ சிமெண்டு தரையில், ஈரக்களி மண்ணில் ஓடாதே, விழுந்து அடிபடுவாய்,ஆனால், மணலில் ஓடலாம், அங்கே உராய்வு தடுப்பு அதிகம். இது போன்றே ரசாயனம், என்று கற்கிரோம். அனுபவம் மூலமே வாழக்கையை வாழ கற்றுக் கொள்ள முடியும். அதற்கு ஒரு வழிகாட்டியை முதலில் தேடவேண்டும். சுயநலமில்லாத சமுதாய பணி மூலமே அவரை காண முடியும். ஆவவே முதலில் சேவை செய்யுங்கள் (2 ) புரிதல் இல்லாவிடடாள் மாற்றுப் பாதையில் செல்ல முடியாது. ஆகவே எதை செய்தாலும் அதை வேறு வழியில் சீப்பாக செய்ய முடியுமா என்று தெறிந்து கொள்ளவேண்டும். அதை அனுபவசாலிகளிடம் பணிவாகவே கற்க முடியும். அதே சமயம் விஞ்ஞான முறையில் பொருள்களை உண்டாக்க அவற்றி மறைந்துள்ள கணித சமன்பாடுகள் மூலம் கணிக்க கூடிய தொடர்புகளை கண்டு பிடிக்கவே கணிதம் கற்கிறோம். 'எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்மென்று' - மொழியும், கணிதமும்- அதையே சொன்னார்கள். உதாரணமாக, எண் கணிதம் சுலபம். மூளையில் மொழி செயல்பாடு நடக்கும் இடது பக்கமே அதையும் கற்றுக்கொள்கிறோம். ஆனால், அல்ஜீப்ரா, கேல்குலஸ், ஜியோமெட்ரி போன்ற மேல் கணிதங்களை மூளை பூராவும் பரவிய முறையிலேயே கற்க முடியும். ஒரே மாதிரி பொளுள்களின் அதே தன்மை உள்ள பொருளுளோடு சேர்த்து கூட்டி எண்ணுவது எண்கணிதம். ஐந்து வாழைப் பழம் என்று அதை கூட்டி எண்ணுகிறோம்.அவற்றை மொழியில் "சிறப்பு பெயர்" (Proper) என்கிறோம். ஆனால், ஒரு கடையில் வாழைப் பழமும், மாம்பழமும் வாங்கினால், அவை 'பழங்கள்' என்று பொதுப் பெயர் பெரும்(Common name). அவற்றை தனி தனியாக எண்ணுகிறோம். அவரின் தனித்தனி விலையே(கூட்டி),மொத்த விலையை கொடுக்கிறோம். ஆகவே இங்கே இந்த தனிப்பட்ட எண் கணித கூடுதல்கள் நிகழ்வதால் இதை அல்ஜீப்ரா என்பார்கள்.15-ம் நூற்றாண்டுக்கு முன் இதற்கான விரிவான குறியீடுகள் மொழிகளில் இல்லை.இந்த இண்டக்டிவ்(Inductive logic ) தத்துவமே எல்லா மேல் கணிதத்திலும், வாழ்க்கையிலும் கற்பது மிக அவசியம். அதிக சம்பளம் தரும் தனியார் தொழில்களில் இந்த திறையே மிக முக்கியம். அதை கற்காவிடடால் எந்த திறைமையும், விஞ்ஞான முன்னேறமும் நடக்காது. அதற்க்கு எங்கே கல்லி சமபந்தபட்ட சொற்பொழிவுகள்(Seminar-செமினார்), கூட்டங்கள் நடந்தாலும் அங்கே சென்று கற்க வேண்டும். இன்னொரு உதாரணம் எல்லோருமே கற்க வேண்டியது. உதாரணமாக, தண்ணிர் குடிக்கா விடடால் நம்மை அறியாத மயக்கம் வரும். ஆகவே கையில் ஒரு எவர் சில்வர்(Stainless steal) தண்ணீர் பாடில் கையில் வைத்திருக்க வேணடும். ஏன் என்றால், பிளாடிக் பாடில்களில் பிசிபி(PcB)என்ற பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதால் கேன்ஸர்வரும் என்று கண்டுள்ளா்கள். இது ரசாயன பாடத்தில் கற்க முடியாது. ஆகவே, தொடர் கல்வி மிக அவசியம். உங்கள் வேலையும், வாழ்க்கையும் அப்படியே. வேறு வழி இல்லை என்றால் மட்டுமே பாட்டில் தண்ணிரை குடியுங்கள். (3 ) எதிர் பார்து வேலைக்கு போகுமிடம்,, அல்லது மனைவியை(கணவனை) தேடுமுன் அவர்களை பற்றி ஆராய தீர விசாரிக்கவேண்டும். வேலை கிடைத்தால் போதும் என்று போனால் , நமது ஆளுமையைக்கு அஎன்றால்பால் பட்டதாகவோ, குறைவாகவவோ இருந்தால் மன அழுத்தம் வரும். அதுபோலவே, பெண் தனிப் பெண்ணா(ஒரே பெண் என்றால் பிடிவாதம், சுயநலம் அதிகம்), தகப்பனானாரிடம் அன்பு கொண்டவளா, மகிழ்ச்சி முக்கியமா இல்லை பணம் முக்கியமா என்று நினைக்கிளா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் நண்பர்களை முறைப்படி கண்டு அவர்கள் மூலமேட் தெறிந்து கொள்ளவேண்டும் (ஆண்களுக்கும் இது பொருந்தும்). இதை தொடர் நட்பு மூலமே(Network ) செய்யமுடியும்.இது வேலையிலும் முக்கியம். ஆகவே உங்களை தரம் பிரித்து, முதல்படியாக இன்டர்ன் ஷிப்பக்கு(Internship)- களப் பயிர்ச்சிக்கு அடுத்த கூட்டத்தில் ஏற்பாடு செய்வோம். பணம் கிடைக்காது, பலன் கிடைக்கும் என்று ஆக்கப்பூர்வமாக, அறிவுப்பூரமாகவும் சொல்லவில்லையே என்ற மனச்சோர்வால் இவ்வளவு விரிவாக எழுத நேரிட்டது. ஆனாலும் இது ஒரு நல்ல முயற்ச்சியே. அந்துமணி சாருக்கு நன்றி.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-ஏப்-201911:35:42 IST Report Abuse
Natarajan Ramanathan இவ்வளவு விபரமான பசங்க ஏன் இன்னும் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? ஒரு வேளை ஊருக்குத்தான் உபதேசமோ?
Rate this:
Manian - Chennai,இந்தியா
17-ஏப்-201904:02:37 IST Report Abuse
Manianஅந்த பட்டதாரிகளுக்கு ஆளுமை திறமை, நடை முறையில் கார்த்தி சற்று மாறி எப்படி செய்ய முடியும் என்ற அணுவும் இல்லை. அவர்கள் சர்சையான வழி காட்டியும் தேடவில்லை- சிறந்த ஆசிரியர், நண்பர், வழிகாட்டியை கஷ்டப்படடே கண்டு பிடிக்க வேண்டும். ஆகவே இவர்களும் இதர அடுப்படி எனா செய்ய வேண்டும் என்று தெறியாது. அதைத்தான், விரிவாக நான் மேலே சொல்லி உள்ளேன். அதாவது, நடைமுறையில் எப்படி வழிகாட்ட முடியும் என்று தெரியாதவர்கள், ஆகவே தன் வேலை இல்ல பட்டதாரிகள். கடைசிப்படி வரை ஏறாத்தவர்கள். ஆனால் அதை நோக்கி செல்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X