அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

அன்பு சகோதரிக்கு —
என் வயது, 60. எனக்கு ஒரு மகன். அவன் வயது, 38. மகனுக்கு, 10 வயதாகும் போது, என் கணவர் இறந்து விட்டார்;
அவர் நடத்தி வந்த சிறிய துணிக்கடையை, நான் நடத்தினேன். அந்த வருமானத்தில் குடும்பம் ஓடியது.
மகன், பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் போதே, சிகரெட், குடி என்று பழகி, எனக்கும், ஊருக்கும் பொல்லாதவனாகி போனான்.
பள்ளி படிப்போடு, கல்வியை மூட்டை கட்டி வைத்தவன், துணிக்கடையை பார்த்துக் கொள்வதாக கூறவே, நம்பி ஒப்படைத்தேன். ஆனால், பணத்தை திருடி, மது அருந்தியும், நண்பர்களுடன் வீண் செலவும் செய்ததில், வியாபாரம் ஒடிந்தது.
இதற்கிடையில், ஒரு பெண்ணை காதலிப்பதாக கூற, வீட்டை அடமானம் வைத்து, திருமணம் செய்து வைத்தேன். கூடவே, நஷ்டமான துணிக்கடையை, மீண்டும் புதுப்பித்து கொடுத்தேன்.
சிறிது நாட்கள் நிம்மதியாக சென்றது; வேதாளம், மீண்டும் முருங்கை மரம் ஏறியது. தினமும் குடிக்க ஆரம்பித்து,
என்னையும், மருமகளையும் படாதபாடு படுத்தினான்.
ஒரு கட்டத்தில், மருமகள் வெறுத்து, விவாகரத்து பெற்று, சென்று விட்டாள். துணிக்கடையும் கையை விட்டு போனது. வீட்டுக் கடனை அடைக்கவும், உருப்படாத மகனை வைத்து வாழவும், பெட்டிக் கடை வைத்து பிழைத்து வருகிறேன்.
சும்மாவே ஊர் சுற்றி வரும் அவன், அவ்வப்போது வந்து, காசை பிடுங்கிச் செல்வான்.
தற்சமயம், ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்கும் படியும் கூறுகிறான். அந்த பெண்ணை அழைத்து விசாரித்தபோது, 'அவரை, நான் திருத்தி விடுவேன்...' என்கிறாள்.
இவ்வளவு பட்ட பின்பும், அவன் மீது நம்பிக்கை வராததால், என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒரு ஏழை பெண்ணை பலி கொடுக்க வேண்டுமா என்றும் தோன்றுகிறது. ஒரு நல்ல வழியை கூறுங்கள்.
இப்படிக்கு,
உங்கள் சகோதரி.


அன்பு சகோதரிக்கு —
கணவனை இழந்த பெண்களில், இரு வகையினர் உள்ளனர். முதல் வகை பெண்கள், ஊரே மெச்சும் வண்ணம் தன்னை பேணி, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்த்து, படிப்பிலும், வாழ்க்கையிலும் சாதிக்க வைத்து விடுகின்றனர்.
இரண்டாவது வகை பெண்கள், தங்களை சிறப்பாக பேணினாலும், குழந்தைகள் வளர்ப்பில் கோட்டை விட்டு விடுகின்றனர். நீ, இரண்டாவது வகை. உன் மகனை பொறுப்பாய் வளர்க்கவில்லை; மகனும் பொறுப்பாய் வளரவில்லை.
வாழ்க்கையில் ஒருமுறை ஏமாந்தால், ஏமாளி பட்டம் கிடைக்கும். மீண்டும் மீண்டும் ஒரே நபரிடம் ஏமாந்தால், கோமாளியாய் பரிகசிக்கப்படுவாய்.
இனி, மகன் விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுகிறேன்...
* 'மகனே... உன்னை நம்பி நான் இழந்தது போதும். தொடர்ந்து தொந்தரவு செய்து, பெட்டிக் கடையையும் இழக்க செய்து, நடுத்தெருவில் நிறுத்தி விடாதே. இனி, உனக்கு, உன் வழி; எனக்கு, என் வழி. பணம் கேட்டோ, மறுமணம் செய்து வைக்க சொல்லியோ என்னிடம் வராதே. நீ திருந்துவாய் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. தொடர்ந்து தொந்தரவு செய்தால், உன் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வேன்...' என, மனதை கல்லாக்கி கூறு உன் எச்சரிக்கையை மீறி, மகன், உன்னை தொந்தரவு செய்தால், காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடு
* மகன், கடன் வாங்கும் இடங்களில், 'என் மகனை கை கழுவி விட்டேன். அவன் வாங்கும் கடன்களுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன்...' என, ஆணித்தரமாக அறிவி
* மகனை திருமணம் செய்ய விரும்பும் பெண்ணை மீண்டும் அழைத்து, 'என் மகனை, பல தடவை நம்பி ஏமாந்து விட்டேன். தற்சமயம், அவனிடமிருந்து விலகி நிற்க தீர்மானித்து விட்டேன்.
அவன் குடி பழக்கத்திலிருந்தும், ஊதாரித்தனத்திலிருந்தும் மீண்டு விட்டானா என்பதை உறுதி செய்யாமல், அவனுக்கு கழுத்தை நீட்டாதே...
'அவனுக்கு, கொஞ்சம் அவகாசம் கொடு... அதற்குள் அவன், சொந்த காலில் நின்று விட்டால், மறுமணம் செய்து கொள். அவனுக்கு எந்த உத்திரவாதமும் தரமாட்டேன். 28 ஆண்டுகளாக அவனை திருத்த பார்த்து, ஏமாந்து விட்டேன். புதிதாக வந்து, நீ அவனை திருத்த முடியுமா யோசி...' என, அறிவுரை கூறு
* பெட்டிக்கடையில் வரும் சொற்ப வருமானத்தை, வங்கி கணக்கில் போட்டு வை. துாங்கும்போது, தலையணைக்கு கீழே மிளகாய் பொடியும், கத்தியும், பாதுகாப்புக்கு வைத்திரு
* தாயின் உதாசீனம், மகனின் தன்மானத்தை உரசி பார்க்கக் கூடும். தாயும் பணம் தரமாட்டாள், கடன் தருபவர்களும், தரமாட்டார்கள் என்ற யதார்த்தம், அவன் முகத்தில் அறையும். காதலியை மறுமணம் செய்து கொள்ள, அவளது நம்பிக்கையை சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம், மகன் முன் விஸ்வரூபித்து நிற்கும். இதனால், உன் மகன் திருந்தி, சொந்த காலில் நிற்க வாய்ப்பு இருக்கிறது
* மகன் திருந்தி, காதலியை திருமணம் செய்து, வாழ்க்கையை அமைத்து கொண்டாலும், அவனை துாரத்திலேயே வை.
உன் உடல் ஆரோக்கியத்தை கவனி. மீதி ஆயுளுக்கு, பசி இல்லாமல் வாழ, பணத்தை சேமித்து வை. கசக்கும் உறவுகளில் மூழ்கி கிடக்காமல் வெளியே வந்து, சுதந்திர காற்றை சுவாசி.
உனக்காகவும் வாழ்ந்து பார், சகோதரி.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
16-ஏப்-201905:54:43 IST Report Abuse
D.Ambujavalli சொல்வதற்கில்லை அங்கங்கு வரும் செய்திகளில் குடிக்கவோ, ஊதாரி செலவுக்கோ பணம் தராத தாய், தந்தையரைக் கொல்கின்றனரே இந்தப் பெண்மணி தனக்கு நம்பகமான உறவினரைத் தன்னுடன் தங்க வைத்துக்கொள்வதே நல்லது
Rate this:
Share this comment
Cancel
Sanakkiyan - Erode,இந்தியா
15-ஏப்-201916:06:50 IST Report Abuse
Sanakkiyan //தலையணைக்கு கீழே மிளகாய் பொடியும், கத்தியும், பாதுகாப்புக்கு வைத்திரு// உறுப்புட வழிகேட்டா இந்தம்மா ஒழிஞ்சுபோகத்தான் வழி சொல்லும். முதலில் மதுவைய் நிறுத்த சிகிச்சை எடுக்க சொல்லுங்கள். ஆறுமாதம் குடிக்காமல் இருந்து காட்டினாள் திருமணம் செய்து வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
15-ஏப்-201905:53:25 IST Report Abuse
Manian துணிச்சலான, ஆனால் செய்ய வேண்டிய காரியம்தான். அந்த தாய்க்கு பரிதாபப்படத்தான் முடியும். மன்னனின் ஒய் குரோமோச்சம் தாயிடம் உள்ளதால், அவள் இறக்கப்படுகிறாள். அந்த பவுத்தனுக்கு வேறு மாதிரி மரபணு உள்ளது. அவனை திருத்த முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X