ஒரு ஊர்ல ஒரு பாட்டி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

'என்னையும் சேர்த்து அவருக்கு, 30 சொந்தக்காரங்கம்மா'ன்னு என் மகன் அன்னைக்கு சொன்னது, இன்னும் என் மனசை நிறைச்சு கிடக்குது!' - சாரதா

மகன்னா பாட்டிக்கு கொள்ளை பிரியமோ?
பின்னே... எல்லாமே எனக்கு அவன்தானத்தா! லேசா எனக்கு உடம்புக்கு முடியலைன்னாலும், என் புள்ள பதறிப் போயிடுவான்!
என்னை விடு... 2015ல அவங்க அப்பாவுக்கு, ரொம்பவே உடம்புக்கு முடியாம போயிடுச்சு.
'புற்றுநோய் முத்திப் போயிருச்சு'ன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. 'அப்பாவுக்கு விஷயம் தெரிய வேண்டாம்'னு என்கிட்டே சொன்ன பழனி, தன் மகன் மாதிரி தகப்பனை பார்த்துக்கிட்டான். என்ன ஒண்ணு... மகன் பாசத்தை அனுபவிக்க அவருக்கு கொடுத்து வைக்கலை. அடுத்த ரெண்டு மாசத்துலேயே போய் சேர்ந்துட்டாரு.
பிள்ளை பெருமை பேசும், 60 வயது சாரதா பாட்டிக்கு, திருநெல்வேலி மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரம் வாழ்விடம். திருமணத்திற்குப் பின், 33 ஆண்டுகளாக இவ்வூரில் வாழ்ந்து வந்தாலும், இப்போது தான் ஊர் தாண்டி பரவியிருக்கிறது பாட்டியின் பெயர். காரணம்... மகன் பழனிகுமாரின் குணம்.
ஆமாத்தா... குணத்துல என் புள்ள தங்கம். ஆதரவில்லாம அனாதைப் பிணமா கிடந்தவரை, கூட்டாளிகள் உதவியோட நல்லடக்கம் பண்ணணும்ங்கிற மனசு எத்தனை பேருக்கு வரும்; 'என்னையும் சேர்த்து இன்னைக்கு அவருக்கு, 30 சொந்தக்காரங்கம்மா'ன்னு, யாரோ ஒருத்தரை நல்லடக்கம் பண்ணிட்டு வந்து என் புள்ள சொன்னது, இன்னைக்கும் எனக்குள்ளே சுத்திட்டே இருக்கு!

கடந்த ஜனவரி 2ம் தேதி, என்ன நடந்துச்சு பாட்டி?
பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிக்கணும்னு சுண்ணாம்பு வாங்க கிளம்பினான். போனவன், பிணமாத் தான் வீட்டுக்கு வந்தான். பைக்ல போறப்போ ஒரு விபத்து; 'மூளைச்சாவு'ன்னு டாக்டருங்க சொன்னாங்க. பித்துப் பிடிச்ச மாதிரி ஆயிருச்சு! 'உங்க மகனோட உடல் உறுப்புகளை தானமா கொடுத்தீங்கன்னா, ஏழு பேர் உயிர் வாழ்வாங்க'ன்னு டாக்டருங்க கேட்டதும், 'சரி'ன்னு சொல்லிட்டேன்.
நாலு பேருக்கு உதவுறது என் பழனிக்கு ரொம்ப பிடிக்... (கண்ணீர் முட்டிக் கொண்டு வர, வார்த்தை தடைபடுகிறது).

இனி...
இனிமே என்ன... அவருக்கு அப்புறம் எல்லாமும் என் மகன் பழனிகுமார் தான். இம்புட்டு நாள் அவன் கூட இருந்தேன்; இனி மிச்சமிருக்குற காலம், அவன் ஞாபகங்களோட வாழணும். ப்ப்ச்ச்ச்... 39 வயசான என் புள்ளைக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்க முடியாம போயிடுச்சு; அந்த வருத்தம் தான், இன்னும் நெஞ்சடைச்சுட்டு நிற்குது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X