காதலுடன் கண்ணம்மா! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements
காதலுடன் கண்ணம்மா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஏப்
2019
00:00

அன்பிற்குரியவளே...
கலைநயமிக்க பொருட்கள் கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு அல்லாமல், மனதிற்கும் பேரமைதி தரும் என்பதை நீ உணர்ந்திருக்கிறாயா?

கொஞ்சம் கற்பனை செய்து பார். இரவு நேரம்; உன் படுக்கை அறை; தலையணையை அணைத்தபடி நீ; அறை முழுக்க நிரம்பித் ததும்பியபடி இளையராஜாவின் இசை;
அதற்கு இணையாய் உன்னை மயக்கியபடி, அறை முழுக்க வசீகரமாய் படர்ந்திருக்கும் மோக ஒளி; என்ன... சிலிர்க்கிறதா இதயம்; 1,250 ரூபாய் மதிப்புள்ள இந்த, 'மெட்டல் வால் ஹேங்கிங் கேண்டில் லைட்' இப்பரவச அனுபவத்தை நிச்சயம் உனக்குத் தரும்.
பூஜையறை. நீ தீபாராதனை காட்ட, உன் முன்னால் இருக்கும் கடவுள் உருவங்களையும், உன்னையும் சேர்த்து வணங்கியபடி, உன் பின்னால் உன் குடும்பம். அனைவருக்கும் திலகமிட்டு நீ அன்பு வழங்குகையில், உன் மனதிற்கு இணையாய், வீடு முழுக்க மணம்; உபயம்... கேன்டில் வித் ப்ராகரன்ஸ் ரூம் ப்ரெஷ்னர்; மேலே... மணக்கும் எண்ணெய், கீழே... எரியும் மெழுகுவர்த்தி; இதுவே 'கமகம' ரகசியம்!
இப்படி, உள்ளம் கவரும் வகையிலான ஐரோப்பிய இறக்குமதி செராமிக் பொருட்கள் இங்கே நிறைய உண்டு!

நட் ஆர்ட், திண்டுக்கல். 94430 25002

காதலுடன்...
கண்ணம்மா.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X