யூடியூப் ஸ்டார்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
00:00

உங்கள் கையில் ஹெச்டி தரத்தில் ஒரே ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். உங்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பதிவுசெய்து இணையத்தில் பகிரலாம். அவை, சுவாரசியமாக இருந்தால், நீங்களும் பிரபலமாக வாய்ப்புண்டு. அப்படி யூடியூபில் வீடியோக்களை பதிவுசெய்து சாதனையாளர்களாக வளர்ந்தவர்களைப் பார்ப்போம்.

ராபி நோவக்
அமெரிக்காவைச் சேர்ந்த ராபி நோவக், பாடகர், கவிஞர், சுயமுன்னேற்றப் பேச்சாளர் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். 2012ஆம் ஆண்டு தொடங்கி சோல்பான்கேக் வலைத்தளத்தில் கிட் பிரசிடெண்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். "அன்பு உலகை மாற்றும். உலகை அன்பால் நிறைப்போம்” எனும் குழந்தை அதிபர், மரபணு நோயான ஆஸ்டியோ ஜெனிசிஸ் இம்பர்ஃபெக்டா (osteogenesis imperfecta) வினால் பாதிக்கப்பட்டவர். இவரை 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
https://www.youtube.com/playlist?list=PLzvRx_johoA-YabI6FWcU-jL6nKA1Um-t&feature=plcp


ஈவன் (Evan)
ஈவன் தன்னுடைய யூடியூப் சேனல் (Evantube) மூலம், உலகம் முழுக்க செலிபிரிட்டி நாயகனாகி இருக்கிறார். எப்படி? சந்தைக்கு வந்த புதிய பொம்மைகளை விமர்சிப்பது, ஏன்? எதற்கு? எப்படி? வகையறா வீடியோக்களை பதிவிட்டு 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். ஈவனின் தந்தை திரைப்படக்கலைஞர் என்பதால், வீடியோக்களுக்கு அவரே இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர். வீடியோக்களுக்கு ஈவன் மற்றும் அவரது தங்கை ஜில்லியன் காம்பியர்களாக மாறி அசத்துகின்றனர். இவர்கள் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
https://www.youtube.com/channel/UCHa-hWHrTt4hqh-WiHry3Lw

மியா (MYA)
பாட்டிலில் முட்டை, ரூபி க்யூப் சோதனை, பாட்டில் தெர்மாமீட்டர் என சிறிய ஆச்சரியமூட்டும் அறிவியல் சோதனைகளை மியா (FullTimeKid) செய்து காட்டுகிறார். இவரது நிகழ்ச்சி பிபிஎஸ் (PBS) டிவி சேனலிலும் ஒளிபரப்பாகி உள்ளது. 78 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களை தனது குறும்பான, அறிவுப்பூர்வ சோதனைகளுக்குப் பரிசாகப் பெற்றுள்ளார் மியா.
https://www.youtube.com/channel/UC0Grg2zrx1qlJtipR8_7GiQ

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X