வைகறை துயில் எழு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
வைகறை துயில் எழு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
00:00

திருப்பூர், வி.கே.அரசு பள்ளியில், 2010ல், 10ம் வகுப்பு படித்தேன். அப்போது நடந்த நிகழ்வு!
எங்கள் வகுப்பு ஆசிரியர், கல்யாணசுந்தரம். நேரம் குறித்து, ஒருநாள், பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, 'காலையில் எத்தனை மணிக்கு எழுகிறீர்கள்...' என, கேட்டார்.
மாணவர்கள், பலவிதமாக பதில் கூறினர். நான் எழுந்து, 'நீங்க எத்தனை மணிக்கு எழுறீங்க சார்...' என்றேன்.
அவர் புன்னகையுடன், 'அதிகாலை, 4:30 மணிக்கு தினமும் எழுவேன்; காய்கறிகள் நறுக்குவது, சமையலில் உதவுவது, கடையில் பொருட்கள் வாங்கி வருவது... போன்ற, சிறு பணிகளை செய்வேன். இதனால், குடும்பத்தினர் அதிக பாசத்துடன் இருப்பர்.
'அதிகாலை எழுவதால் இவற்றை செய்ய, நேரம் கிடைக்கும்; நீங்களும், குடும்பத்தினருக்கு, சிறு உதவிகள் செய்து அன்பை பெறுங்கள்...' என்றார்.
அந்த வார்த்தைகள், பசுமரத்தாணி போல், மனதில் பதிந்தது. அன்று முதல், அதிகாலை எழுந்து, வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவுவேன்; இப்போது, 26 வயதாகிறது; மனைவிக்கு, உதவுகிறேன்.
ஒழுக்க பாடத்தை, கற்றுத் தந்த ஆசிரியரை, மனதில் கொண்டுள்ளேன்.
- வ.ராஜலிங்கம், திருப்பூர்.
தொடர்புக்கு: 97895 07049

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X