அதிமேதாவி அங்குராசு! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
00:00

சீர்மை மறவேல்!
கார் வாங்குவது, வாழ்வில் ஒரு கனவை நனவாக்குவது! குடும்பத்தோடு குதுாகலமாக பயணிக்கலாம்! புதிய கார் வாங்க முடியாவிட்டால், பழயதாக ஒன்று போதும்.
பழைய கார் வாங்கும் போது...
* சிறந்த மெக்கானிக்கை தேர்ந்தெடுத்து ஆலோசனை பெறுங்கள்; அவர், கேட்கும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டாம்; அப்போது தான், நல்ல கார் கிடைக்கும்
* காரை, 'ஸ்டார்ட்' செய்யும் போது, இன்ஜின் சத்தத்தைக் கொண்டே, மெக்கானிக் அதன் திறனை மதிப்பிடுவார்
* குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப, காரை தேர்வு செய்யவும்; அலுவலகம் சென்று வர மட்டும் எனில், சிறிய ரக கார் போதும்
* பழைய கார்களின் உத்தேச விலையை, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்
* கார் நிறுவனங்கள் விற்கும், பழைய காரை, நம்பி வாங்கலாம்; சுலப தவணையில், குறைந்த வட்டிக்கு கடனும் கிடைக்கிறது; ஓராண்டு உத்தரவாதமும் கிடைக்கும்
* ஆர்.சி.புத்தகம், சாலை வரி வில்லை, வாகனம் மீதான கடன் போன்றவற்றை, சரி பார்க்கவும்; பதிவு எண், இன்ஜின் எண் ஆகியவற்றை கவனமாக பரிசீலிக்கவும்.

பஞ்சரை கவனி...
இரு சக்கரம் வாகனம், பஞ்சராகி விட்டால், தள்ளி செல்வது சிரமம்.
பொதுவாக, வாகனங்கள் பஞ்சராகி விட்டால், ஓரமாக நிறுத்திவிட வேண்டும். டயரில், ஆணி குத்தியிருந்தால், உடனே அகற்றி விட வேண்டும்; அப்படி செய்யாவிட்டால், புதிய, 'டியூப்' மாற்றும் நிலை ஏற்படும்.
காற்றடிக்கும், 'மவுத்' பகுதியில், 'செக் நட்'டை கழற்றி, டியூபை உள்ளே தள்ள வேண்டும்; இதன் மூலம், பஞ்சரான, டியூப் நைந்து போவதை தடுக்கலாம். பஞ்சர் போடுபவரை, அழைத்து வந்து, சரி செய்வதே சிறந்தது.

சக்கர நெறி நில்!
தென்மேற்கு ஆசியா கண்டப்பகுதியில், மெசபடோமியா நாட்டில், 3200 ஆண்டுகளுக்கு முன், சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. சக்கரங்கள் பொருத்திய ரதங்களை, அங்கு பயன்படுத்தினர். துவக்கத்தில், காளை மாடுகள், ரதத்தை இழுத்து சென்றன. அவற்றில், இரண்டு சக்கரங்கள் மட்டுமே இருந்தன.
ஐரோப்பா கண்டம், ஜெர்மன் நாட்டை சேர்ந்த, கார்ல் பென்ஸ் என்பவர், 1885ல், கார் கண்டுபிடித்தார். பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கார்கள், 20ம் நுாற்றாண்டு முதல் தான் தயாரிக்கப்படுகின்றன.
காரில் அணிந்து கொள்ளும், 'சீட் பெல்ட்' ஐரோப்பாவில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த, நில்ஸ் பாப்லிம் என்பவரால், 1959ல் கண்டுபிடிக்கப்பட்டது.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X