கடலுக்குள் அதிசயங்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
00:00

கடலில் தான் உலகின், 97 சதவீதம் தண்ணீர், உள்ளது. கடலின் அடியில் தான், எத்தனை எத்தனை உயிரினங்கள்...

திமிங்கலம்
உலகின், மிகப் பெரிய கடல் வாழ் உயிரினம் திமிங்கலம். இதன் நாக்கு மட்டும், நான்கு டன் எடையுள்ளது; வால், மூன்று மீட்டர் நீளம் இருக்கும். தண்ணீருக்குள் அதிக பட்சமாக, இரண்டு மணி நேரம் வரை தாக்கு பிடிக்கும். 33 மீட்டர் நீளம் வரை இருக்கும். இது, பாலுாட்டி வகை.
நீல திமிங்கலம் என்ற வகை, தினமும் குட்டிக்கு, ஒரு டன் பால் கொடுக்கும். பாட்டில் மூக்கு திமிங்கலத்துக்கு, பேசுவதை புரியும் திறன் உண்டு.

கடல் சிங்கம்!
பசிபிக் கடலில் உள்ள கலபாகஸ் தீவுகள், கடல் சிங்கங்களுக்கு, பிரபலமான இடம். இங்கு, 5,000 க்கும் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் நீந்தும்.

வால்ரஸ்
பனி உறைந்த கடல்பகுதியில் வசிக்கும் உயிரினம், வால்ரஸ். பிரமாண்ட உடல் அமைப்பைக் கொண்டது; இரண்டு பற்கள் வெளியே நீட்டியிருக்கும். இந்த பற்களுக்கு, 'டிமான்ட்' அதிகம். இதற்காகவும், மாமிசத்திற்காகவும் கொல்லப்படுகின்றன.

சுறா!
கடலில், 400 வகை சுறாக்கள் உண்டு. வெண் சுறா, மனிதர்களை தாக்கும். மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் நீந்தும். புலி சுறா என்ற வகையும் உண்டு; இவற்றின் குடலை ஆய்வு செய்த போது, தகடுகள், பழைய டயர், எண்ணெய் கேன்கள் இருந்தன. இவற்றால், 50 மீட்டர் துாரம் வரை மட்டுமே பார்க்க இயலும்.
வங்காள விரிகுடா மற்றும் இந்திய பெருங் கடல் பகுதிகளில், பால் சுறாக்களை காணலாம். இவற்றைக் கொன்று, எண்ணெய் தயாரித்து விற்கின்றனர்.

- கிருத்திகா

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X