லார்டு பூனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2019
00:00

வீட்டில் தொல்லை தந்த எலிகளைப் பிடிக்க, பூனை வளர்த்தான், ஒரு உழவன். அந்த பூனைக்கு வயதாகி விட்டது; எலிகளை துரத்தி பிடிக்க முடியாமல் திணறியது. எனவே, உழவன் மனைவி வைத்திருந்த, பால், தயிர், தின்பண்டங்களைத் திருடுவதை வழக்கமாக்கிக் கொண்டது.
எரிச்சல் அடைந்த உழவனின் மனைவி, 'பெரிய லார்டு இது... ஓடி, ஆடி எலியைப் பிடிக்காத சோம்பேறி... இதை, காட்டுல விட்டுடுங்க... பயிர் மிஞ்சாவிட்டாலும், பாலாவது மிஞ்சும்...' என, கோபித்தாள்.
உழவனும், பூனையை காட்டில் விட்டு வந்தான்.
அந்த லார்டு பூனையை, ஒரு பெண் நரி கண்டது. அந்த நரிக்கு, பூனையின் அழகும், கம்பீரமும் பிடித்து போக, திருமணம் முடித்துக்கொண்டது. வேட்டையாடி உணவுகளை தந்து, பூனையை கவனித்துக் கொண்டது.
அதேசமயம், பன்றி, கரடி போன்ற மிருகங்களின் கண்ணில் பட்டால், பூனை அதோகதியாகிவிடும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தது. எனவே, அந்த மிருகங்களை, வீட்டுப் பக்கம் வராமல் பார்த்துக் கொண்ட நரி, 'லார்டு பூனை கொடூரமானது...' என, பயமுறுத்தி எச்சரிக்கை விடுத்திருந்தது.
நரியின் நண்பர்கள், லார்டு பூனையை பார்க்க ஆசைப்பட்டன; ஆனாலும், அதன் கொடூரத்தை எண்ணி, பயந்து நடுங்கின. ஆசை விடவில்லை. அவை, தீவிரமாக யோசனை செய்தன. நரி, பூனை திருமணத்தைக் கொண்டாடும் விதமாக, ஒரு விருந்து ஏற்பாடு செய்து, அழைக்க முடிவு செய்தன. ஆனால் அதை, நரியிடம் சொல்வது யார்...
ஓநாய் நடுங்கியபடி, 'எனக்கு வயதாகி விட்டது; லார்டு பூனை பார்த்து விட்டால் தப்பி ஓடக் கூட முடியாது...' என, மறுத்தது.
'எனக்கு உடல் நலமில்லை...' என்று கூறி, பன்றி ஜகா வாங்கியது.
'முன்பு போல ஓட முடியாது! காலில் அடிப்பட்டு விட்டது...' என, ஒரு காரணம் சொன்னது, கரடி. எல்லா மிருங்கங்களும் சாக்குப் போக்கு சொல்லி ஒதுங்கிக் கொண்டன.
முயல் வேறு வழியின்றி, சம்மதித்து, நரி - லார்டு பூனை தம்பதியை விருந்துக்கு அழைக்க சென்றது.
வீட்டு வாசலில் நடுங்கியபடி நின்ற முயலைப் பார்த்து, ஆச்சரியப்பட்டது நரி. தயங்கியபடி விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்தது முயல். இதைக்கேட்டு, நரியின் நாக்கில் எச்சில் ஊறியது.
உணவை மறுக்க முடியாமல், 'ரொம்ப நல்லது... விருந்துக்கு வருகிறோம்; நாங்க விருந்து சாப்பிடும் போது, நீங்க எல்லாரும் ஒளிந்துக் கொள்ள வேண்டும்; லார்டு பூனை, உங்களைப் பாத்தால் அவ்வளவுதான்... செத்தீங்க... ஜாக்கிரதையா இருங்க...' என, எச்சரித்து ஒப்புக் கொண்டது.
நரியிடம் விடை பெற்ற முயல், ஓட்டமாய் ஓடி விவரத்தை கூறியது.
விருந்து நடக்கும் போது, மிருகங்கள், பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள திட்டமிட்டன. கரடி, ஒரு மரத்தில் ஏறியது. பன்றி, அடர்ந்த மரத்தின் பின் ஒளிந்தது; ஓநாயும், முயலும் புதரில் பதுங்கி, 'திக்...திக்' நெஞ்சுடன் காத்திருந்தன.
லார்டு பூனையும், நரியும் வந்தன; விதம் விதமாக உணவைக் கண்ட பூனை, உற்சாகமாக, 'மியாவ்... மியாவ்...' என, கத்தியபடி உண்ணத் துவங்கியது.
புதரிலிருந்த ஓநாய், 'அடேங்கப்பா... என்ன கொடூர குரல்! எவ்வளவு வேகமா சாப்பிடுது! நாம் எதிரிலிருந்தால் தீர்ந்தோம்! நல்ல காலம் பதுங்கியிருக்கிறோம்...' என்றது.
அதை ஆமோதித்தது முயல்.
வயிறு புடைக்க உண்ட பூனை, சற்று ஓய்வெடுத்தது.
அப்போது-
மரத்தின், மறைவிலிருந்த பன்றியின் வாலை, கொசு ஒன்று கடித்தது. பன்றி, வாலை அசைத்து, கொசுவை விரட்ட முயன்றது.
ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பூனைக்கு, அந்த வால், எலி போல் தெரிய, வால் பக்கம் பாய்ந்தது. ஆனால், குறி தவறி, பன்றி முகத்தில் மோதியது. பூனை தாக்குவதாக எண்ணி அதிர்ந்த பன்றி, 'ஐயோ... செத்தேன்...' என, அலறியபடி ஓடியது.
ஆனால், பன்றியைக்கண்டு அஞ்சிய பூனை, நடுங்கியபடி, மரத்தில் ஏற முயன்றது!
'பூனை, தன்னைக் கொல்ல தான் மரத்தில் ஏறுகிறது...' என, எண்ணிய கரடி, மரக்கிளை உச்சியில் ஏறி, தப்ப முயன்றது. அதன் உடல் கனம் தாங்காமல், கிளை முறிந்து, புதரில் மறைந்திருந்த ஓநாய் மீது விழுந்தது. அதிர்ச்சி அடைந்த ஓநாய் ஒன்றும் புரியாமல், 'தப்பித்தோம்... பிழைத்தோம்...' என, ஓடியது; அதன் பின்னால், முயல் விழுந்தடித்து ஓடியது.
பயத்தால், மிரண்டு ஓடிய மிருகங்கள், மறுநாள் ஒரு இடத்தில் கூடின.
'லார்டு பூனை பயங்கரமானது தான், அனைவரையும் கொல்ல பாய்ந்ததே... பார்க்கத் தான் சிறியது...' என, கலக்கத்துடன் பேசிக்கொண்டன.
அதன் பின் அவை, பூனை இருந்த பக்கமே தலைகாட்டவில்லை. காட்டில், நரியும், லார்டு பூனையும் ஏகபோகமாக வாழ்ந்தன.
குட்டீஸ்... அச்சத்துடன் வாழ்பவர்கள், இந்த மிருகங்கள் போல, உண்மையை அறியாதவர்கள். அச்சம் தவிர்த்து, வாழ பழக வேண்டும்.
- மல்லிகா குரு

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X