இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:00

குழந்தைகளை பட்டினி போடாதீர்!
சமீபத்தில், நண்பனை பார்க்க சென்றிருந்தேன். அவன், மனைவி மற்றும் பெற்றோர் சோகமாக காணப்பட்டனர்.
படுக்கையில் கிடந்த, அவனுடைய நான்கு வயது குழந்தைக்கு, குடும்ப மருத்துவர் சிகிச்சையளித்து, நண்பனை தனியே அழைத்து, எச்சரிப்பது போல் ஏதோ சொல்லிப் போனார்.
என்னவென்று விசாரிக்க, அவன் சொன்ன சேதி, என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
சரிவர பேச தெரியாத குழந்தை, அறியாமல் செய்த சிறு தவறுக்காக, அவன் மனைவி, நாள் முழுக்க, சாப்பாடு தராமல், பட்டினி கிடக்குமாறு தண்டனை கொடுத்துள்ளார்.
எவ்வளவு கெஞ்சியும் சாப்பிட அனுமதிக்காததால், ஒரு கட்டத்தில் குழந்தை மயங்கி விழுந்திருக்கிறது. அதன்பின், குடும்ப மருத்துவரை வரவழைத்து காப்பாற்றி இருக்கின்றனர்.
'தவறு செய்யும் குழந்தையை கண்டிக்கலாம்; ஆனால், தண்டிக்க கூடாது. அதிலும் குறிப்பாக, பட்டினி போடுவது போன்ற தண்டனையை தரக்கூடாது...' என்று, அந்த மருத்துவர், நண்பனை எச்சரித்திருக்கிறார்.
இனியாவது, இதுபோன்று குழந்தைகளை தண்டிக்கும் பெற்றோர், திருந்துவரா?
- எஸ்.விஜயன், உளுந்துார்பேட்டை.

சுயதொழில் என்றும் கைவிடாது!
என் தோழிக்கு, இரண்டு பிள்ளைகள். கணவர், தனியார் துறையில் வேலை பார்த்து வந்தார். குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்த நிலையில், கணவருக்கு திடீரென்று வேலை போய் விட்டது. பிள்ளைகள் இருவரும், தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். சென்னையில் வசிப்பதால், பணம் போதாமல், பல பிரச்னைகள், தோழியின் தலையில் இடியாய் விழுந்தது.
கவலைப்பட்டால், அது நம்மை ஜெயித்து விடும். அதை விரட்டியடிப்போம் என்றெண்ணி, கணவரிடம், 'நாம் ஏன் டிபன் கடை வைக்கக் கூடாது...' எனக் கூறினாள், தோழி.
கவுரவ பிரச்னையாக கருதி, தடுக்க பார்த்தார்.
கணவர். ஆனாலும், விடாப்பிடியாக களத்தில் இறங்கி, வேலை பார்க்க துவங்கினாள், தோழி.
வேறு வழியில்லாமல் கணவரும், பக்கபலமாக இருக்க, இன்றோ, மாத வருமானம், 60 ஆயிரம் ரூபாய் ஈட்டி வருகிறாள். தோழியின் பிள்ளைகள், முன்பு படித்த பள்ளியை விட, பெரிய பள்ளியில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெண்கள், தன்னம்பிக்கையுடன் இருந்தால், எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம்.
- எஸ்.சித்ரா சீனிவாசன், சென்னை.

கைப்பேசியை காப்பாற்றிய, அழைப்பு மணி!
கணவர் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், மதியத்திற்கு மேல், வீட்டில் பழுதடைந்த மின்விசிறியை சரி செய்து கொண்டிருந்தான், பழுது பார்ப்பவன்.
சமையல் அறையில் பணி முடித்து நான் வந்ததும், பழுது பார்த்து விட்டதாக, என்னிடம் கூலியை வாங்க வந்தபோது, அவன் பையிலிருந்து கைப்பேசி ஒலித்தது. அந்த அழைப்பு, என் கைப்பேசி ஒலியை ஒத்திருந்ததால், சந்தேகத்துடன், அவன் பையை ஆராய்தேன்; 'திரு திரு'வென்று விழித்தான்.
அவன் பையிலிருந்த என் கைப்பேசியை மீட்டேன்; என் கணவர், அழைப்பு விடுத்திருந்தார்.
எனவே, வீட்டில் தனியாக இருக்கும்போது, வெளியாட்களை தவிர்க்க வேண்டும். அவசர தேவைக்காக அழைத்திருந்தால், இதர பணிகளை ஒதுக்கி, பணி முடியும் வரை, அந்த இடத்தை விட்டு நகராமல் கவனிக்க வேண்டும் என்ற படிப்பினையை, இச்சம்பவம் மூலம் தெரிந்து கொண்டேன்.
- மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
23-ஏப்-201914:14:00 IST Report Abuse
pattikkaattaan 1. குழந்தைக்கு சூடு வைக்கும் குரூர தாய்மார்களும் இருக்கிறார்கள்.. 2 . நாலுபேருக்கு சாப்பாடு போட்டால் வருமானமும் வரும், நமக்கும் சோறு கிடைக்கும்.. 3, வீட்டில் ஆண்கள் இல்லாதபோது முன்பின் தெரியாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பது ஆபத்தை விளைவிக்கும் .. எங்கள் வீட்டில் நான் ஊருக்கு போகும்போதுதான் பெரும்பாலான ரிப்பேர் வேலை நடக்கும் ..மிக அவசரம் என்றால் நண்பர்கள் உதவுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஏப்-201920:13:34 IST Report Abuse
Natarajan Ramanathan தான் பெற்ற குழந்தையை பட்டினி போடும் அளவுக்கா ஒரு பெண்ணால் கொடுமை செய்யமுடியும்? நம்பவே முடியவில்வை.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201911:58:39 IST Report Abuse
Manianஇது அமெரிக்காவிலும் நடந்துள்ளது. பெற்றோர்கள் இருவரும் இருபத்து வருஷ சிறைவாசம் செய்வார்கள். விரும்பாமல் பெற்றுக்கொள்ளும், தகுதி இல்லாத தாய்கள் இதைசெய்வார்கள். இது ஒருவித மன வியாதி....
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-ஏப்-201911:34:55 IST Report Abuse
Girija @மைதிலி கிருஷ்ணமூர்த்தி, சென்னை, உங்கள் கடிதம் ஆச்சிரியமாக உள்ளது, அதுவும் சென்னையில் இருந்துகொண்டு, நாளும் தனியாக வீட்டில் இருக்கும் பெண்கள் எப்படி கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் வெளியாகும்போது, வெளியாளை வீட்டில் வேலை செய்ய சொல்லிவிட்டு நீங்கள் சமையல் அறையில் புகுந்துகொண்டது ? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X