அந்துமணி பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2019
00:00

ப.லட்சுமி, தேனி: என் மகன், 6ம் வகுப்பு தான் படிக்கிறான்; பொய் பேசுவதே அவன் உலகாக இருக்கிறது... நான் என்ன செய்வது? ஏழை குடும்பத்தவள் நான்...
சபாஷ் சபாஷ்... நீங்கள், பெரிய, 'கோடீஸ்வரி' ஆகப் போகிறீர்கள்! உங்கள் மகன், இன்னும் சில ஆண்டுகளில், பெரிய அரசியல் தலைவர் ஆகப் போகிறார்!

*ஆர்.வெங்கடேசன், சென்னை: 'வாரமலர்' இதழில், வாசகர்களின் படைப்புகள் வெளிவர, சந்தாதாரர்களாக இருப்போருக்கு தான் முன்னுரிமையா?
நமது இதழில் மாத சந்தா, முன் கூட்டியே தரும் வருட சந்தா... அதிலும், பாதியே முன் கூட்டியே தந்தால் போதும் என்ற, சில நாளிதழ்கள் போன்ற திட்டங்கள், ஏதும் இல்லையே! பின் எப்படி, அவர்கள் பெயர், முகவரி தெரிய வரும்?
வெளியிட தகுதி உள்ள படைப்புகளுக்கே முன்னுரிமை!

கே.கீதா, சென்னை: அந்துமணியாரே... உம்மிடம் மிகப்பெரிய சொத்து ஏதும் இருக்கிறதா?
ஹி... ஹி... ஏன் இல்லாமல்! 'கேரியர்' வைத்த, 'அட்லஸ் சைக்கிள்' இருக்கிறதே! இதுவே, எனக்கு, பெரிய சொத்து!

எம்.விக்னேஷ், மதுரை: வரும் கோடையில் இருந்து, மக்கள் எப்படி தப்பிக்கப் போகின்றனர்?
வசதியுள்ளவர்கள், நம் நாட்டில் உள்ள, ஏராளமான கோடை வாசஸ்தலங்களுக்கு சென்று விடுவர்! மிக வசதி படைத்தோருக்கு, ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரும்!
கோடை காரணமாக, 'ஷவர்' தண்ணீர் நின்று விட்டதால், வாளியில் தண்ணீர் பிடித்து, குளித்து சமாளிக்கிறேன்; இது தான் எனக்கு தெரிந்த வழி!

ஆர்.நாகநாதன், தஞ்சை: காவிரி, கங்கை நதிகள் இணைப்பு சாத்தியமா?
அரசுகள் முயன்றால், நடத்த முடியும்! ஆனால், நம் தலைமுறையில், இது நடக்காது என்றே தோன்றுகிறது!

ஜி.கலைவாணி, மறைமலை நகர், காஞ்சி மாவட்டம்: நடிகர் கமலின், 'டார்ச்லைட்' தமிழகத்தை ஒளிரச் செய்யுமா?
அதன் ஒளி, 10 அடிக்கு மேல் தெரியாதே!

* கே.ஆர்.உதயகுமார், சென்னை: பார்க்க விரும்பும், 'டிவி' சேனல்களுக்கு மட்டுமே, பணம் கொடுத்தால் போதும் என்ற, மத்திய அரசின், முடிவு நல்லது தானே...
ஆம்! அதனால் தான், பல, 'டிவி' சேனல்களும், 'பைசா' வேண்டாம் என்று, தம், சேனல்களில், எழுத்து மூலமாக ஒளிபரப்புகின்றன! அவர்களுக்கு, ஒவ்வொரு, 15 நிமிட நிகழ்ச்சி முடிந்த பின், 'சிறிய இடைவேளைக்கு பின்...' எனக் கூறி, 15 நிமிடங்கள், விளம்பரங்களை ஒளிபரப்புகின்றன... இந்த அறிவிப்பை கண்ட பின், நோக்கர்கள், வேறு வேறு, 'சேனல்'களுக்கு மாறி விடுகின்றனர்!
நோக்கர்கள் பார்க்காவிட்டால் என்ன... சந்தா கட்டாவிட்டால் என்ன... நமக்கு தான் விளம்பர வருமானம் கிடைத்து விடுகிறதே என்ற தைரியத்தில் உள்ளனர்!
விளம்பரதாரர்கள் விழித்துக் கொண்டால் சரி!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஏப்-201911:11:30 IST Report Abuse
D.Ambujavalli அடுத்த 1924 தேர்தல். அறிக்கையிலும் இந்த ‘கங்கை,காவேரி இணைப்பு ‘ அயிட்டம் நிச்சயம் இருக்கும் நாமும் ‘அம்மா வீடு எங்கே , இன்னும் கொஞ்சம் தூரம்’ என்று தேர்தலுக்குத் தேர்தல் வரும், வரும் என்று காத்திருப்போம் இதெல்லாம் தீபாவளி, பொங்கல் வாழ்த்து போல் நிரந்தர அறிக்கை
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201901:28:44 IST Report Abuse
Manianதரை அடியில் 300 அடிக்கு கீழே குழாய் i பதித்து தண்ணீர் கொண்டு வந்தாலும் (கங்கை காவேரி இணைப்பு மூலம்) திருடடர்கள் அதை உடைத்து திருடிவிடுவார்கள். கண்டலேறி கதைதான் தெறியுமே. மேலும் யாரும் நிலம் தரமாட்டார்கள். மேலும் எங்கள் உரி வழி செல்லும் நீர் எங்களுக்கு சொந்தம் என்பார்கள். உருப்படாத நாடு, இங்கே எதையும் ஆகக வழியில் செய்ய முடியாது....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201901:32:40 IST Report Abuse
Manianலட்சுமி- இது குடும்ப சிதைவு நிலை, தேவை இல்லாத தண்டனைகள், வீட்டிலே பொய் சொல்லும் பெரியவர்கள், மனோ வியாதி என்ற பல காரணங்களால் இருக்கலாம். தகப்பனின் அன்பை நாடும் பிள்ளைகளும் இப்படி செய்வார்களாம். தொண்டு நிருவனம் மூலம் ஒரு பணி முப்படைத்த மனோநிலை மருத்துவரை நாடுங்கள். இல்லை என்றால் இவன் ஜெயிலுக்கே செல்வான்....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201901:34:10 IST Report Abuse
Manianஜி.கலைவாணி,- அதுவும் அடிக்கடி பேடடரி மாற்ற வேண்டும். அதற்கு காசு வேண்டும். தொண்டர்களே தரவேண்டும். முடியுமா?...
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
22-ஏப்-201901:39:27 IST Report Abuse
Manianஎம்.விக்னேஷ், மதுரை:- இந்த எல்கஷனில் வாங்கின துடடை (ஓடடை விற்று ), ஏர்கண்டிஷன் வாங்குவார்கள், மிஞ்சராத்தை திருடி(முடிந்தவர்கள், அல்லது கொக்கி போடும் சிறு ,குறு தொழிலாளர்களை வைத்து) ) அதை ஓட்டி, சுகம் காண்பார்கள், இல்லேயேல் முடிந்தால் கோவில் தோட்டங்களில் குடிசை போடுவார்கள். மக்களுக்கா வழி தெறியாது, கவலையை விடுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X