முதலிடம் பிடிக்கும், மணிரத்னம்!
எந்திரன் படத்தை, 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்து, இந்திய அளவில், அதிக பட்ஜெட் படத்தை இயக்கியவராக இருந்தார், ஷங்கர். ஆனால், பாகுபலி படத்தை இயக்கிய, ராஜமவுலி அந்த படத்தை, 350 கோடியில் இயக்கி, ஷங்கரின் சாதனையை முறியடித்தார். அதன்பின், 2.0 படத்தை, 550 கோடியில் இயக்கி, ராஜமவுலியின் சாதனையை முறியடித்தார், ஷங்கர். இப்படியான நிலையில், தற்போது, பொன்னியின் செல்வன் படத்தை, 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்குகிறார், மணிரத்னம். ஆக, தமிழில், அதிக பட்ஜெட்டில் படமெடுத்த இயக்குனராக முதலிடம் பிடிக்கப் போகிறார், மணிரத்னம்.
— சினிமா பொன்னையா
ஆண்ட்ரியா அதிரடி!
'இனிமேல் போர்த்தியபடி தான் நடிப்பேன்...' என்று ஆண்ட்ரியா வெளியிட்ட ஒரு செய்தி, அவரை படமே இல்லாத நிலைக்கு தள்ளி விட்டது. அதனால், மறுபடியும் காமக்கொடூர அவதாரம் எடுக்க, தான் தயாராகி விட்டதை வெளிப்படுத்தும் வகையில், தான் அணிந்துள்ள, 'டாப்சில்' மேல் பட்டன் போடாமல், 'போஸ்' கொடுக்கும் ஒரு அதிரடி புகைப்படத்தை வெளியிட்டு, மீண்டும், 'கமர்ஷியல்' இயக்குனர்களை கவர்ந்திழுத்துள்ளார். மை மை சுந்தரி, கதவை ஒஞ்சரி!
- எலீசா
தமன்னாவின், வில்லி அவதாரம்!
'கவர்ச்சியாக நடித்து, சலிப்பு தட்டி விட்டது...' என்று கூறி, தற்போது, குடும்ப குத்துவிளக்கு வேடங்களுக்காக அலைகிறார், தமன்னா. இந்நிலையில், விஷால் நடிக்கும் புதிய படத்தில், அவரை, எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டதும், உடனே, ஒத்துக் கொண்டார். அதையடுத்து, 'இதுவரை, என் கவர்ச்சி முகத்தை தான் பார்த்தீங்க. கூடிய சீக்கிரமே என்னோட வில்லி முகத்தையும் பார்க்கப் போறீங்க...' என்று, தன் அபிமானிகளுக்கு, 'மெசேஜ்' செய்து, தான், எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதை விளம்பரப்படுத்தி வருகிறார். காலத்துக்கு ஏற்ற கோலம்!
- எலீசா
யோகிபாபுவிற்கு வந்த, 'டூயட்' ஆசை!
'நானெல்லாம், 'ஹீரோ'வாக நடித்தால் யார் பார்ப்பர்...' என்று ஆரம்பத்தில் கூறிய யோகிபாபு, இப்போது, சில படங்களில், கதையின் நாயகனாக நடித்து வருகிறார். அதோடு, அவருக்கும், 'டூயட்' பாடும் ஆசை மேலோங்கி இருக்கிறது. தன் ஆசையை சில இயக்குனர்களின் காதோரம் கிசுகிசுக்க, தற்போது, யோகிபாபு நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில், அவருடன் ஜோடி சேர, புதுமுக நடிகை வேட்டை நடந்து வருகிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
* சமீபத்தில், பாலிவுட் நடிகையை திருமணம் செய்து கொண்டார், பிக் - அப் நடிகர். ஆனபோதும், நடிகர், 'பிக்-அப்'பில் மன்னர் என்பதால், அவரது லீலைகள், மனைவியின் காதுகளை எட்டத் துவங்கியது. இதனால், குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, அபிமானத்திற்குரிய அம்மணிகளை, அடக்கி வாசிக்குமாறு கெஞ்சிக் கேட்டு வருகிறார், நடிகர்.
'நிச்சயதார்த்த விருந்துக்கு, 'ஆர்யா கேட்டரிங் சர்வீஸ்'ல, சாப்பாடு ஏற்பாடு பண்ணிடு... முன்பு செய்தது போல், ஏதாவது, 'கோல்மால்' செய்தால், அவங்க வண்டவாளத்தை வெட்ட வெளிச்சமாக்கி விடுவோம்ன்னு சொல்லிட்டு வந்துடு...' என்றார், அப்பா.
* ஆரம்பத்தில் சில படங்கள் கொடுத்த வெற்றி காரணமாக, நடிப்பில் முழு கவனம் செலுத்தினார், டார்லிங் நடிகர். அதன் பின் நடித்த படங்கள், தொடர்ந்து தோல்வியை தழுவியதால், தற்போது, இசையிலும் கவனத்தை திருப்பியிருக்கிறார். ஒருவேளை, நடிப்பு கை கொடுக்கவில்லை என்றால், இசையாவது காப்பாற்றும் என்று, மறுபடியும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க, வாய்ப்பு கேட்டு வருகிறார்.
'பிரகாஷ் தம்பி... போன முறை, உன்னை பார்த்தபோது, 'பேன்சி ஸ்டோர்' வச்சிருந்தியே... இப்போ, 'மொபைல்' கடை போட்டிருக்கிறியே... என்ன விஷயம்...' என்றார், வாடிக்கையாளர் ஒருவர்.
'இல்ல சார்... அந்த கடையில, நஷ்டம் வர்ற மாதிரி இருந்துச்சுன்னா, 'டகால்'ன்னு இந்த கடையில கவனம் செலுத்தலாம் இல்ல... அதான்!' என்று முடித்தார்!
சினி துளிகள்!
* 'இனிமேல் நான் கதாநாயகி இல்லை. கதையின் நாயகி...' என்று, சினிமா வட்டாரங்களில் உரக்க குரல் கொடுத்து வருகிறார், சமந்தா.
* தன்னை, வெயில் படத்தில், இசையமைப்பாளராக அறிமுகம் செய்த, வசந்தபாலன் இயக்கும், ஜெயில் படத்தில், நாயகனாக நடித்து வருகிறார், ஜி.வி.பிரகாஷ்.
* 3 தேவ் என்ற படம் மூலம், இந்தியில் அறிமுகமாகிறார், ஆர்யா.
அவ்ளோதான்!