போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம், சமீபத்தில் பல்டி அடிக்கும், எட்டி உதைத்தாலும் மல்லாக்க விழாத நாய் ரோபோக்களை உருவாக்கி வெளியிட்டது. தற்போது அடுத்த அதிரடியாக, நாய் ரோபோக்கள் ஒருங்கிணைந்து, ராட்சச டிரக்கை இழுத்துக்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளது. மனிதன் மீது ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை இவ்வீடியோ உணர்த்துவதாகப் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.