நிலத்திலும், நீரிலும் செல்லக்கூடிய திறன் பெற்ற படகைத் தயாரித்து சீனா சாதனை படைத்துள்ளது. “கடலில் மட்டுமல்ல, நிலத்திலும் அதிகபட்சமாக 1,200 கி.மீ. தொலைவு வரை இப்படகைச் செலுத்த முடியும். இராணுவப் பயன்பாட்டுக்கு ஏற்றபடி தாக்கும் திறன் கொண்ட இப்படகுக்கு, தண்ணீர் பல்லி (Marine Lizard) என்று பெயரிட்டுள்ளோம். செயற்கைக்கோள் மூலம் இப்படகை இயக்கலாம்” என்று சீன அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.