01. அவனுக்கு நான்கு கால். ஆனாலும் அவனால் நடக்க முடியாது. அவன் யார்?
02. என்னை உடைத்தால் மட்டுமே உபயோகிக்க முடியும். நான் யார்?
03. அப்பொருளை சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுத்து மரப்பெட்டியில் வைத்து மூடினர். ஒரு போதும் அப்பெட்டியிலிருந்து வெளி வரவே இல்லை என்றாலும், முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டு கரைந்து போனது அப்பொருள். அது என்ன?
04. உடல் முழுவதும் துளைகள் உண்டு. ஆனாலும் தண்ணீரைச் சேமிக்கலாம். அது என்ன?
05. எனக்கு கால்கள் இல்லை. ஆனாலும் ஓடுவேன்.
நான் யார்?
06. நீண்ட வால் குதிரை. தாவத் தாவக் குறையுது அதன் வாலின் நீளம்?
அது என்ன?
07. ஒரு வார்த்தை. அதை நீங்கள் சரியாகப் படித்தால் தவறாகிவிடும். அதென்ன?
08. சிறகில்லை, ஆனாலும் வானில் பறப்பேன். கண்ணில்லை ஆனாலும் அழுவேன்.
நான் அழுதால் பிறர் சிரிப்பர். நான் யார்?
09. என்னைச் சாப்பிடவே மக்கள் வாங்குவர். ஆனால் ஒரு போதும் என்னை உண்பதில்லை. நான் யார்?
10. வானிலிருந்து மண்ணுக்கு மழை இறங்குகையில், நான் சிறகு விரித்து மேலே ஏறுவேன். நான் யார்?
விடுகதை விடைகள்
1.நாற்காலி
2.முட்டை
3.பென்சிலின் உள்ளிருக்கும் கரி (கிராஃபைட்)
4.ஸ்பாஞ்ச் (பஞ்சு/கடற்பாசி)
5.நதி, கடிகாரம்
6.ஊசியும் நூலும்
7.தவறு
8.மேகம்
9.சாப்பாட்டு தட்டு
10.குடை