அலாவுதீனும் அற்புத விளக்கும்! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
00:00

சென்றவாரம்: அரசகுமாரிக்கும், பிரதான மந்திரி குமாரனுக்கும் திருமணம் நடக்கவிருந்த தகவல் அறிந்த அலாவுதீன், கோபமடைந்தான். இனி -

'பயப்படாதே... நான் தான், உண்மையான மணமகன்; உன்னை மண முடித்து வைப்பதாக, உன் தந்தை, என் தாய்க்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதற்கிடையில், பிரதான மந்திரி சதி செய்து, இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்...' என்றான் அலாவுதீன்.
பொழுது விடிந்தது. பூதத்தை அழைத்த அலாவுதீன், மந்திரி மகனையும், அரசகுமாரியையும், அரண்மனையில் விடக் கூறினான். பூதம் அவ்வாறே செய்தது.
காலையில், மகளை காணச் சென்றார் சுல்தான். அவள், மிகவும் பயத்துடன் இருந்தாள்.
'என்ன நடந்தது...' என்று, மகளைக் கேட்டார். அவள் எதுவும் சொல்லாமல், நடுங்கியபடி இருந்தாள்.
அலாவுதீன் உத்தரவுப்படி, மறுநாளும் பூதம், இருவரையும், அலாவுதீன் வீட்டிற்கு துாக்கிச் சென்றது.
'மந்திரி குமாரனை இன்று முழுவதும் தெருவில் நிற்க வை...' என்றான் அலாவுதீன். அதன்படி செய்தது, பூதம்! இரவு முழுக்க பனியில் நடுங்கிக் கொண்டிருந்தான்; குளிரைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டான்.
மறுநாள் -
இருவரையும், அரண்மனையில் விட்டது பூதம். காலையில், அரசகுமாரி அழுது கொண்டிருப்பதையும், மந்திரி குமாரன் நடுங்கிக் கொண்டிருப்பதையும் கண்ட சுல்தான், கடும் கோபம் கொண்டார்.
'நடந்தவற்றை விவரமாகச் சொல்; இல்லா விட்டால் கொன்று விடுவேன்...' என்று மிரட்டினார்.
அரசகுமாரி அழுதபடியே, விபரங்களை கூறினாள்.
மந்திரி குமாரன், சுல்தானின் காலில் விழுந்து, 'இந்த திருமணம் வேண்டாம்...' என, கதறி அழுதான்.
திருமண ஏற்பாடு நிறுத்தப்பட்டது.
மூன்று மாதக்கெடு முடிந்தது; அலாவுதீனின் தாய் சுல்தானிடம் வந்தாள். அவர் அளித்த வாக்குறுதியை நினைவுப்படுத்தினாள்.
'உறுதி தவற மாட்டேன்; ஆனால், ஒரு நிபந்தனை; சுல்தான் மகளை மணப்பவன், 40 தங்க தட்டுகளில், விலையுர்ந்த நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்களை, பரிசாகத் தர வேண்டும். அவற்றை, 40 அடிமைகள், 40 வெள்ளைக் குதிரைகளில் ஊர்வலமாக எடுத்து வர வேண்டும்...' என்றார்.
அலாவுதீனின் தாய் ஏமாற்றமடைந்தாள். அவள் மிகவும் சோகமாக வீடு திரும்பி, சுல்தானின் நிபந்தனைகள் பற்றிக் கூறினாள்.
இதை கேட்டு மென்மையாக சிரித்தபடி, மந்திர விளக்கை தேய்த்தான் அலாவுதீன். மறு கணம், பூதம் தோன்றி வணங்கியது. சுல்தானின் உத்தரவை நிறைவேற்ற தேவையானவற்றைக் கொண்டுவர உத்தரவிட்டான். உடனே கொண்டு வந்தது பூதம்.
சில நொடிகளில், வெள்ளைக் குதிரைகளில் தங்கத் தட்டுகள் நிறைந்த ஆபரணங்களுடன், ஊர்வலமாக அரண்மனைக்குப் புறப்பட்டனர். அதைப் பார்த்த நாட்டுமக்கள், ஒரு பெரிய நாட்டின் மாமன்னர் ஊர்வலம் போவதாக நினைத்தனர்.
நிறைந்த தங்கத்தட்டுகளை, சுல்தான் முன் வைத்து, வணங்கி நின்றனர் அடிமைகள்.
வியந்து நின்றார், சுல்தான். இவ்வளவு பொருட்களை பரிசாக கொடுக்கும் திறனுள்ளவர், மாபெரும் மன்னராகத்தான் இருக்க வேண்டும் என, கணித்தார்.
உடனே, அலாவுதீனின் தாயிடம், 'இன்றே திருமணம் வைத்துக் கொள்வோம்... மாப்பிள்ளையை அழைத்து வாருங்கள்...' என்று கூறினான்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை, அலாவுதீனிடம் தெரிவித்தாள் அலாவுதீனின் தாய். அவன் ஆசுவாசமாக, 'அவசரப்படாதே... இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது...' என்ற கூறி, பூதத்தை மீண்டும் அழைத்தான்.
அது, நறுமணம் மிக்க நீர் கொண்டு வந்தது. அதில், நன்றாக குளித்தான். பின், பேரரசர்கள் அணியும், வைரம் பதித்த ஆடைகளையும், தங்க ஆபரணங்களையும் வரவழைத்து அணிந்தான்.
அதன்பின், 'என் பாதுகாப்புக்கு, 40 அடிமைகளும், என் தாயுடன் செல்ல, ஆறு அடிமைகளும் வேண்டும்...' என்று உத்தரவிட்டான்.
- தொடரும்...

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X