மூவரின் கதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
00:00

குருகுலத்தில் சேர்ந்தான், ஒரு இளைஞன். யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் பெற்றான். பயிற்சி முடிந்ததும் குருநாதரை வணங்கி நின்றான்.
'இங்கு கற்றவை, உனக்கு மிகவும் பயன்படும்; வெற்றியடைய வாழ்த்துகள்...' என்று விடை கொடுத்தார், குருநாதர்.
புதிய மனிதனாக, ஊர் திரும்பியவனை புகழ்ந்தனர் மக்கள். அவன் மனம், ஆனந்தக் கடலில் நீந்தியது.
அன்று இரவு -
இளைஞனுக்கு நல்ல துாக்கம்; கனவில் ஞான தேவதை தோன்றினாள்.
'குருகுலப் பயிற்சி எப்படி இருந்தது. போதிய ஞானம் பெற்று விட்டாயா...' என்று கேட்டாள்.
'ஆம்... சிறப்பாகப் பெற்று விட்டேன்; நீங்கள் யாரம்மா...'
'நான், ஞான தேவதை; குருகுலத்தில் நீ பெற்ற ஞானத்தை சோதிக்க வந்தேன்...'
'வெற்றி பெறும் அளவு ஞானம் பெற்று விட்டேன் அம்மா...' என, பெருமிதம் பொங்க கூறினான், இளைஞன்.
'நீ சொல்வதெல்லாம் சரி தான்; உன் குருநாதர், மூவர் கதையைக் கூறினாரா...'
'அப்படி ஒன்றும் சொல்லவில்லையே...'
'மூவர் கதை தெரியாமல், எப்படி வெற்றி அடைய முடியும்...'
ஞான தேவதை கூறியதைக் கேட்ட இளைஞனுக்கு, தலையில் ஏறியிருந்த பெருமிதம் இறங்கியது. இன்னும் கற்க வேண்டியவை ஏராளம் என்பதை உணர்ந்து, 'அம்மா... அந்தக் கதையைக் கூறுங்கள்...' என்றான்.
ஞான தேவதை சிரித்தபடியே, 'இளைஞனே... அந்த மூவர் யார் தெரியுமா... விட்டுக் கெட்டவன், விடாது கெட்டவன், தொட்டுக் கெட்டவன்...' என்று சொன்னாள்.
'விட்டுக் கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்...'
'திருமால், வாமன வடிவம் எடுத்து, மூன்றடி நிலம் கேட்ட போது, ஒரு அடிக்கு, விண்ணையும், இன்னொரு அடிக்கு, மண்ணுலகையும், மூன்றாவது அடிக்கு, தன்னையும் கொடுத்து கெட்டவன் தான், மகாபலி என்ற அரசன்...'
'மகாபலியின் தியாகம் போற்றக் கூடியது தானே...'
'உண்மை தான்... ஒருவருக்கு வாக்குக் கொடுக்கும் முன், யோசிக்க வேண்டாமா... தன்னையே அழிக்கும் அளவுக்கு, எவருக்கும் வாக்குக் கொடுக்க கூடாது என்பதை, மகாபலி கதை மூலம் புரிந்து கொள்...'
'சரியம்மா... விடாது கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்...'
'பாண்டவர்களின் துாதனாக, துரியோதனிடம் சென்றான், கண்ணன். ஐந்து காணி நிலமாவது கொடுக்கப் பரிந்துரைத்தான். துரியோதனன் மறுத்தான். ஐந்து வீடுகளையாவது கொடுக்க கூறினான். அதையும் மறுத்த துரியோதனனும், அவன் சுற்றத்தாரும் பூண்டோடு அழிந்தனர்...
'கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால், துரியோதனன் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும். விடாது கெட்டு அழிந்தான். இந்த மண்ணில், விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போக வேண்டும் என, புரிந்து கொள்...'
'சரியம்மா... உங்கள் அறிவுரையை பின்பற்றுகிறேன். தொட்டுக் கெட்டவன் கதையை சொல்லுங்கள்...'
'பத்மாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்தான்; தன் கைப்பட்டவர் உடனே, பஸ்பமாகி விட வேண்டும் என, ஈஸ்வரனிடம் வாரம் பெற்றான். எதிரே வந்தவர்களை எல்லாம் பஸ்பமாக்கி அட்டகாசம் செய்தான்...
'வரம் கொடுத்த ஈஸ்வரன் தலையிலே கை வைக்கப் போனான்; தப்பி ஓடுவதைப் போல், பாவனைக் காட்டினார், ஈஸ்வரன். அவன் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட, விஷ்ணுவுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுத்தார்.
'அதன்படி, மோகினியாக வடிவம் எடுத்தார் விஷ்ணு. அந்த மோகினியிடம் மயங்கிய பத்மாசுரனை, தன் தலை மீதே கை வைக்க துாண்டினார். பத்மாசுரனும் அவ்வாறே பஸ்பமானான்...' என்றாள், ஞான தேவதை.
'சரியம்மா... இக்கதை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன...'
'மோகத்தில், வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே...'
ஞான தேவதையின் அறிவுரையைக் கேட்ட இளைஞன், 'வாழ்வதற்கு போதுமான அளவு ஞானம் கொடுத்து விட்டீர்கள்; என் தற்பெருமையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி...' என்றான்.
'வெற்றியடைய வாழ்த்துக்கள்...' என மாறைந்தாள், ஞான தேவதை. அந்த இளைஞனின் துாக்கம் கலைந்தது. மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X