இளஸ்... மனஸ்... (165)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2019
00:00

அன்பு ஜெனி ஆன்டிக்கு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி எழுதுவது. பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகளில், எங்கள் ஊர், பிரபலமாக உள்ளது, மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
சமீபத்தில், எங்கள் பள்ளியில் நடந்த சம்பவமும், என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எங்கள் பள்ளி மாணவி ஒருத்தி, முக நூல் மூலம், ஒரு நபருடன் நட்பாக பழகி வந்திருக்கிறாள். நாளடைவில், நட்பு, காதலானது; திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, அவளை அனுபவித்து விட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான் அந்த கயவன்.
பாதிக்கப்பட்ட மாணவி, இந்த உலகை விட்டே சென்று விட்டாள்.
இச்சம்பவம், எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது; இன்னும், என் தோழியை மறக்க முடியவில்லை. இப்படி ஏமாந்து போகும் மாணவியருக்கு, தயவுசெய்து அறிவுரை சொல்லுங்க ஆன்டி...

அன்பு மகளுக்கு, வணக்கம்!
இந்த மாதிரி செய்திகளை, நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் கேட்டு கேட்டு மனம் வெறுத்துப் போகிறது.
இன்னும், எப்போது தான், பெண்கள், விழித்துக் கொள்ள போகின்றனர் என்பது தெரியவில்லை.
என்ன தான், முகநூல் நட்பு, காதலாக மாறியது என்றாலும், திருமணத்திற்கு முன், ஒரு பள்ளி மாணவி, இந்த அளவிற்கு இடம் கொடுப்பதற்கு என்ன துணிச்சல் வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறையினர் மொபைல் போனில், கண்டதைப் பார்த்து, அனுபவிக்க துடிப்பது... பெற்றோர் சொல் கேட்பதில்லை; முகம் தெரியாத நபரை நம்பி, தன்னையே கொடுப்பது தொடர்கிறது.
அப்புறம், மாட்டி, அவஸ்தை படுவது, முடியாத பட்சத்தில், இந்த உலகத்தை விட்டே போவது தொடர்கிறது.
எங்கள் காலத்தில், ஆண் பிள்ளைகளுடன் பேசுவதற்கே பயப்படுவோம்... அவர்களை தொட்டுப் பேசுவது என்பது, நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
அதை எல்லாம், உங்களிடம் சொன்னால், 'நீ பத்தாம்பசலி... இந்த காலத்துல, ஆண் நண்பர்களுடன் பழகுவது சகஜம்...' என்கிறீர்கள்.
சரி... பேசுங்கள், நண்பர்களாக இருங்கள்; ஆனால், எல்லா ஆண் நண்பர்களின் கையை பிடிப்பது, தோளில் சாய்ந்துக் கொள்வது, கட்டிப் பிடிப்பது வரையரை இல்லாமல் பழகுவது... 'திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று சொன்னதும், உடனே, தன்னையே கொடுத்து விடுவது எந்த விதத்தில் நியாயம்...
பெற்றோரே... பெண் பிள்ளைகளுக்கு, கற்பின் முக்கியத்துவம் என்ன என்பதை சொல்லித் தர வேண்டும். 'திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று, ஒரு ஆண் வாக்குறுதி கொடுத்தாலும், திருமணத்திற்கு பின், நடக்க வேண்டிய விஷயங்களை, முன்பே அனுமதிப்பது கூடாது என்ற விஷயத்தை, கட்டாயம் சொல்லித் தர வேண்டும்.
ஊடகங்களில், ஒரு பெண்ணை இத்தனை பேர் சீரழித்துள்ளனர் என்ற செய்திகள் வரும் போது, பாதிப்புக்குள்ளான பெண்கள், அதுவரையில் ஒண்ணுமே தெரியாதது போல் வீட்டில் இருக்கின்றனர் அவர்களிடம் மாற்றங்கள் தெரியாதா... இதையெல்லாம் பெற்றோர் ஏன், கவனிப்பதில்லை.
இதை கூட கவனிக்காமல், நீங்கள் இருவரும் பணத்தை மட்டுமே சம்பாதித்து என்ன பயன்...
உங்கள் பிள்ளைகள் இருவரையும், அவர்களது நடவடிக்கைகளை, தினமும் உற்று கவனியுங்கள்.
பள்ளிகளில், நீதி போதனை வகுப்புகள் வைத்து, மாணவியரிடம், ஆசிரியர்கள் கலந்து பேசி, அவர்களது பிரச்னைகள் என்ன என்பது குறித்து, அன்புடன் விசாரிக்க வேண்டும்.
அவ்வப்போது மனநல மருத்துவர்களை அழைத்து சென்று, பாலுறவு சம்மந்தப்பட்ட விஷயத்தின் பின் விளைவுகளை, பெண் பிள்ளைகளுக்கு, கற்றுத் தர வேண்டும்.
இன்றைய இளம் பெண்களே... நீங்களும் அடக்கமாக வாழப் பழக வேண்டும்; 'சினிமா, சீரியல், மியூசிக்கலி போன்ற வலைதள விஷயங்களில் விழுந்து கிடப்பேன்; நடிகைகளை விட மோசமாக, 'டிரஸ்' பண்ணுவேன்; கண்டிக்கும் பெற்றோரை வெறுப்பேன்... என்னுடைய சுதந்திரத்தில், யாரும் தலையிடுவதை விரும்ப மாட்டேன்...' என்று, அடம் பிடிப்பதை விட்டு, பெற்றோர் சொல்வதை கேட்டு நடந்தால், நிம்மதியாக வாழலாம்.
அதற்கு மேல் உங்கள் இஷ்டம்!
- மிகுந்த மன பாரத்துடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X