இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

பாரதி கண்ட புதுமைப்பெண்!
சமீபத்தில், ஸ்வீட் கடைக்கு சென்றிருந்தேன். அங்கு, ஐந்து ரூபாய் முதல், 25 ரூபாய் வரை, துணி பைகள் வைத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவிற்கேற்ப, 'பில்' போடும்போது, அதன் விலையையும் சேர்த்து போட்டனர்.
'ஸ்வீட் வாங்கும் எங்களிடம், பைக்கும் சேர்த்து எதுக்கு பணம் வாங்குகிறீர்கள்...' என்று ஒரு இளம்பெண், கேட்டார்.
'ஏம்மா, 1,000 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்குகிறீர்கள். 10 ரூபாய்க்கு பை வாங்க முடியாதா... அதையும் நாங்கள் கொடுத்தால், தலையில் துண்டை தான் போட்டுக்கணும்...' என்றார், கடைக்காரர்.
'நீங்கள் கொடுக்கும் துணி பையின் விலை, மூன்று ரூபாய். மொத்தமாக வாங்குவதால், இரண்டு ரூபாய்க்கே கொடுப்பர். வாங்கும் ஸ்வீட்டின் தயாரிப்புக்கு தேவையான பொருளின் விலை, ஆள் கூலி, கடை வாடகை, பேக் செய்து கொடுக்கும் அட்டை பெட்டியின் விலை, எடை போடுபவரின் சம்பளம், 'ஏசி' கடை வாடகை எல்லாம் கழித்தால், நான் வாங்கும், 1,000 ரூபாய் ஸ்வீட்டுக்கு, உங்களுக்கு, 400 ரூபாய் லாபம் வரும்.
'இதில், இரண்டு ரூபாய் பையை, 10 ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறீர்கள். அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்கள் எல்லாம், வீணாய் போக காரணம், உங்களை போன்ற ஆட்கள் தான்...' என்றார்.
கடைக்காரருக்கு, 'ஏசி'யிலும் வியர்த்து கொட்டியது.
'பை விலையை சேர்க்காமல், ஸ்வீட் கொடுங்க... இல்லையென்றால், என் ஆர்டர் கேன்சல்...' என்ற, 'பாரதி கண்ணம்மா'வை பார்த்து, ஸ்வீட் வாங்க வந்த அனைவரும் பாராட்டினர்.
சமுதாயத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம், அரசே பார்த்துக் கொள்ளும் என்று இல்லாமல், நாமும் தட்டி கேட்கலாம் என்று, நானும், அந்த சின்ன பெண்ணிடம் பாடம் கற்றுக்கொண்டேன்.
கல்பனா குணசேகரன், சென்னை.

மூலிகை, 'பொக்கே!'
சமீபத்தில், உடல் நலமில்லாமல் இருந்த தோழியை காண, மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது, தோழியை பார்க்க வந்த அவரது சித்தி, ஒரு பூங்கொத்து கொடுத்தார்.
அது, பச்சை இலைகளை வைத்து தயாரிக்கப்பட்டு வித்தியாசமாக இருந்தது. இது குறித்து கேட்டதற்கு, அவர் கூறிய பதில், மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது.
'வல்லாரை கீரை, எலுமிச்சை புல், மிளகு கீரை மற்றும் துளசி போன்றவற்றால் தயாரிக்கப்பட்டது, இந்த பூங்கொத்து. இதை வீட்டிற்கு எடுத்து போய், தேநீர் தயாரித்து குடிக்கலாம். பூ ஜாடியில் வைத்தால், மூலிகை காற்றை சுவாசிக்கலாம்.
'பூங்கொத்து என்றால், துாக்கி எறிந்து விடுவர். இதுபோன்று தயாரிக்கப்பட்ட பூங்கொத்து கொடுத்தால், உபயோகமாக இருக்கும்...' என்றார்.
பூக்களால் ஆன, பூங்கொத்து கொடுப்பவர்கள், இனி, மூலிகை பூங்கொத்து தயார் செய்து தரலாமே!
— ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.

உஷாரய்யா... உஷாரு!
சமீபத்தில், என்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்ததும், விழித்துக் கொண்டார்.
உடனிருந்தோர், 'உங்களுக்கு, சர்க்கரை நோய் இருக்கிறதா, பி.பி., இருக்கிறதா...' என்று குடைச்சல் கொடுக்க, பேந்த பேந்த விழித்தவர், 'தெரியலையே...' என்றார்.
'உடனே, செக்-அப் பண்ணுங்க... சர்க்கரை நோய் முற்றினால், கண் பார்வை போகும். பி.பி., எகிறினால், பக்கவாதம் வரும்...' என்று பயமுறுத்த, மேலும், கதிகலங்கி போனார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதித்ததில், பி.பி.,யோ, சர்க்கரை நோயோ இல்லையென்று தெரிந்ததும், நிம்மதி பெருமூச்சு விட்டார்.
காலையில் சாப்பிடாமல் வந்த பசி மயக்கத்திற்கு, அவர் செலவழித்த தொகை, 10 ஆயிரம் ரூபாய். 'வாட்ஸ் - ஆப், யூ - டியூப்' பார்க்கும் பழக்கமுள்ள பலரும், டாக்டராகி, இலவச ஆலோசனைகளை வாரி வழங்கும், 'மருத்துவ பயங்கரவாதம்' சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
நாற்பது வயதை கடந்தோர், ஆண்டுக்கு ஒருமுறை, குடும்ப மருத்துவரை கலந்தாலோசித்து, முழு உடல் பரிசோதனை செய்து, உடல் நலன் பேணுவதே ஆரோக்கியம்.
கண்டவர்களின் கருத்துக்களை கேட்பது, பேராபத்து.
- மல்லிகா அன்பழகன், சென்னை.

படிப்புக்கு இப்படி ஒரு பாதிப்பு!
என் உறவினர் மகள், தன் மேற்படிப்பிற்காக, விண்ணப்பம் நிரப்பி, டி.டி.,யுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சென்னையில் உள்ள, தொலை துார கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தாள்.
தேர்வு தேதி நெருங்கியும், இவளுக்கு மட்டும், 'ஹால் டிக்கெட்' வரவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டதில், அவர்களோ, 'விண்ணப்பம் வரவில்லை...' என்றனர்.
உடனே, என் உறவின பெண்ணின் கணவர், தபால் அனுப்பிய கூரியர் நிறுவனத்திடம் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர் அனுப்பி விட்டதாக கூறியுள்ளார்.
சென்னை சென்று, மீண்டும் இயக்குனரகத்தில் விசாரித்துள்ளார்.
அப்போதும், அதே பதிலை கூறினர். 10 ஆட்களுடன் கூரியர் நிறுவனத்திற்கு சென்று, சம்பந்தப்பட்ட நபரை அடித்து, உதைத்து விசாரித்த பின், உள்ளே வைத்திருந்த விண்ணப்பத்தை எடுத்து கொடுத்தார், ஊழியர்.
பொய் ரசீது போட்டு, பணத்தை வாங்கி, பார்சலை அனுப்பாமலே இருந்துள்ளான், அந்த பாதகன். இதுபோன்று பலமுறை செய்திருந்தும், யாரும் அவனை கண்டிக்காததால், தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டுள்ளான்.
என் உறவினர் மகளோ, 'ஒரு வருடம் வீணாகி விட்டதே...' என, மிகுந்த வேதனை அடைந்து, அழுது தீர்த்தாள்.
எதிர்கால வாழ்க்கையோடு விளையாடும் இவர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும்போது, எச்சரிக்கையாக இருப்பது, நமக்கும் நல்லது.
— ர.ஐவண்ணம், போளூர், திருவண்ணாமலை.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan Raman - Neyveli ,இந்தியா
23-மே-201919:11:47 IST Report Abuse
Saravanan Raman டியர் சார் 19.05.2019 தேதியிட்ட வாரமலரில், ‘இது உங்கள் இடம்’ பகுதியில், சென்னை, கல்பனா குணசேகரன் எழுதி, “பாரதி கண்ட புதுமைப் பெண்” என்ற தலைப்பில் வெளியான, பயனற்ற கடிதம் படித்தேன் இதில், “பாரதி கண்ணம்மா’ என்று வர்ணிக்கப்பட்டுள்ள ஒரு அரைவேக்காடு, ஒரு ஸ்வீட் கடை முதலாளியிடம், “நீங்கள் துணிப்பைக்கு தனியே விலை வைத்து, பணம் கேட்டால், நான் கொடுத்துள்ள ஆயிரம் ரூபாய்க்கான ஸ்வீட் ஆர்டரையே, கேன்சல் செய்து விடுவேன்” என்று பயமுறுத்தி…… “அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்கள் எல்லாம் வீணாய் போக காரணம்…. உங்களை போன்ற ஆட்கள்தான்” என்று மிரட்டி….. பெரிய புரட்சி செய்துவிட்டாராம் அந்த முதலாளிக்கு ஏசியிலும் வியர்த்துவிட்டதாம் அங்கே குழுமியிருந்த அத்தனை பேரும், “அந்த பாரதி கண்ணம்மா பாப்பாவை()’ பாராட்டோ பாராட்டுன்னு பாராட்டிவிட்டாங்களாம் அதைப் பார்த்ததும், அதீத கற்பனா சக்தியுள்ள, இந்த கல்பனா குணசேகர் அவர்கள், ‘சமுதாயத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம், அரசே பார்த்துக் கொள்ளும் என்று இல்லாமல், நாமும் தட்டி கேட்கலாம்’ என்று அந்த சின்னப்பெண்ணிடம் பாடம் கற்றுக் கொண்டாராம் (அட மனுஷன்னு இருந்தா ஏதோ அக்கம் பக்கம்ன்னு, சின்ன சின்ன பொய் சொல்லறது இயல்பு தாங்க ஆனாலும், இந்த வாசகி, வாரமலரின் தலைமேல் ஏறிகிட்டு இப்படி எல்லார் காதுலேயும் பூ சுத்தக்கூடாதுங்க) ‘எந்த ஒரு அரசாங்கம் ஆனாலும், நம் நாட்டில் வாழும் அத்தனை பேருக்கும், நேரிடையாக அரசு பணிகளை தரவே இயலாது’ என்பது யாவரும் அறிந்த உண்மை. இச்சூழ்நிலையில், ஒவ்வொருவரும், ஏதேனும் ஒரு சுயதொழிலை மேற்கொண்டு, அதன் மூலமே ஜீவித்தாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஒரு இனிப்பு கடையையோ, அல்லது வேறு ஒரு விற்பனை நிலையத்தையோ, இது போன்ற தனி ஒரு முதலாளி சொந்தமாக தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்திசெல்வதில், பல்வேறு சவால்கள் உள்ளன முட்டையிடும் கோழிக்குத்தான் வலி தெரியும் சிறு முதலாளிகளின் நிலைமையை, பொதுமக்கள் நாம் பரிவுடனும், நியாயத்துடனும் எண்ணிப் பார்க்க வேண்டும். பல இடர்களுக்கு மத்தியில், தொழில் செய்து வரும் இது போன்ற தனியார் அமைப்புகளிடம், ‘சட்டம், நியாயம்’ பேசும் இந்த காகிதப் புலிகள்….. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடத்தும் ரேஷன் கடைகளில், தரமான அரிசி, சரியான எடையில், சரியான நாளில், கிடைப்பதற்காக புரட்சி செய்து…. அன்றாடம் காய்ச்சிகளின் பசிப்பிணியை போக்குவார்களா? அந்த வாயாடி, ‘அரசு விதிகளை அப்படியே மதிக்கும் அவ்வளவு பெரிய ஆள்’ என்றால்… ஒரு துணிப்பையை தன் வீட்டிலிருந்தே எடுத்து சென்றிருக்கலாமே அரைவேக்காடு, வயிற்று வலியைத்தான் தரும் எருதுவின் வலியை காக்காக்கள் அறியாது நன்றி என்றென்றும் அன்புடன், இராதா ராமன், நெய்வேலி.
Rate this:
Share this comment
Cancel
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20-மே-201916:50:51 IST Report Abuse
Vasudevan Srinivasan பிளாஸ்டிக்கை தவிர்க்க துணி பை என்பது நல்லதுதான் துணிப்பையின் தரத்துக்கு தக்க விலை தருவதும் சரி ஆனால் வாங்கும் பில் தொகை அதிகம் இருந்தால்கூட பைக்கு பணம் வாங்குவது அநாகரீகம்.. துணி பை கூட பரவியில்லை நான் சமீபத்தில் விஜயா மாலில் உள்ள மேக்ஸ் ஆடையகத்தில் எழுநூறு ரூபாய்க்கு துணி வாங்கினேன் அங்கே ஒரு காகிதப்பை கொடுத்தனர் அதற்கு நான்கு ருபாய் வசூலித்துவிட்டனர் பிளாஸ்டிக் பை தடைக்கு முன் அதற்கு பணம் வசூலித்ததில்லை மாற்றான காகித பைக்கு கட்டணமா.. ஏமாற்றாதே ஏமாறாதே..
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
20-மே-201914:30:32 IST Report Abuse
Girija "நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே." கந்தர் அலங்காரம் படியுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X