அந்துமணி பா.கே.ப.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

கே

வசந்த மாளிகை படத்தில், சிவாஜி பாடும், குடிமகனே... பெரும் குடிமகனே... கொடுக்கட்டுமா கொஞ்சம் உனக்கு... என்ற பாடலை, 'ஹம்மிங்' செய்தபடி வந்தமர்ந்தார், லென்ஸ் மாமா.
'உலகத்தையே மயக்குவதில் முதல் இடத்தில் உள்ளது எது...' என்று கேட்டார், மாமா. நான், அமைதியாக இருந்தேன்.
'கடவுளா... மதுவா என்று, எந்த நாட்டிற்கு சென்று, யாரிடம் கேட்டாலும், கண்ணை மூடி, 'மது தான்' என்று, மயக்கத்தில் மட்டுமல்ல, நினைவிலும் சொல்வர். அரேபியா போன்ற சில நாடுகளை தவிர, இன்று உலகமெங்கும் முதியோர், இளைஞர்கள் மட்டுமல்ல, இளைஞிகளை கூட, தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் மது என்னும் மாய மோகினியின், வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்து கொள்வது, 'குடிமகன்'களின் கடமை அல்லவா...' என்று ஆரம்பித்தார், லென்ஸ் மாமா.
'ஆஹா... மாமா இன்று, 'செம மூடில்' இருக்கிறார்...' என்று அறிந்து, அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தேன்.
அவர் கூறியது:மது என்று சொன்னாலே, விஸ்கியும், பிராந்தியும் தான் உடனடியாக, நம் நினைவுக்கு வரும். பிரெஞ்ச் மொழி சொல்லிலிருந்து வந்தது, பிராந்தி; 'எரிக்கப்பட்ட ஒயின்' என்பது, இதன் பொருள். ஆம்... ஒயினை உயர் வெப்ப நிலையில் கொதிக்க வைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து, மதுவாகவும், நீராகவும் மாறுகிறது. ஒயின் என்பது, திராட்சை பழரசத்தை, பல நாட்களுக்கு புளிக்க வைத்தால், கிடைப்பது.
பொதுவாக திராட்சை தவிர, ஆப்பிள், அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும்.
ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென பிரத்யேகமான மதுபான, 'பிராண்டு'கள் உண்டு. இத்தாலியில் - கிரப்பா, போலந்தில் - ஸ்லிவிவிட்ஸ், அமெரிக்காவில் - பார்பன், பிரான்சில் - கோக்நாக், ஜப்பானில் - சோச்சு. எனினும், பிரான்சின், கோக்நாக் தான் உலகிலேயே தரமான, 'பிராண்டு' ஆக கருதப்படுகிறது.
மனித நாகரிகம் தோன்றியபோதே, மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தி இருப்பாளோ என்ற சந்தேகத்தில், ரோமானிய வீரன் ஒருவன், முதன் முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க, அதிலிருந்து வந்தது தான், இதழ்களில் முத்தத்தை பரிமாறிக் கொள்கிற பழக்கம்.
வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது, கி.மு., 800 வாக்கில் தான். ஜாபீர் இபின் ஹய்யான் என்ற அரேபிய விஞ்ஞானி, தன் புத்தகத்தில் மதுபானம் தயாரிப்பு முறைகளை, 8ம் நுாற்றாண்டிலேயே விரிவாக எழுதியுள்ளார்.
எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரிகத்தில் மதுபானம் முக்கிய இடம் வகித்திருந்தது. ரோமானியர்கள், அதை லத்தீன் மொழியில், 'அக்வா விட்டே' - உயிர் தண்ணீர் என்றே, அழைத்தனர்.
நம் இதிகாசங்களிலும், வேதங்களிலும் கூட சோம பானம், சுரா பானம் போன்றவைகளை, தேவர்கள் மற்றும் அசுரர்கள் அருந்தியதாக அறிகிறோம்.
ஐரோப்பியர்கள், திராட்சையிலிருந்தும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களிலிருந்தும் தயாரிக்க, ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள், குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்தது தான், சுவாரஸ்யம். முதன் முதலில், வடிகட்டி தயாரிக்கப்பட்ட சுத்தமான மதுபானமும், இது தான்.
அமெரிக்காவில், 1920களில் இருந்து, 1932 வரை அமலில் இருந்த, மதுவிலக்கு சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால், விபத்துகள் அதிகமானது. 1932 தேர்தலில் போட்டியிட்ட, ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், 'நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மதுபான தடையை நீக்குகிறேன்...' என்று, பிரசாரம் செய்தார்.
அவரின் இந்த பிரசாரத்திற்கு, கைமேல் பலன் கிடைத்தது. அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக, அவர் வெற்றி பெற்றார்.
நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும், இந்த விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது தெரிகிறதா...
- 'மே 18 அன்று சர்வதேச வி்ஸ்கி தினமாக கொண்டாடுகின்றனா்ப்பா...' என்று கூறி முடித்தார்.
'மனித இனம் இருக்கும் வரைக்கும், மதுபானமும் இருக்கும். எந்த அரசு வந்தாலும், இதை தடை செய்யவோ, ஒழிக்கவோ முடியாது போலிருக்கே...' என்று நினைத்துக் கொண்டேன்.


மரபின் மைந்தன், ம.முத்தையா எழுதிய, 'வெற்றிச் சிறகுகள்' புத்தகத்தில் படித்தது:
சமூக மரியாதை, செல்வாக்கு என்றெல்லாம் சொல்கின்றனரே, அதற்கெல்லாம் என்ன பொருள்? நம் மீது பிறர் கொண்டிருக்கிற அபிப்ராயம் தான் அவையெல்லாம்.
இந்த அபிப்ராயங்களை அவர்களாக உருவாக்கிக் கொள்வதில்லை. வார்த்தைகள், செயல்பாடுகள், அணுகுமுறைகள் எல்லாம் சேர்ந்து, நம் மீது சில அபிப்ராயங்களை கட்டமைக்கிறது.
நாம் நல்ல மனநிலையில் இருப்பதை பார்ப்போர், 'இவர் ரொம்ப அன்பான மனுஷன் சார்...' என்று முடிவெடுக்கின்றனர். எதற்கோ, யார் மீதோ அளவு கடந்து கோபப்படுவதை பார்ப்போர், 'அய்யோ... சரியான சிடுமூஞ்சி...' என்று முத்திரை குத்தி விடுகின்றனர்.
மொத்தத்தில், நம் மீதான சமூக அபிப்ராயங்களுக்கு நாமே காரணம். ஒவ்வொரு தனி மனிதரையும், அவரை சுற்றியுள்ள சமூகம், மிக உன்னிப்பாக கவனிக்கிறது. எனவே, நமக்கு சமூக மரியாதை, செல்வாக்கு, மற்றவர்களின் பாராட்டு எல்லாம் வேண்டுமென்றால், நாமே எளிதாக அவற்றை உருவாக்கிக் கொள்ளலாம்.
* உங்களை பற்றிய முதல் அபிப்ராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே துவங்குகிறது. தோற்றம் என்பது, வெளித் தோற்றம் மட்டுமல்ல... உங்கள் நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறை மற்றும் தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும் நீங்கள் பேணி பாதுகாக்கிற விதம், எல்லாம் இணைந்து தான், உங்களை பற்றிய எண்ணத்தை உருவாக்குகிறது
* அலுவலக சூழல், உங்களை பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு, ஆடம்பரமில்லாத அழகு மற்றும் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாக செய்பவர் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது
* உடலசைவுகளும், உச்சரிக்கும் வார்த்தைகளும், உங்களை பற்றிய அபிப்ராயத்தை அழுத்தமாக ஏற்படுத்தக் கூடியவை. நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது.
எனவே, உலகம் உங்களை மதிக்க வேண்டும் என்றால், மதிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொள்வது தான், ஒரே வழி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20-மே-201917:10:13 IST Report Abuse
Vasudevan Srinivasan மதி மயக்கும் மது பல குற்றங்களுக்கு (பின்)பலமாக இருக்கும் அவல நிலையில் மது பற்றி இவ்வளவு விவரம் தேவையா..?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
19-மே-201916:56:15 IST Report Abuse
Natarajan Ramanathan ஓஹோ அதான் சுடலையை ஒரு பயலும் துளிகூட மதிப்பதே இல்லையோ?
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-மே-201913:30:55 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கள்ளோ மதுவோ சாராயமோ பிராந்தியோ எல்லாமே கேட்ட நாற்றம் தான் குடுச்சுபோட்டு தன்னிலை தடுமாறி தவிக்கும் மனிதனைப்பார்த்தால் முதலில் வருவது எரிச்சல் அடுத்து வருவது கோபம் இறுதியில் வருவது வெறுப்பு மன்னரோ மந்திரியோ சாமானியனோ எவன் குடிச்சாலும் வெறுப்பேத்தான்
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
20-மே-201913:17:48 IST Report Abuse
Manianஇது பொதுப்படையாக சொல்ல முடியாது.. இன்றும் சுமார் எட்டு அவுன்சு திராக்ஷை மது பிரெஞ்சில் மக்கள் தினமும் குடிக்கிறார்கள். நம்ம ஊர்லே பழைய சோறு மீதுள்ள தண்ணிரில் நாலு சதம் ஆல்கஹால் இருக்கும். உடலுக்கு நல்லது. அதுவே பீரிலும் இருக்கிறது. ஆனால், தினமும் பீர் குடித்தால் பானை வயிறு வரும், பழைய சோற்று-நீராகாரம் குடித்தால் அது வராது. டாஸ்மார்க் குடிகாரர்கள் மூளையில் உள்ள குறைபாடால் குடிக்கிறார்கள். மரபணு கோளாறு. அதேபோல் அபின், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துக்கள், கொக்கெயின் போன்றவையும் மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும், அதற்கு சரிசெய்ய மிஞ்சாரா சிப்ஸ்களை (எலெக்டராணிக் சீப்பை siliconchip) பொருத்தலாம் என்று ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அளவோடு குடிப்பவர்களால் ஆபத்தில்லை. ஓவவாமை உள்ளவர்கள் சாவார்கள்....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
20-மே-201914:18:11 IST Report Abuse
Manian1. உங்களை பற்றிய முதல் அபிப்ராயம், உங்கள் தோற்றத்திலிருந்தே துவங்குகிறது.: ஆராய்சிகள் கண்ட உண்மை: ஆண்கள் அணிய வேண்டியது- கோடு போடாத அடர்த்தி நிறமில்லாத பேண்ட், வெளிர்நிற கலரிபோட்டல் மேல்-கீழ் நோக்கி மெல்லிய கோடு போட்ட சட்டை- இப்படி அணிந்தவர்களை பார்த்த உடனேயே பார்ப்பவர் மனதில் ஒருவித மகிழ்ச்சி வருகிறதாம். இவரை நம்பலாம் என்ற எண்ணமும், இவரால் நமக்கு ஆபத்து வராது எண்ணமும் வருகிறதாம். இதை பெர்சப்ஷன் மேனேஜ்மெண்ட் (Perception Management) என்கிறார்கள். இதை தற்போது நான் என் வாழ்விலும், பல நண்பர்கள் வாழ்வில் அமுல் படுத்திவிட்டேன். வீட்டிர்க்குள் பழைய அசிங்கமான துணிகள் தூக்கி எறிய மனமில்லை-மனைவியின் முன் செலக்ஷன்கள் மேலும், மேல்-கீழ் நோக்கி மெல்லிய கோடு போ போட்ட சட்டை ஒருவரின் உயரத்தை சற்று மிகைப்படுத்தியும் காட்டுகிறதால் அதனாலேயே பரவசம் வருகிறதாம். பெண்களுக்கு: மெல்லிய உடல் வாகு உள்ளவர்கள்- பெரிய பூக்கள் போட்ட வெளிர்நிற துணிகள், சற்று கனமானவர்கள்- சிறிய பூக்கள் போட்ட வெளிர் நிறக்கலர் துணிகள் (2) உங்கள் நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறை - சிரித்த அல்லது புன்னகை முகம் வரவேற்பை தருகிறதாம் தினமும் யோக மூச்சு பயிற்சி ஒரு ஐந்து நிமிஷம் முக மலர்ச்சியை தரும் - முகத்தில் ரத்த ஓட்டம் தந்து ஆரோக்கியத்தை காட்டும், மேலும் வாயை முடி கன்னத்தையும் உப்ப வைத்து கீழிருந்து மேலாக ஒரு ஐந்து தடவை இரெண்டு கன்னத்தையும் நீவி விடலாம் - ரத்த ஓட்டம் அதிகமாகி ஆரோக்கியத்தை காட்டும்- அளவுக்கு மீறின மேக்கப் அசிங்கமாக தெறியும் (3) அலுவலக சூழல் மேஜையில் வைக்கப் பட்டிருக்கும் பொருட்களின் வரிசை, எல்லாமே எந்த விஷயத்தையும் நீங்கள் சரியாக செய்பவர் என்ற அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது. கணக்கர்கள்,ஆபீஸ் நர்சுகள் பைல்களை உபயோகித்தால் அடுக்குமுறை கட்டாயம் தேவை பொதுவாக வக்கீல்கள் அறையில் அடுக்கி அலமாரியில் வைத்துள்ள பெரும்பாலான சட்டப் புஸ்தகங்கள் வரிசையாக அடுக்கியே வைக்கப்பட்டிருக்கும் இப்படி சிலரால் செய்யமுடியாது- ஹீப்-குவியல் முறை( Heap Method) அடுக்கி வைத்தால் அதை உபோகிக்க மாட்டோம் என்ற எண்ணம் வரலாமாம்-பொதுவாக குவியல் முறை விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களிடம் காணலாம். அது அவர்களுக்கு சிறந்த முறை. (4) வார்த்தைகளை நிதானமாக,கோர்வையாக உச்சரிக்கும் மொழி ஆளுமை திறமை மிக அவசியம். தினமும் ஒரு 5 நிமிஷம் கண்ணாடி முன் தனிமையில் சீரான குரலில் நிதானமாக ஆபீஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தை பற்றி தடுமாற்றம் இல்லாமல் பேசி பழகவேண்டும். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பது, "கண்ணாடி பேச்சு ஆபீஸ் மட்டும்" என்று மாறிவிடும். இதையை பேச்சுவன்மை(Communication skill )/திறமை என்பார்கள். ஆளுமைத் திறமையில் இதுவே முக்கியம். அத்தோடு, நன்றி (Thanks),வருந்துகிறேன்(Sorry) என்ற இரண்டு வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் எங்கும் வரவேற்கப் படுகிறார்கள்.அவர்கள் மனமுதிர்ச்சி தன்நம்பிக்கை உள்ளவர்களாக, பணிவு உள்ளவர்களாக மதிக்கப்படுகிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X