தீயவனுக்கு தான் அதிக பயிற்சி தேவை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

பாடசாலையில், சிவகுரு என்ற ஆசிரியரிடம், மாணவர்கள் பலர், பாடம் பயின்றனர். அங்கு, மற்றவர் பொருட்களை திருடினான், மாணவன் ஒருவன். கையும் களவுமாக பிடிபட்ட அவனை, ஆசிரியர் முன் நிறுத்தினர்.
'திருடுவது, குற்றம் என்று தெரியாதா...' என்று கேட்டார், சிவகுரு.
'இனிமேல் திருட மாட்டேன்...' என்று அவன் உறுதி அளித்ததால், மன்னித்தார்.
ஒரு வாரத்தில், மீண்டும், அவன் கைவரிசையை காட்ட, இம்முறை மன்னிக்காமல், பாடசாலையிலிருந்து அவனை வெளியேற்ற வற்புறுத்தினர், மற்ற மாணவர்கள். ஆனால், வழக்கம்போல, 'திருடுவது, குற்றம் என தெரியாதா...' என்று கேட்டார், சிவகுரு.
'திருடிய இவனை வெளியேற்றா விட்டால், நாங்கள் வெளியேறுவோம்...' என்று, மற்ற மாணவர்கள் குரல் எழுப்பினர்.
'நல்லது; நீங்கள் அனைவரும் செல்லலாம்...' என்றார், சிவகுரு.
இதை, சற்றும் எதிர்பாராத அவர்கள், அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, 'நல்லது, கெட்டதை விளங்க செய்வதே கல்வி. அதை அறிந்த நீங்கள், எங்கு சென்றாலும், நல்வழியில் நடப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திருடுவது குற்றம் என அறியாத இவனுக்கு தான், நிறைய போதிக்க வேண்டியிருக்கிறது...' என்றார்.
குருவின் கருணையை எண்ணி, அனைவரும் வாயடைத்து நின்றனர்.
'ஆசிரியர் மட்டுமல்ல... அன்பு காட்டும் தாயும், அறிவூட்டும் தந்தையும் நீங்களே...' என்று சொல்லி, அழுதான், திருடிய மாணவன்.
இன்னொரு நாள், குருவும், சீடர்களும், யாத்திரை சென்று கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி, இளைப்பாறினர்.
அப்போது சீடன் ஒருவன், 'குருவே... தினமும் கோவிலுக்கு பூஜை செய்கிறவர், கோவில் பக்கம் கூட எட்டிப் பார்க்காதவர், இருவரில் யாருக்கு, கடவுளின் அருள் அதிகமாக கிடைக்கும்...' என்று கேட்டான்.
'இப்போது, நீ இளைப்பாறி கொண்டிருக்கும் இந்த மரத்திற்கு, எப்போதாவது தண்ணீர் ஊற்றி இருக்கிறாயா...' என்றார், சிவகுரு.
'இல்லை குருவே...' என்றான்.
'பின், எப்படி உனக்கு இந்த நிழல் கிடைத்தது?'
'நிழல் தருவது மரத்தின் இயல்பு குருவே...'
'ஆம்... அது போல தான், கடவுளும். தன்னை வணங்குவோர், வணங்காதோர் என்றெல்லாம் பார்க்க மாட்டார். யார் யாருக்கு, என்னென்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்பார். அதற்கு, இந்த மரமே சாட்சி. நிழல் கொடுப்பதற்கு, வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் இது, ஒருபோதும் பார்ப்பதில்லை...' என்றார், சிவகுரு.
கடவுளிடம் முழுமையாக சரணாகதி ஆகிறவர்களுக்கு, அவரவர்களுக்குரிய பலன்களை நிச்சயம் தருவார்.

ஆலய அதிசயங்கள்!
சிவகங்கை - திருப்புவனம் அருகில், கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் உள்ள, மீனாட்சி அம்மன் சிலை, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-மே-201913:10:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இறைவனுக்கு எல்லோரும் சமம் தான் அன்னைக்கும் அப்படியேதான் எவ்ளோக்குழந்தைகள் இருந்தாலும் குறும்பு செய்யும் மக்களை அல்லது மகனை கருத்துடன் கவனிப்பார் தந்தை பட்டென்று நாலு ஆதி போடுவார் ஆனால் அம்மா க்கள் அப்படி இல்லே அன்புடன்பேசியேதான் திருத்துவங்க ரொம்பவெபொறுக்கமுடியலேன்னாலும் கூட அமைதியாகவே இருக்கும் அணைகள் பலர் உண்டு (நான் அப்படி இல்லீங்க) என் பிள்ளைகள் என்னிடம் சித்த பயத்துடன் இருப்பாங்க அப்பா என்றால் ரொம்பவே பிரீடம் என் கணவரும் அனாவசியமா கோவிக்கவேமாட்டாரு இந்தக்குருவின் விளக்கம் பெஸ்ட்
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
23-மே-201913:15:21 IST Report Abuse
Manianநீங்கள் சொல்வது அந்தக் கால அம்மாக்கள். தற்போது தோசை தின்ன அடம் பிடித்த ஐந்து வயது குழந்தையை கரண்டியால் அடித்து கொன்ற தாயே அதிகம். சிங்கம், புலி, கரடி கூட சில சமயம் அடித்தே, உறுமியே, கடித்தே தன குட்டிகளை திருத்தும். ஏனென்றால் அவற்றை காப்பா ற்றவேண்டுமே என்ற எண்ணமே. பல ஆண் பறவைகள் முடடையை அடைகாத்து, குஞ்சு பொரித்து வளர்ப்பாதை யூடியூபில் பார்க்கலாம். எனவே அவர்கள் அவர்கள் வளர்ந்தவிதம், சுழ்நில, புரிதலை பொறுத்தே எல்லாம் அமையும். என்னை என் தாயார் கோபத்தில் அடித்ததாகி இன்று வரை மறக்கவில்லை. ஆனால் அதே அளவு அன்பும் இருந்தத்தால் அவளை எப்பவோ மன்னித்துவிடடேன் . குழந்தை வளர்ப்பு முறை கற்று தரப்படுவதில்லை. முதல் குழந்தை, கடைசி குழந்தை பெரும்பாலும் பெரும் அன்பை மற்ற குழந்தைகள் பெறுவதில்லை. அவர்கள் நண்பர்களையே நாடுவார்கள். குரு இதைத்தான் செய்கிறார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X