ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (3)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

நயாகரா குறித்து, வழிகாட்டி கூறிய ஆபத்து என்னவாக இருக்கும் என, குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில், அவரே அது குறித்து கூறத் துவங்கினார்...
'அமெரிக்கா - கனடா நாட்டின் எல்லையில் உள்ளது, நயாகரா. இதனால், நயாகரா பாதையில் சாலையில் செல்வதற்கு பதிலாக பலர், கனடா நாட்டு சாலையில் சென்று, அந்நாட்டிற்குள் நுழைந்து விடுவர். கனடா அதிகாரிகள் அவர்களை பிடித்து, விசா இல்லாமல், நாட்டிற்குள் நுழைந்ததாக கூறி, நடவடிக்கை எடுப்பர்.
'இந்த பிரச்னையில் இருந்து தப்பி வருவது, பெரும் சிக்கல் என்பதால், நயாகரா சாலையில் சரியாக பயணிக்க வேண்டியது அவசியம்...' என்றார்.
அவர் கூறியது உண்மை தான். அமெரிக்கா - -கனடா எல்லையில், சாலைகள் மிகவும் அருகருகே அமைந்திருந்தன. கொஞ்சம் தவறினாலும், கனடா சாலையில் திரும்பி விடும் சூழ்நிலை இருப்பதை பார்த்தோம்.
எங்களின் வேன் டிரைவர், அடிக்கடி நயாகரா சென்று வந்தவர் என்பதால், சரியாக எங்களை அழைத்து போய் சேர்த்தார். அடுத்த எட்டு நாட்களில், குளிர் காலத்திற்காக, நயாகரா அருவி மூடப்பட உள்ளது என்ற நிலையில், நாங்கள் அங்கு இறங்கினோம். குளிர், ஊசியாய் உடம்பு முழுவதும் குத்த, எப்படியும் அந்த பிரமாண்ட அருவியை பார்த்தே தீர்வது என்ற பிடிவாதத்துடன், அருவி நோக்கி புறப்பட்டோம்.
'ஈரி' என்ற பிரமாண்டமான ஏரியில் இருந்து புறப்படும் நயாகரா ஆறு, கிட்டத்தட்ட, 56 கி.மீ., ஓடி, 'ஒன்டாரியோ' என்னும் ஏரியில் கலக்கிறது. இடையில், அமெரிக்க-ா - கனடா எல்லையில், அருவியாக கொட்டுகிறது. அமெரிக்க பகுதியில் ஒன்று, கனடா பகுதியில் இரண்டு என, இந்த பிரமாண்ட அருவி, மொத்தம் மூன்றாக பிரிந்துள்ளது.
அமெரிக்க பகுதியில், நயாகரா அருவி, 53 மீ., பள்ளத்தில் அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் செலுத்திய பின், அருவியை காண, ராட்சத, 'லிப்ட்' மூலம் இறங்கினோம். அங்கு, அருவியின் சாரலில் நனையாமல் இருக்க, தலையையும் மூடிக் கொள்ளும் வகையிலான, 'பிளாஸ்டிக் கோட்' தந்தனர்.
அதை அணிந்து, பிரமாண்ட படகில் ஏறி, நயாகராவை ரசிக்க புறப்பட்டோம். 10 நிமிட பயணத்தில், நயாகரா அருவி காட்சி தந்தது. உலகின் பிரமாண்ட அருவியை பார்த்த அந்த நொடியில், வியப்பின் உச்சத்திற்கே சென்றோம்.
மெல்ல மெல்ல அருவியை ஒட்டிச் சென்றது, படகு. அதிலிருந்து தெறித்த நீர் திவலைகள், எங்கள் மீது ஸ்பரிசித்த போது, ஒப்பற்ற அந்த பேரருவி, பன்னீர் தெளித்து எங்களை வரவேற்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கடும் குளிரான நிலையில், அருவியின் சாரல், குளிரை மேலும் அதிகப்படுத்தினாலும், அதை பொருட்படுத்தாமல் அந்த அற்புத அருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்து, ரசித்தோம். 1,100 அடி அகலத்தில், 160 அடி உயரத்தில், நிமிடத்திற்கு, 60 லட்சம் கன அடி என்ற அளவில், விண்ணிலிருந்து கொட்டுவது போல் நயாகரா கொட்டிக் கொண்டிருந்தது.
அரை மணி நேரம் அருவியை ரசித்த பின், படகு, கரை திரும்பியது. பிரிய மனமில்லாமல் நயாகராவை திரும்பித் திரும்பி பார்த்தபடி, கரை சேர்ந்தோம். அந்த வேளையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களை, இந்திய ஓட்டல்கள் இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றார், வழிகாட்டி. வரிசையாக சிறிதும், பெரியதுமாக கடைகள் இருந்தன.
வட மாநிலத்தவர் தான், குறிப்பாக, குஜராத்தியர் தான் கடை வைத்துள்ளனர். சமோசா, சுண்டல் முதற்கொண்டு, 'சிக்கன் கபாப்' வரை கிடைக்கிறது. சமோசா சாப்பிட்டு, மசாலா டீயை ருசித்தோம்.

நயாகராவில், இந்திய - சீன முகங்களே அதிகம் தென்பட்டன. இது குறித்து, வழிகாட்டியிடம் கேட்ட போது, 'இங்கு மட்டுமல்ல, எல்லா சுற்றுலா தலங்களிலும் இந்த இரு நாட்டவர்கள் தான் அதிகம் தென்படுவர். அமெரிக்கர்கள் அதிகம் வரமாட்டார்கள். கை நிறைய சம்பளம் என்பதால், இந்தியர்கள், சீனர்கள் அதிகமாக வருகின்றனர்.
'அமெரிக்கர்கள், ஐந்து ஆண்டு காலம் சேமித்த பின்னரே, சுற்றுலா வர முடியும். இந்திய - சீன நாட்டினர் மீது, அமெரிக்கர்கள் அதிருப்தியடைய இதுவும் ஒரு காரணம்...' என்றார்.

நயாகரா அருவியை பார்த்த திருப்தியுடன், அங்கிருந்து நியூயார்க் புறப்பட்டோம். ஆறு மணி நேர பயணம். பார்க்க வேண்டும் என, நான் பல ஆண்டுகளாக கனவு கண்டு கொண்டிருந்த நகரம் அது.
இப்போது, என் கனவு நினைவாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தபோது, எங்கள் டிரைவர், வேனின் வேகத்தை திடீரென குறைத்தார். அவர் முகத்தில் ஒரு பயம்.
அதே நேரத்தில், எங்கள் வேனை தாண்டி, மின்னல் வேகத்தில் இரண்டு போலீஸ் கார்கள், 'சைரன்' ஒலித்தபடி கடந்தன. சில நிமிடங்களில் எங்களுக்கு முன் சென்ற வாகனங்கள் திடீரென நிற்க, எங்கள் வேனும் நின்றது. ஒன்றும் புரியாமல் நாங்கள் வேனுக்குள் அமர்ந்திருந்தோம்.
தொடரும்.

எஸ். உமாபதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-மே-201916:02:22 IST Report Abuse
Girija அமெரிக்காவில் வசித்தவள் என்ற முறையில் சொல்லுகிறேன் அங்கு பெருமைப்பட என்று ஒன்றும் இல்லை. வாழ்க்கை மிகவும் இயந்திரத்தனமானது. இங்கிருந்து அங்கு சென்றவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் விடுமுறைக்கு குடும்பத்துடன் வருகின்றனர், சில குடும்பங்களில் கணவனோ அல்லது மனைவியோ மட்டும் தான் எப்போதாவது வருவார்கள் சேர்ந்து வருவதே இல்லை காரணம் செலவு அதிகம், சிங்கப்பூர் சூப்பர், கல்வித்தரம் இந்தியா பெட்டர், பெரும்பாலான அப்பா அம்மாக்களுக்கு தங்க கரிசன அழைப்பு குழந்தைகளை பார்த்துக்கொள்ளவதற்கு தான்.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
21-மே-201911:39:16 IST Report Abuse
Manianஅங்கே எந்த வித வேலை செய்கிறார்கள் என்பதை பொறுத்ததே அனுபவம். சிறந்த கல்வி (முனைவர்) பட்டம் படித்தவர்கள் ஆராச்சிக் செய்ய அங்கேதான் வசதிகள் உள்ளன. சிறந்த மருத்துவமும் அப்படியே. தனி மனிதன் சட்னாத்ரம், லஞ்சம் கொடுக்க வேண்டியது எல்லாமே பெருமை பட வேண்டிய விஷயமே. பொதுவாக ஓடும் தண்ணிர், தடையில்லா மிஞ்சாரம், சிறந்த ரோடுகள், குறைந்த உணவு விலைகள் போன்றவையும் அங்கே முக்கியம். சும்மா அரை குறை மாஸ்டர் டிகிரி வாங்கி அறிவுக் கூலீக்கு வேலைக்கு போனால் பெருமை பட ஒன்றுமில்லை. தாறுமாறா மருந்துகள் அதிக விலையில் வாங்கி அங்கே பொதுவாக சாவதில்லை. அங்கே எப்போது, எதற்கு லஞ்சம் கொடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா? இங்கே ஏன் அடிக்கடி வருவதில்லை என்றால்- முதலில் 15 நாட்கள் தான் பொதுவாக விடுமுறை கிடைக்கும், இங்கேபோலே மூணு மாசம் இல்லை. மேலும், இங்கே உள்ளவர்கள் அவர்கள் வரவில்லையே என்று ஏங்கவில்லை.சுமார் இருபதுக்கும் மேல் பட்ட அமெரிக்க வாழ் நண்பர்கள் சொன்னது. அதே, நீ மாடும் இல்லேன் இங்கே வரவே மாட்டேன் என்பார்கள். அவர்கள் என்னும் எனக்கு பலவித உதவி செய்தவர்கள். என் வீடு அவர்களுக்கு திறந்திருக்கிறது. அது நன்றி மறவாமை. இங்கே தண்ணிர் பஞ்சம், கும்ப சண்டைகள், விலைவாசி யுணர்வு, வந்தவர்களுக்கு மெணக்கீடு பாதர் ரூமை திருநாமம் சுத்தம் செய்ய வேண்டும். தட்டுப்பாடுகள். மூன்று வேலை சேமிக்க வேண்டும். கரண்ட் போனால், ஏசிக்கு என்ன செய்வது. கொசுக்கடி, ஒவ்வாமை காரணமாக பேதி.. உங்களை காடையப்படுத்தி யாரும் அங்கே இழுத்து செல்லவில்லை. சீச்சீ இந்த அப்பழம் புளிக்கும் கதை வேண்டாம். பேரன் பேத்திகளை பார்க்கவேண்டும் விரும்பாதவர்கள் அங்கே போக வேண்டாம். இங்கே மட்டும் அவர்கள் வீட்டில் இருந்தால் தங்க தாம்பாளத்திலா தாங்குகிறோம். குழந்தைகளை பார்த்துக்கொள்வது இங்கே இல்லையா? சுய நலம் இங்கேதான் அதிகம்....
Rate this:
Share this comment
Cancel
Bala - madurai,இந்தியா
19-மே-201919:49:53 IST Report Abuse
Bala "'அமெரிக்கர்கள், ஐந்து ஆண்டு காலம் சேமித்த பின்னரே, சுற்றுலா வர முடியும். இந்திய - சீன நாட்டினர் மீது, அமெரிக்கர்கள் அதிருப்தியடைய இதுவும் ஒரு காரணம்...' என்றார். "
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
19-மே-201912:44:33 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நான் பலமுறை யு எஸ் போயிட்டு நையா கிராபோகவே முடியலே இன்னிவரை எனக்குமாபெரும் குறையேதான் அவ்ளோதான் அதிருஷ்டம் ஒன்னும் செய்யமுடியாது mmmmmmmmmmmmmm
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X