மனசே, மனசே குழப்பம் என்ன! - இதயம் காக்கும் இதயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2019
00:00

என்னுடைய இரண்டாவது மகள் ஐஸ்வர்யா; பிறந்த, 40வது நாளில், பரிசோதனைக்குச் சென்ற போது, இதயத்திலிருந்து அதிகப்படியான சப்தம் வருகிறது; தானாகவே சரியாகாவிட்டால், 1 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று டாக்டர் சொன்னார்.
முதல் பிறந்த நாளன்று, மும்பையில், அறுவை சிகிச்சை நடந்தது; நலமாக இருந்தாள்; பள்ளிக்குச் செல்லத் துவங்கினாள்.
மூன்றரை வயதில், இரண்டாவது முறையாக, அறுவை சிகிச்சை தேவைப்பட்டது; மிகவும் சிக்கலாக இருந்ததால், அவளை காப்பற்ற முடியவில்லை.
இது நடந்தது, 1991. அதன்பிறகு, என் மகளைப் போல, பிறவி இதயக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தோம்.
கடந்த, 2008ல், இதய அறுவை சிகிச்சை நிபுணர், கே.ஆர்.பாலகிருஷ்ணனிடம் பேசிய போது, 'இதயக் கோளாறுடன் பிறக்கும், பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகள் அனைவருக்கும், எங்களால் உதவி செய்ய முடிவதில்லை.
'நாம் ஒரு அறக்கட்டளை துவங்கி, தமிழக அரசின், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் நிதி உதவியுடன் சேர்த்து, நம்மால் முடிந்ததைச் செய்தால், நிறைய குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்' என்று சொன்னார்.
இதைக் கேட்டவுடன், எனக்கு உந்துதலாக இருந்தது. என் மகளை இழந்ததைப் போன்று, வேறு யாரும் வலியை அனுபவிக்கக் கூடாது; பணம் இல்லாததால், குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்ற முடியவில்லை என்று இருக்கக் கூடாது என, நினைத்தேன்; என் தந்தை, கே.நாகராஜன், நான், டாக்டர் பாலகிருஷ்ணன் இணைந்து, சென்னையில் இந்த அறக்கட்டளையை துவக்கினோம்.
எங்களின் செயல்பாடுகள் குறித்து, எதுவும் தெரியாது என்பதால், முதல் சில ஆண்டுகள், நிதி திரட்ட சிரமமாகவே இருந்தது; என் குடும்பம், நண்பர்கள் உதவி செய்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின், நேர்மையான, வெளிப்படையான எங்களின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்த பலரும் நிதி உதவி செய்கின்றனர்.
கடந்த ஆண்டு மட்டும், 501 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர். இதில், 95 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த, 11 ஆண்டுகளில், 2,000 பேருக்கு மேல் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து, 60 ஆயிரம் குழந்தைகளுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்துளோம். இதய மாற்று அறுவை சிகிச்சையில், 55 குழந்தைகள் பலன் பெற்றுள்ளனர்.
நிதி அதிகம் வரத் துவங்கியதும், மருத்துவப் பரிசோதனை திட்டத்தை துவக்கினோம். வேலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், வாரம் ஒரு முறை, எங்களின் மருத்துவக் குழுவினர் சென்று, குழந்தைகளை பரிசோதிக்கின்றனர்.
பிரச்னை இருந்தால், போர்டிஸ் - மலர் மருத்துவமனையில், தேவையான மருத்துவ உதவியைச் செய்கிறோம்.
தமிழக அரசு, எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களையும், சமூக பொறுப்பு திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்துகிறது. இதன் மூலம் எங்களுக்கு நிதி வரத் துவங்கியது. மருத்துவக் காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் நிதியுடன், தேவைப்படும் கூடுதல் நிதியை, நாங்கள் தருகிறோம்.
எங்களின் நிர்வாகச் செலவு வெறும், 5 சதவீதம் மட்டுமே. எங்களுடைய டாக்டர்கள், உதவி செய்பவர்கள் என்று அனைவரும் தன்னார்வலர்கள்; அவர்களுக்கு சம்பளம் எதுவும் தருவதில்லை.
பொருளாதார நிலையில் பின்தங்கிய குழந்தைகளுக்கான டிரஸ்ட் இது.

சித்ரா விஸ்வநாதன்,
நிர்வாக அறங்காவலர், ஐஸ்வர்யா டிரஸ்ட்,
பெங்களூரூ.
www.rhythmofheart.org
aishwaryatrust.org@gmail.com
044 28151953

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X