மே 20, 1845
சமூக சேவகர், தமிழறிஞர், தென்னிந்தியாவில் சாதியை எதிர்த்துப் போராடிய முதல் போராளி அயோத்திதாசர் பிறந்த நாள்.
மே 22, 1772
உடன்கட்டை ஏறும் பழக்கத்துக்கு எதிராகப் போராடி, பெண் உரிமைக்காகக் குரல் கொடுத்த ராஜா ராம் மோகன் ராய் பிறந்த நாள்.
மே 22, 1992
உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் சர்வதேசப் பல்லுயிர்ப் பெருக்க நாள்.
மே 23, 1707
ஸ்வீடனைச் சேர்ந்த உயிரியலாளர், மருத்துவர், நவீன வகைப்பாட்டியலின் தந்தை
கார்ல் லின்னேயஸ் பிறந்த நாள்.
மே 23, 2000
விரைவாக அழிந்து வரும் ஆமை இனங்களைப் பாதுகாக்கும் உலக ஆமைகள் நாள்.
மே 24, 1819
பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் மிக அதிக நாட்கள் ராணியாக இருந்த விக்டோரியா பிறந்த நாள்.