பி.கே.செல்வராஜ், நெய்வேலி: 'டிவி' சேனல்களில் செய்தியின்போது, மேலே, நடுவே, கீழே என்று காண்பிக்கின்றனர். இதை எப்படி பார்ப்பது? ஒரே நேரத்தில், எட்டு விஷயங்களில், நம் கவனிப்பும், மூளையும் செயல்பட வேண்டும் என, முதியோர் கூறுவர்! உங்களால் முடியவில்லை என்றால், படிக்கும் செய்தியை மட்டும் கேளுங்கள்!
* ஆர்.கோபால், திருச்சி: என் நண்பன், நாட்குறிப்பை, 'டைரி'யில், தினசரி எழுதுகிறான்... நானும், இதே போல் செய்யலாமா? ஒரு, 'அட்வைஸ்' சொல்லட்டுமா... நம்மைப் போன்றோர், நாட்குறிப்பு எழுதுவதை விட, தினசரி ஆகும் செலவுகளை எழுதி வந்தால் போதும்! தேவையில்லாத செலவுகள் குறித்து, நமக்கு அப்போது தெரிய வரும். இப்படி செய்தால், நம், 'பர்ஸ்' தினமும் கனமாகவே இருக்கும்!
என்.ஜெய்சங்கர், சென்னை:என் நண்பன், தனக்கு, 'அதிர்ஷ்டம் இல்லை அதிர்ஷ்டம் இல்லை...' என, புலம்புகிறானே... அதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? ஒருவன் உழைக்கும்போது, கிடைக்கும், வசதி, வாய்ப்பு இருக்கிறதே, அதைத் தான், அதிர்ஷ்டம் என, கருதுகிறேன்!
லெ.நா.சிவக்குமார், சென்னை: 'வாரமலர்' இதழை ஆரம்ப காலத்திலிருந்து படித்து வருகிறேன்; கேள்விகளும் எழுதி வருகிறேன்... என்னை அறிவீரா? நேரில் பார்த்து, பேசியதில்லையே தவிர, அஞ்சல் அட்டையில், உங்களது முகவரியின், முத்திரையை வலது ஓரம் பார்த்து, மூன்றாவது, கடைசி கேள்வி எழுதும்போது, உங்களது கையெழுத்து சுருங்கி இருக்கும் என்பது கூட தெரியாதா எனக்கு!
* டி.மணியம், காஞ்சிபுரம்: வட்டிக்கு கடன் கொடுப்பவன் புத்திசாலியா, கடன் வாங்குபவன் கெட்டிக்காரனா? 'இரண்டாமவன் தான்' என, விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். வாங்கியவன், வெளிநாடு தப்பி ஓடி விடுகிறானாம்!
எஸ்.பாலசுப்ரமணி, கோவை: மது பழக்கத்திற்கு ஆளாகி விட்டேன்... இதனால், குடும்பத்தில், சண்டை - குழப்பம்; நிம்மதி போய் விட்டது. இதிலிருந்து மீள என்ன வழி? உங்கள் மனம் ஒன்று தான், ஒரே ஒரு வழி!
* எஸ்.ராஜேஸ்வரி, மதுரை: உயிருடன் இருக்கும்போதே, பிள்ளைகளுக்கு, சொத்தை பிரித்துக் கொடுத்து விடுவது நல்லதா? உயிருடன் இருக்கும்போதே பிரித்து எழுதி, எழுதியவர் மறைந்த பின், அவரவர் எடுத்துக் கொள்ளலாம் என்பதே நல்லது; இல்லை என்றால், வக்கீல்களுக்கும் பங்கு போய் விடும்!
வி.முத்துராமு, பொன்னமராவதி: பரிசுக்குரிய கேள்விகளை, நீங்கள் எந்த முறையில் தேர்வு செய்கிறீர்கள்? பதிலளிக்க வேண்டியது தான் என்னுடைய வேலை! நீங்கள் கேட்டதை, பொறுப்பாசிரியர் செய்து கொள்வார்!
ப.ல.பரமசிவம், மதுரை: 'இத்தனை ஆண்டுகளாக பத்திரிகைகளில் எழுதி, பதில் பெற்று, என்ன சாதித்து விட்டீர்கள்...' என, என் மனைவி கேட்கிறாரே... என்ன சொல்வது? 'எனக்குள்ள வாசகர் வட்டம், படித்து விட்டு, சபாஷ் போடும் ரசிகர்கள் உனக்கு உண்டா?' என, எதிர் கேள்வி போடுங்கள்!
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
ப ட்டிக்காடடானக்காக திருத்திய பதிப்பு : டி.மணியம்: அந்துமணி சார் சரியாகத்தான் சொன்னார். கடன் வாங்கி எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கம்பர், "ராவணன்- கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று ஒரு இடத்தில சொல்லுகிறார். அதை மாற்றி இன்று, "கடன் கொடுத்தார் நெஞ்சம் போல் கலங்கினார் கந்தசாமி "என்று சொல்லவேண்டும். இதற்கு ஒரு உதாரணம் . எனது கேரளத்து நண்பர் சங்கரன் நாயர் சொன்னது- 1. நிறைய கடன் வாங்கி வட்டிக்கு விடணும் சாரே. கடன் கொடுத்வன் கேட்டால் , நாலு பேரை கூப்பிட்டு, அவர்கள் முன்னிலையில் , இவருகிட்டே கடன் வாங்கினது சத்தியம், ஆனா இப்போ திருப்பக் கொடுக்க வசதி இல்லை என்று பரிதாப குரலில் சொல்ல வேண்டும். 2. அதை கேட்பவர்கள், எவ்வளவு உணமையான மனுஷ்யர் இவரு என்று கடன் வாங்கியவரை சப்போர்ட் பண்ணுவார்கள். மேலும், கடன் கொடுத்தவரிடம் , ஏங்க அவுருதான் கடன் வாங்கினது சத்தியம்னு உண்மையை சொல்லுராரே. பின்னாலே தருவார் வாங்கிக்கொள்ளுங்கள், எவ்வளவு நாணயமானவர் என்று சொல்லி சென்று விடுவார்கள். (3) அப்படி கடன்வாங்கியவர் மேல் இதை கோர்ட்டிலும் தேவவையான போது சொல்லவேண்டும். நீதிபதியும் கடன் வாங்கியவர் நாணயமானவர் என்று, சமாதானமாக போகும் படி சொல்வார்.4 அப்படியே கடன் வாங்கியவர் செத்தா பிறகும் அவரது மகனும் தகப்பனாரை போலவே, இவர் நாணயமானவர், பாவம் தற்போது கடனை திருக்கப்ப கொடுக்க முடியவில்லை என்ற மாயையை ஏறபடுத்துவார். 5. மகனும் செத்த பிற்பாடு அவரது பேரனும் இப்படியே சொல்வான். ஆகையால் கேளரத்துக்காரனுக்கு கடன் கொடுத்தால் யானை வாயில் போன கரும்புதான் என்று சொன்னார். இதை நான் மறப்பதில்லை. எனவே, இரண்டு தடவை சிறு கை முதல் இழந்த நான், தற்போது என்னிடம் கடன் கேட்க வருபவர்களிடம், நானும் கொஞ்ச நாழிக்கு முன்னாடி உங்களை பார்க்க வரலாம் என்று கிளம்பி கொண்டிருந்தேன் உங்களிடமே கொஞ்சம் கடன் வங்கலாம் என்று வந்தேன் என்பேன், அவர்கள் ஓடி விடுவார்கள். இந்த முறையில் , தற்போது கடன் வாங்காமல் கொடுக்காமல் தொல்லை இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை. பொதுவாக உதவி செய்ய பணம் கொடுப்பவன் / கொடுத்தவன் ஏமாளி. , அதிக வட்டி தருகிறேன் என்பதை (எந்த சுத்தமான தங்க நகைகளும் ஈடாக வாங்காமல்) கேட்டு கடன் கொடுப்பவர்கள். வட்டி பேராசை பிடித்தவன்(சிலர் பரிதாபத்திற்குரியவர்கள்). ஆகவே, கடன் வாங்கி அதை திருப்ப கொடுக்காமல், அந்த கடன் பணத்தை கந்து வட்டிக்கு கொடுப்பவன் பிறர் காசில் வட்டி வழியே காசு சேர்க்கும முதலாளி. அதைத்தான் பெரிய பணக்கார போலி விவசாயிகள் (எந்த அடமான சாமான்களுக்கும் கொடுக்காமல்) பேங்கு கடன் வாங்கி கந்து வட்டிக்கு விட்டு வியாபாரம் செய்கிறார்கள் . பணக்கார சாடச்சி கைலயெத்தும் வாங்காமல், எந்த தங்க ஆபரண பிடிமானமும் இல்லாமல் கடன் கொடுத்து பரம்பரை முதலை இழந்து கடனாளியாகுவான். ஆகவே ஏழ்மைக்கு இரக்கம் ஏழ்மைக்கு வழி யாக மாறும் (இது பொது விதி) . தங்க நகை அடகு வாங்கி கடன் கொடுப்பவனே சிறு, குறு தொழில் அதிபர். பி அப்படியே செத்த பிற்பாடு அவரது மகனும் இப்படியே சொல்வான். ஆகவே, பாத்திரம் அறிந்து பிச்சை கொடு, (நாணய) சரித்திரம் அறிந்து பெண் கொடு என்பதே புது மொழி.
.
என்.ஜெய்சங்கர்- அதிர்ஷ்டத்தின் மறு பெயர் புள்ளி விவர இயல் (Statistical Probability ) நமக்கு தெறியாதே, நம்மால் கட்டுப்படுத்த முடியாத கால நிகழச்சி. அது யாருக்கு எப்போது நடக்கலாம் எனபது ரகசியம். அதை நம்பினவர்கள் கோடி கோடி லாட்டரி வாங்க ஏமாறும் நபர்களே. உழைப்பு கால தாமதமானலும் பலன் தரும். இடம், போருள், ஏவல் என்று சொல்வதில் ஏவல் என்பது இதுவே- தகுந்த நேரத்தில், தகுந்த இடத்தில், தகுந்த செயல் நிறைவாவவதே அதிர்ஷ்டாம். 0.000001 %முறையிலேயே இது நடக்கும்.கண்ணன் கீதையில்,அர்சுனா, பிதாமகர் பீஷ்மல் மேல் அம்பை உடனே செலுத்து என்றதை உடனே அர்சுனன் செய்ததே அவனு அஇர்ஷ்டம். அந்த ஷணம் போயிருந்தால்...?ஆகவே இடைவிடாத,தளறாத ஊக்கவினை தரரும் சிறிய நேர ஜன்னலே அதிர்ஷ்டம்.
எஸ்.ராஜேஸ்வரி- பிள்ளைக்கலி படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். நமக்குக்கு பின் தான் சொத்தில் பங்கு, சண்டை போடுபவ்களுக்கு சல்லி காசு/நயாபைசா கெடையாது என்று உயில் எழுதி சாட்சிகளுடன் ரிஜிஸடர் செய்து வைத்து விடவேண்டும்.பிற்கால சந்ததிக்களுக்கு கல்விக்கு குதிரை சாண, ஒரு கால் வைத்து ஏற தொங்கும் கால் வளையமாக இருக்கவேண்டும். வெரும் உணர்ச்சியால் ஆதாரம் இல்லாத கற்பனையால் சொத்தைப் பிரித்து கொடுபவர்கள் காசியில் பிச்சை எடுப்பார்கள், இல்லை வவக்கீல்களுக்கு தீனிபோட்டு கோர்ட்டு வாசலில் அனாதையாக சாவார்கள் என்பது பொதுவிதி இதை தடுக்க அளவோடு குட்டி போடுதலே பாதுகாப்பு
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.