இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
00:00

69 வயது இளைஞனான, ரஜினி!
தன், 69 வயதிலும், இள வயது நடிகையருடன், 'ரொமான்ஸ்' செய்து நடனமாடி வருபவர், ரஜினி. அதோடு, வயதை காரணம் காட்டி, சண்டை காட்சிகளில் அதிகமாக, 'டூப்'பை பயன்படுத்தவும் அனுமதிப்பதில்லை-. சில ஆபத்தான காட்சிகளில், 'டூப் பயன்படுத்தலாம்...' என்று இயக்குனர்கள் கூறினாலும், ஏற்பதில்லை. 'நான் சண்டை செய்வதாக நம்பித்தான், ரசிகர்கள் ரசிக்கின்றனர். அதனால், 'டூப்'பை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. 69 வயது ஆனாலும், இப்பவும் நான் இளைஞனாக தான் உணர்கிறேன். அதனால், வயதை காரணம் காட்டி, என்னை குறைத்து மதிப்பிடுவதை விரும்பவில்லை...' என்கிறார், ரஜினி.
சினிமா பொன்னையா

ஆச்சர்யத்தில் உறைய வைத்த,சமந்தா!
திருமணத்திற்கு பின், பல நடிகையரின் மார்க்கெட், சரிந்து விடும். ஆனால், சமந்தாவோ, திருமணத்திற்கு பிறகும், 'பிசி'யாக நடித்து வருகிறார். அதோடு, இதுவரை, இரண்டு கோடி ரூபாய், சம்பளம் வாங்கி வந்தவர், மாமனாரான நாகார்ஜுனாவுடன், மன்மதடு - 2 என்ற, தெலுங்கு படத்தில் நடிக்க, மூன்று கோடி ரூபாய் வாங்கியுள்ளார். திருமணத்திற்கு பின் அக்கா, அண்ணியாக நடித்து வரும் நடிகையர், இதை கேள்விப்பட்டதிலிருந்து, ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.
— எலீசா

அசைவத்துக்கு மாறும், கீர்த்தி சுரேஷ்!
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில், கோடு போட்டு நடித்து வந்த, கீர்த்தி சுரேஷ், பின், மெல்ல மெல்ல பட்டும் படாமலும் கவர்ச்சி கொடியேற்றினார். இப்போது, பாலிவுட்டிற்கு சென்றுள்ள அவரை, முதல் படத்திலேயே அசைவ நடிகையாக்கி விட்டனர். பாலிவுட் நடிகையருக்கு ஈடுகொடுக்க, தன் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டுள்ள, கீர்த்தி சுரேஷ், 'இந்தியில், வெற்றி பெற்ற பின், மீண்டும் தமிழ் சினிமாவை, கவர்ச்சி சுனாமியாக தாக்குவேன்...' என, கூறி வருகிறார்.
எலீசா

'காக்கா' பிடிக்கும், நயன்தாரா!
முப்பத்தைந்து வயதாகி விட்ட நயன்தாராவுக்கு, சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களுடன் நடிக்கும் போது, அவர் முகத்தில், முதிர்ச்சி சற்று அதிகமாகவே தெரிகிறது. அதனால், 'குளோசப்' காட்சிகளில், முகத்தை படமாக்கும்போது, தன்னை இளமையாக காண்பிக்குமாறு ஒளிப்பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறார். தான் சொல்வது போன்று, இளமையாக தன்னை, கேமராவில் காண்பித்தால், உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் நயன்தாரா, கேமராமேனுக்கு, தன் சார்பில் விலையுயர்ந்த பரிசு பொருளை கொடுத்து, அவர்களை திக்குமுக்காட வைக்கிறார்.
— சினிமா பொன்னையா

கறுப்புப்பூனை!
* விட்ட மார்க்கெட்டை பிடித்து விடவேண்டும் என்று கைவசமுள்ள படங்களில், 'டூ பீசு'க்கு மாறியுள்ளார், பையா நடிகை. அந்த உடை அலங்காரத்தில் ஆடும் பாடல் காட்சிகளில், அம்மணி ஆடும் வெறியாட்டம், படப்பிடிப்பு தளத்தையே வேர்த்து கொட்ட வைக்கிறதாம். அதைப் பார்த்து, 'இவ்ளோ ஓவரான ஆட்டம் தேவையா----...' என்று காது கடிக்கும், இயக்குனர்களிடம், 'சில காலம் நான் அடக்கி வாசித்ததால், ரசிகர்கள் என்னை மறந்து விட்டனர். அதனால், மறுபடியும் அவர்களின் கவனத்தை, என் பக்கம் திருப்புவதற்காகவே, இந்த வழி...' என்று சொல்லி கண்ணடிக்கிறார், பையா நடிகை.
'என் பெண்ணோட தோழி, தமன்னா பொண்ணு, ஆளே மாறிட்டா... காலேஜுக்கு போற வரைக்கும், அடக்க ஒடுக்கமா, உடை உடுத்திட்டு போவா... இப்ப வேலைக்கு சேர்ந்த பின், அரையும் குறையுமா, உடை அணிந்து அலங்கோலமா ஆயிட்டா...' என்று அங்கலாய்த்தார், எதிர் வீட்டு மாமி.

சினி துளிகள்!
* எதிர்மறையான கதாபாத்திரத்தில், சிரஞ்சீவியின், சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ளார், தமன்னா.

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X