அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
00:00

என் வயது, 24, பி.இ., படித்த பெண். ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தபோது, உடன் பணிபுரிந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இரு வீட்டாரின் ஆதரவும் இல்லை. மகள் பிறந்ததும், அவளை பார்த்துக்கொள்ள, வேலையை விட்டேன்.
குழந்தைக்கு ஆறு மாதம் ஆன போது, வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்றார், என் கணவர். மூன்று ஆண்டுகளில் திரும்பி வருவதாக கூறினார். ஐந்து ஆண்டு ஆகியும் இன்னும் வரவில்லை. வாரா வாரம் போன் செய்வார்; செலவுக்கு பணமும் அனுப்பி விடுவார்.
அக்கம் பக்கத்தினர், 'இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. விரைவில் நாடு திரும்ப சொல் அல்லது நீ அவருடன் செல்ல பார்... ஏமாளியாக இருக்காதே...' என்று அறிவுறுத்துகின்றனர்.
இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபப்படுகிறார்.
அவர் பணிபுரிய சென்ற நிறுவனத்தை, 'இ - மெயிலில்' தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்நிறுவனத்தில், தற்சமயம், அவர் பணியில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. அவரிடம் கேட்டதற்கு, 'என்னையே சந்தேகப்படுகிறாயா... உங்களுக்காகதானே நான், அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளேன்...' என்கிறார்.
என்னால், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.

அன்பு மகளுக்கு —
இந்திய பணியாளர்களை, வெளிநாட்டு பணியிடங்களில் அமர்த்தும் பன்னாட்டு நிறுவனங்கள், பல துரோகங்களை செய்கின்றன.
ஒன்று: குறைவான சம்பளம் கொடுத்து, ஊழியரை, காத்திருப்பு பட்டியலில் வைக்கிறது.
இரண்டு: எந்த பணிக்காக குறிப்பிட்ட ஊழியர், அழைக்கப்பட்டாரோ, அந்த பணியை, ஜூனியர் ஊழியர்களுக்கு சொல்லி தர பணிக்கப்படுகிறார்.
மூன்று: இந்தியாவுக்கு சென்று வர வழங்கும், இலவச விமான டிக்கெட் மற்றும் மருத்துவ செலவை மீண்டும் பெறுதலை, நிறுவனம் ரத்து செய்கிறது.
நான்கு: பணிக்கு போன, ஆறே மாதத்தில் பணி நீட்டிப்பை, நிறுவனம் ரத்து செய்கிறது. சில சமயங்களில், இரண்டிரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு கொடுத்து, ஊழியரை சித்திரவதை செய்கிறது.
இது மாதிரியான துரோகங்கள் எதிலாவது, உன் கணவர் சிக்கியிருப்பாரோ என சந்தேகப்படுகிறேன். வெளிநாட்டில் பணிபுரிபவர், அங்கு ஏதாவது ஒரு பெண்ணுடன், ரகசியமாய் குடும்பம் நடத்துகிறாரோ என, சந்தேகம் எழுவது இயற்கை தான்.
எனக்கு தெரிந்து, வெளிநாட்டில் பணிபுரியும் எத்தனையோ ஆண்கள், குடும்ப நலனுக்காக, தங்களது வியர்வையுடன் ரத்தத்தையும் சேர்த்து விற்கின்றனர்.
குறைந்த சம்பளம் தரும் நிறுவனத்தில் இருந்து விலகி, அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்திருப்பார், உன் கணவர். அதை உன்னிடம் சொல்லி, கலவரப்படுத்த வேண்டாம் என, நினைத்திருக்கலாம்.
அடுத்து நீ செய்ய வேண்டியவை:
* மீண்டும் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்கு செல். மகளை காரணம் காட்டி, பார்த்த வேலையை விட்டது, உன் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது
* 'அன்பு கணவரே... நான், உங்களை சந்தேகப்படவில்லை. தற்சமயம், நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்பதை, வெளிப்படையாக கூறுங்கள். நீங்கள் அருகாமையில் இல்லாதது எனக்கும், மகளுக்கும் பெருத்த நஷ்டம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே எனக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். நானும், மகளும் உங்களுடன் இருந்து, வாய்க்கு ருசியாக சமைத்து போடுகிறேன். உங்களுக்கு வேறு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலும், தயங்காமல் கூறுங்கள். நான் சரி பண்ண பார்க்கிறேன்...' எனக் கூறு
* அப்போதும், உன் கணவரிடம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், அவர் பணிபுரியும் நாட்டின், இந்திய துாதரகத்தை அணுகி, கணவர் பற்றிய தகவல்களை கூறி, தற்சமயம், எங்கு பணிபுரிகிறார் என்பதை கேட்டறி
* கணவர் பணிபுரியும் இடம் தெரிந்து விட்டால், நீயும், உன் மகளும், அந்த நாட்டுக்கு பயணப்படுங்கள். அங்கு, கணவர், குடும்ப நலனுக்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை, கண்டுபிடி
* கணவர் மீது தவறு இருந்தால், குடும்பம் நடத்தும் பெண்ணை கைவிட்டு, இந்தியாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்து. மறுத்தால், இந்தியா திரும்பியதும், கணவர் மீது வழக்கு போடு. பார்க்கும் வேலையை விட்டு, இந்தியாவுக்கு வரும் கட்டாயத்தை ஏற்படுத்து.
பொதுவாக, பெண்களுக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன்... வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு கழுத்தை நீட்டும் முன், ஒரு நிமிஷம் யோசனை செய்யுங்கள்.
திருமண வாழ்க்கை தோற்று, வெளிநாட்டு பணம் சம்பாதித்து என்ன பயன்... திருமணத்திற்கு பின், வெளிநாட்டில் பணி செய்யும் மாப்பிள்ளை, மனைவியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார் என்றால், அது சிலாகிக்கக் கூடிய விஷயம்.
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vadakkupatty Ramasamy - Pacific Coast,யூ.எஸ்.ஏ
28-மே-201912:53:35 IST Report Abuse
Vadakkupatty Ramasamy இந்த பெண்ணின் வயது 24 .திருமணத்திற்கு பிறகு கணவர் 5 வருடமாக வெளிநாட்டில் இருக்கிறார்...அப்படி என்றால் இவர் எப்போது BE முடித்தார்...18 வயதிலா??
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
27-மே-201909:39:56 IST Report Abuse
pattikkaattaan /// வெளிநாட்டில் பணிபுரியும் எத்தனையோ ஆண்கள், குடும்ப நலனுக்காக, தங்களது வியர்வையுடன் ரத்தத்தையும் சேர்த்து விற்கின்றனர்/// ஆனால் ஊரில் இருப்பவர்களுக்கு அது புரிவதில்லையே .. என்ன செய்வது ..
Rate this:
Manian - Chennai,இந்தியா
29-மே-201907:31:46 IST Report Abuse
Manian'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ' என்பது பழமொழி. இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குந்தைகளைப் பார்க்க , பண வசதி இருந்தால் குடும்பத்தை பார்க்க வர வேண்டும். எனது தகப்பனார் காலத்தில் பலரும் பர்மா,மலேயா, சிங்கப்பூர், சிலோன் போய் கோயில்கள்,, காப்பி ஓட்டல்களில் வேலை செய்தும், கூலி வேலை (ரப்பர், தேயிலை தோட்டங்களில்) செய்தும் ஊருக்கு பணம் கொண்டு வருவார்கள். அப்படி பட்ட சுமார் 20 குடும்பங்களை எனக்கு தெறியும். கலேசு கல்வி அறிவு வளராத காலம் அது. கொண்டு வந்த காசில் சிறிது நஞ்சை நிலம் வாங்குவார்கள். திரும்ப வந்த பிறகு வயல்களில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில் வாழ்வார்கள். அந்த நிலங்களை"உழுதவனுக்கே நிலம் சொந்தம் என்று பிடுங்கிக் கொண்டவர்கள்தான் இன்று தண்ணீரின்ரி தவிக்கிறார்கள். வாணிபம், வட்டிக்கு கடன் கொடுத்தவர்களும் -லேவாதேவி-செய்தார்கள். ஆகவே,அந்தக்காலத்தை அறியாதவர்களே புரிதல் இல்லாதவர்கள்.எல்லா நாடுகளிலும் இப்படி வெளியே சென்று வேலை செய்பவர்கள் அதிகம்.இதில் பெருமை படவோ, வருத்தப்படவோ எதுவும் இல்லை.இந்த பெண்ணின் கணவனுக்கும் தன் குழந்தை பற்றிய அக்கறை தேவை. ஆதல் திருமணம் செய்து கொண்டவர்கள் குடும்ப கட்டுப்பாடும் செய்திருக்க வேண்டும். அது தற்போது காலாவதியான பொறுப்பு . காதலன் வெளி நாடு போவான் என்று தெரியாமலா திருமணம் செய்து கொண்டடாள் ? குழந்தையே பரிதாபத்திர்குறியாது....
Rate this:
Cancel
Manian - Chennai,இந்தியா
26-மே-201913:32:40 IST Report Abuse
Manian கணவன் இருக்கும் ஊர் தெரிந்தால், அங்கே உள்ள தமிழ் சங்கத்திற்கு ஒரு மின்வலை கடிதம் போட்டால், பொதுவாக அவர் இருப்பிடம் பற்றி தகவல்கள் தருவார்கள். அதில் அவர் வேலை செய்யும் கம்பெனி பெயரும் இருக்கலாமே. மேலும், அவர் இருக்கு ஊரில் சென்னைல யாரவது அவரின் சொந்தங்கள் இருந்தால் தொடர்பு கொள்ள சொல்லி ஒரு விளம்பரம் கொடுத்து அதன் மூலம் கண்டு பிடிக்கலாம் . அங்கே உள்ள இந்து கோவில்கள் மின் வலைத்தளத்தில் தேடலாம். காசு ஏதாவது கொடுத்திருந்தால், அவர்களிடம் அவர் விலாசம் இருக்கும். ஐடியில் வேலை பார்த்தும் இதெல்ல்லாம் சிந்திக்க தெரியவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X