ஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2019
00:00

நயாகராவில் இருந்து, நியூயார்க் நகருக்கு சென்று கொண்டிருந்த எங்கள் வேன், திடீரென நின்றதும், போலீஸ் கார்கள் மின்னல் வேகத்தில் எங்களை கடந்து சென்றதும், திகைப்பில் ஆழ்த்தியது. என்ன நடக்கிறது என்று பார்த்தோம்.
எங்களை கடந்து சென்ற போலீஸ் கார்களில் இருந்து இறங்கிய போலீசார், முன்னே சென்று கொண்டிருந்த ஒரு காரை மடக்கி, விசாரித்துக் கொண்டிருந்தனர். அரை மணி நேரத்திற்கு பின், கார்கள் மெல்ல நகரத் துவங்கின.
விசாரித்ததில், குறிப்பிட்ட அந்த கார் டிரைவர், அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்திற்கு அதிகமாக ஓட்டி வந்ததாகவும், அதனால், போலீசார் மடக்கி, அபராதம் விதித்தனராம்.
இந்த நேரத்தில், அமெரிக்க போலீசை பற்றியும், அங்குள்ளோர், போக்குவரத்து விதிகளை மதிப்பது குறித்தும் சொல்லியே ஆக வேண்டும்...
எல்லா சாலைகளிலும், வாகனங்கள் செல்ல வேண்டிய வேகம் குறித்த அறிவிப்பு பலகைககளை, தெரியும்படி வைத்துள்ளனர். என்ன அவசரம் என்றாலும், வாகன ஓட்டிகள் அந்த அளவை மீறுவதில்லை. மீறுபவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளுக்கு கண்டிப்பாக, 'பேபி சேர்' எனப்படும், பாதுகாப்பான இருக்கைகள் இருக்க வேண்டும். நம் ஊர் போல, குழந்தைகளை மடியிலோ அல்லது தனி இருக்கையிலோ அமர வைத்து அழைத்துச் சென்றால், அபராதம் நிச்சயம். வாகன ஓட்டியும், முன் சீட்டில் அமர்ந்திருப்பவரும், 'பேபி சேரில்' அமர்ந்திருக்கும் குழந்தையும் கண்டிப்பாக, 'சீட் பெல்ட்' அணிந்திருக்க வேண்டும்.
சிக்னல்களில் கார்கள், எந்த தடத்தில் வந்தனவோ, அதிலேயே, முன் உள்ள வாகனத்திற்கு பின், இடைவெளி விட்டு நிற்க வேண்டும். தடம் மாறி, மாற்று தடத்தில் முன் வந்து வாகனத்தை நிறுத்தினால், தண்டனை. விபத்து போன்ற காரணங்களால் போக்குவரத்து நிறுத்தப்பட்டால், எவ்வளவு நேரம் ஆனாலும் வாகனங்கள் காத்திருக்கின்றன.
பாதசாரிகள் குறுக்கிட்டால், அவர்கள் சாலையை கடக்கும் வரையில், வாகனங்கள் பொறுமையாக நிற்கின்றன. சாலை விதிகளை அங்குள்ள அனைவரும் மதிக்கின்றனர்.

நியூயார்க் நகரில் உள்ள, 'டைம்ஸ் ஸ்கொயர்' சர்வதேச அளவில் சுற்றுலா பயணியரை கவரும் இடமாக உள்ளது.
ஒருபுறம், மின் விளக்குகளின் விஞ்ஞான வித்தை பிரமிப்பூட்டிய நிலையில், மறுபுறம், கலைஞர்களின் தெரு முனை நடனங்கள், சுற்றுலா பயணியரை வியப்பின் உச்சத்திற்கே அழைத்து செல்கிறது.
ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பல்வேறு நடன நிகழ்ச்சிகள், யதார்த்தமாக நடக்கின்றன. அவற்றை நீண்ட நேரம், பயணியர் ரசிக்கின்றனர். நள்ளிரவை எட்டிய நிலையில், ஓட்டல் அறைக்கு திரும்பினோம்.

மறுநாள் பொழுது விடிந்ததும், நியூயார்க் நகரின் பிரபலமான, 'நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்' கட்டடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
அங்கு ஒரு விஷயம், என்னை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள, எருது சிலை அருகே, தள்ளுவண்டி கடைகளில், பல்வேறு பரிசுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், இந்திய நாட்டின் தேசிய கொடியும் தென்பட்டது.
விசாரித்தபோது, சுற்றுலா வரும் இந்தியர்கள், மூவர்ணக் கொடியை அதிகமாக வாங்குவதாக கூறினர். கடல் கடந்து வசிக்கும் நம்மவர்களின் நாட்டுப் பற்றுக்கு, மனதிற்குள் ஒரு சலாம் போட்டு, நகர்ந்தோம்.

அடுத்ததாக, பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, உருக்குலைந்து, மண்ணோடு மண்ணாகிப் போன, 'டூவின் டவர்' எனப்படும், இரட்டை கோபுரம் இருந்த இடத்திற்கு சென்றோம்.
இறங்கியவுடன், ஒரு இனம் புரியாத சோகம், மனதை அழுத்தியது. எண்ணத்திரையில், வானுயர்ந்து நின்ற இரட்டை கோபுரங்களும், அடுத்தடுத்து, அவற்றின் மீது மோதிய விமானங்களும், அதை தொடர்ந்து கம்பீரமாக நின்ற அந்த கட்டடங்கள், தீயில் வெந்த சருகுபோல் சரிந்து விழுந்ததும், நினைவுக்கு வந்தன.
இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில், ஒரு நினைவுச் சின்னம் அமைத்துள்ளனர். அதன் பக்கவாட்டுச் சுவர்களில், பலியான, 3,000 பேரின் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். அங்கு வரும், அமெரிக்க சுற்றுலா பயணியர், மெழுகுவர்த்தி ஏற்றி, பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய, பிரார்த்தனை செய்வதை பார்த்தபோது, மனம் கனத்தது.
நாங்களும் மவுன அஞ்சலி செலுத்தி, அந்த நினைவிடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக வர்த்தக மைய கட்டடத்திற்குள் நுழைந்தோம்.
மொத்தம், 104 மாடிகள் உடைய அந்த கட்டடத்தின், 100வது மாடிக்கு, ஒரு ராட்சத லிப்ட், 49 வினாடிகளில் எங்களை அழைத்து போய் சேர்த்தது. அங்கு, இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் புதிய கட்டடம் கட்டப்பட்டது குறித்து விளக்கம் அளித்தனர். 100வது மாடியில் இருந்து பார்க்கும் போது, நியூயார்க் நகரின் பிரமாண்டம் தெரிந்தது.
ஒரு புறம் கடல், மறுபுறம் விண்ணுக்கு சவால்விடும் வகையிலான கட்டடங்கள். பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது. சிற்றுண்டி சாலை மற்றும் புத்தக சாலை ஆகியவை, அந்த மாடியில் அமைந்துள்ளன.
உலக வர்த்தக மைய கட்டடத்தை அணு அணுவாக ரசித்த பின், அடுத்ததாக, சுதந்திர தேவி சிலையை பார்க்க கிளம்பினோம்.
- தொடரும்.

எஸ். உமாபதி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-மே-201917:50:29 IST Report Abuse
Girija யு எஸ் ரிட்டர்ன் மாஸ்டர் ஆப் ஆல் சப்ஜெக்ட்ஸ், நேம் எனி டாபிக், பதிவுகள் இருக்கும் . அமெரிக்காவில் திருடர்கள் இல்லை, ரொம்ப நல்லவர்கள், நேர்மையானவர்கள், சட்டத்தை மதிப்பவர்கள், தூய்மை, சுகாதாரம், மருத்துவம் , நிறைய சம்பளம் , அரைகுறை மாஸ்டர் டிகிரி படிப்பு படித்த இந்தியர்கள் குறைந்த சம்பளத்தில் வேலை செயகின்றனர் , வயது கடந்த காமம் தவறில்லை, இந்தியாவில் தான் நேர்மை இல்லை , அமெரிக்க பொருளாதாரத்தையும் பூகோளத்தையும் கரைத்துக்குடித்தவர்கள் இங்கு எதற்கு வந்து கொசுக்கடியில் இருக்கவேண்டும் ?. ஒரு வேளை நம்ம வடிவேலு போல நம்ம மண்ணை பிராயசப்பட்டு, நாலு சாதி சனத்தை பாக்கலாமேன்னு வந்திருப்பங்களோ ?
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
27-மே-201912:15:30 IST Report Abuse
pattikkaattaan போக்குவரத்து விதிகள் அரபு நாடுகளிலும் மிக கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன .. ஓட்டுநர் உரிமம் பெறுவது மிக கடினம் , லஞ்சம் கொடுத்து பெற முயன்றால் சிறை .. வேகக்கட்டுப்பாடு கண்காணிக்க சாலைகளில் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன ... குறிப்பிட்ட வேகத்தைவிட அதிகம் சென்றால் , போட்டோ எடுக்கப்பட்டு ,அபராதம் உங்கள் கணக்கில் ஏறிவிடும் .. சாலை சந்திப்புகளில் சிகப்பு விளக்கு எரியும்போது , நிற்காமல் கடந்தால் , அபராதம் மட்டுமல்ல , சிறை தண்டனை உண்டு .. ம்ம் இதெல்லாம் நம்ம நாட்டுல எப்போது நடைமுறைக்கு வரும் ?..
Rate this:
Manian - Chennai,இந்தியா
28-மே-201900:56:32 IST Report Abuse
Manianஅரபு நாடுகள், சிங்கப்பூர், நார்வே-ஸ்வீடன்-டென்மா்க் போன்ற நாடுகள், நமது மாநிலங்களை போல குட்டியானவை. இது போல் இவ்வளவு பரந்த நாடுகள், 130 கோடி ஜனங்கள், ஜனநாயகம் என்ற மாயையுடன் இல்லை. சட்டம்-ஒழுங்குமுறை சுதந்திரம் அடைந்த உடனேயே முதலாவதாக முக்கியதுவம் கொடுக்க படடிருந்தால் இந்த நிலை வராது. காடுகளை வெட்டி, தண்ணிக்கு தவிப்பது போலவே அதுவும். அதோடு அங்கே ஜாதிய இட ஒதுக்கீட்டில் போலீசுக்காரகர், அரசாங்க வியாதிகள் தகுதி அற்றவர்களை நியமிப்பதில்லை. மரண தண்டனை பயம் அங்கே மக்களை நிழல் போல் பின் தொடருகிறது. இதற்க்கு தீர்வு என்னவென்றால் (நடக்காத காரியம்) தேசிய அடிப்படை சட்டங்களை சிறந்த வெளி நாடு வாழ் தேச பக்தி உள்ள இந்தியர்கள் மூலம் திருத்தி எழுத்தப் படவேண்டும். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதாவாது. மேலும், வட கொரியாவுடன், சட்டம் மீறுபவர்களை அடிமைகளா விற்கிறோம், கூடவே உங்கள் பஞ்சம் தீர உணவும் தருகிறோம் என்று உடன் படிக்கை செய்து கொண்டால், அவர்கள் திரும்ப வரவே மாட்டார்கள். இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் அதை பலனை தந்ததாக சரித்திரம் சொல்கிறது....
Rate this:
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
26-மே-201912:11:45 IST Report Abuse
Mohan Sundarrajarao என்றைக்குத்தான் நம் நாட்டில் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பார்களோ, ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X