சவ் சவ்வில், வைட்டமின், 'ஏ, பி, சி, கே' சத்துகள் மற்றும் 'கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், போலேட், புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கால்ஷியம், மாங்கனீசு' போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளையும் நீக்கி, வயிற்றை சுத்தமாக வைத்து கொள்ள உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து, உடலை சமநிலையில் வைக்கிறது. மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுவோர், வாரம் இருமுறை, சவ் சவ்வை உணவில் சேர்த்துக் கொண்டால், பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.
கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால், நீர்ச்சத்து காய்களில் ஒன்றான, சவ் சவ்வை உணவில் சேர்த்துக் கொள்வதால், குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
'சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே...' என, கவலைப்படுவோர், சவ் சவ்வை உணவில் சேர்த்துக் கொண்டால், முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கி விடும்.
தைராய்டு கோளாறால் அவதிப் படுவோருக்கு, சவ் சவ், சிறந்த மருந்து. இதில் உள்ள கால்ஷியம் சத்துகளால், எலும்புகள் வலுப்பெறுகின்றன. எனவே, வளரும் குழந்தைகளுக்கு சவ் சவ் பெரிதும் நன்மை அளிக்கிறது.
வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க, சவ் சவ்வை, சூப் செய்து பருகினால், நல்ல பலன் கிடைக்கும். அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
தொகுப்பு: ஜி.ராஜன்.