மும்பை, அவதானியில், 1925ல் பிறந்தவர், சிற்பி, ராம்வன்ஜி சூதர்; சிறு வயதில் இருந்தே கலை ஆர்வம் கொண்டவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகளை வடித்த இவரது கைகளுக்கு, இன்னும் ஓய்வு அளிக்கவில்லை; 93 வயதான நிலையிலும், இவரது விரல்களில் நடுக்கம் இல்லை.
இப்போது, சிவாஜி, ராமர் மற்றும் அம்பேத்கரின் பெரிய சிலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள எல்லோரா குகை ஓவியங்கள் போன்ற பழம்பெரும் கோவில்களில் சேதமடைந்த சிலைகளை பராமரித்துள்ளார், இந்த பழம்பெரும் சிற்பி.
- ஜோல்னாபையன்.